வீக்கம், வலி நிறைந்துள்ள முகப்பருக்களை ரெண்டே நாளில் அமிழ்த்தி, சருமத்தை பாதுகாக்கும் எளிய பாட்டி வைத்திய முறை உங்களுக்கு தெரியுமா? வீட்டில் இருக்கும் பொருட்களை இப்படி செய்தாலே முகம் பளபளக்குமே!

mugaparu-puthina-poondu
- Advertisement -

இளம் வயதில் தோன்றக்கூடிய இந்த முகப்பருக்கள் நாளடைவில் சரியான கவனிப்பு இல்லை என்றால் பெரிய பிரச்சனையை உண்டாக்கி நம்முடைய சரும அழகையே கெடுத்து விடும். சருமம் ரொம்பவும் மிருதுவானது. இதை கடினமாக்கிக் கொள்ளாமல் எப்படி பழங்கால பாட்டி வைத்தியம் முறைப்படி முகப்பருக்களை அகற்றுவது? கடினமான மற்றும் வீக்கம் உள்ள முகப்பருக்களையும் ரெண்டே நாளில் போக்கக்கூடிய இந்த அற்புத அழகு குறிப்பு பதிவை என்னவென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மிருதுவான, மென்மையான சருமத்தில் முகப்பருக்கள் சின்ன சின்ன துவாரங்கள் வழியே தோன்றுகிறது. முகத்தில் இருக்கும் இந்த துவாரங்கள் வழியே கழிவுகள் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. நீங்கள் செயற்கை முக பூச்சுகளை பயன்படுத்துவதால், இந்த துவாரங்கள் அடைப்பட்டு விடுகிறது. இதனால் கழிவுகள் வெளியேற முடியாமல் முகப்பருக்களாக மாறுகிறது. மேலும் காற்று மாசு காரணமாகவும் உங்களுடைய முக துவாரங்களுக்குள் அழுக்குகள் சென்று அடைத்துக் கொள்கிறது. இதனால் முகப்பருக்கள் தோன்றுகிறது. இந்த முகப்பருக்கள் சிலருக்கு வலியையும், வீக்கத்தையும் ஏற்படுத்திவிடும்.

- Advertisement -

இது போன்ற கடினமான முகப்பருக்களை ரொம்பவும் எளிதாக சரி செய்வதற்கு ஒரு கைப்பிடி அளவிற்கு புதினாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறிய மிக்ஸி ஜாரில் நன்கு கழுவி சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஐந்தாறு பூண்டு பற்களையும் தோல் உரித்து சேருங்கள். பின்னர் பேஸ்ட் போல நைஸ் ஆக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த புதினா மற்றும் பூண்டு பேஸ்ட்டை முகப்பருக்கள் இருக்கும் இடங்களில் நன்கு தடவி உலர விட்டு விட வேண்டும்.

அரை மணி நேரம் நன்கு உலர்ந்ததும் ஈரத் துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் பருவின் மீது கொஞ்சம் வேப்பிலை சாறுடன், மஞ்சள் கலந்து தடவிக் கொள்ளுங்கள். இது பாக்டீரியாக்களை அழித்து, முகப்பருக்களை வேருடன் எடுத்து விடும். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதால் முகப்பருக்களை அப்படியே அமிழ்த்தி விடும்.

- Advertisement -

உங்களுக்கு வடுக்கள் தோன்றாமல், நாளடைவில் பிரச்சனைகளை உண்டாக்காமல், மீண்டும் அந்த இடத்தில் முகப்பருகளை தோன்ற விடாமல் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவும். அந்த காலத்தில் எல்லாம் இது போன்ற முறைகளை தான் கையாண்டனர். வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல், தேன், புதினா சாறு, பூண்டு சாறு, இஞ்சி சாறு போன்றவை எல்லாம் பயன்படுத்துவதால் நம்முடைய சருமம் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும். இதை எந்த அளவுகளில் சேர்க்க வேண்டும் என்பதில் தான் ஒருமுறை இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
இந்த சுருட்டை முடியால் நீங்கள் நினைத்த ஹேர் ஸ்டைல் செய்ய முடியவில்லையா? இதோ உடனடியாக முடி ஸ்மூத்தாக மாற்ற சில டிப்ஸ் இருக்கு. இத நீங்க ட்ரை பண்ணி பாருங்க.

இந்த புதினா பூண்டு பேஸ்ட்டை தொடர்ந்து வாரம் ஒரு முறை நீங்கள் இதே போல தடவி உலர விட வேண்டும். உலர்ந்த பின்பு இது போல வேப்பிலை சாறுடன் மஞ்சள் கலந்து தடவ வேண்டும். மஞ்சள் சுத்தமான மஞ்சளாக இருக்க வேண்டும். விரலி மஞ்சளையும் சேர்க்கலாம், கஸ்தூரி மஞ்சளையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். சாதாரண மஞ்சளை விட கஸ்தூரி மஞ்சள் ரொம்பவே பொலிவுடனும் வைத்துக் கொள்ளும். இதே மாதிரி இயற்கையான முறையில் நீங்களும் உங்களுடைய வீக்கம் நிறைந்துள்ள முகப்பருக்களை வலியில்லாமல் எளிதாக விரட்டி விடுங்கள்.

- Advertisement -