வீட்டு வைத்தியம் மூலம் முகத்தில் தோன்றும் முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும் பயனுள்ள குறிப்புகள்

pimple
- Advertisement -

தற்போது பெரும்பாலான ஆண் மற்றும் பெண்கள் அனுபவிக்கும் ஒரு விஷயம் இந்த முகப்பரு பிரச்சனை தான். முகப்பரு முகத்தில் தோன்றி விட்டால் அது சருமத்தின் அழகையே கெடுத்து விடுகிறது. எப்பொழுதும் சருமத்தை பொலிவற்றதாக மாற்றிவிடுகிறது. இந்த முகப்பருக்கள் வந்துவிட்டால் முகத்தில் அதிகப்படியான வலிகள் இருக்கும். அதிலும் ஒரு சிலர் அதனை அப்படியே விட்டுவிடாமல் நகங்களை வைத்து கிள்ளிவிடுவார்கள். இதன் மூலம் ஒரு முகப்பரு பல இடங்களுக்கும் பரவி அதிகமாக வர ஆரம்பிக்கும். இதனால் இன்னும் அதிகப்படியான பிரச்சினைகள்தான் உண்டாகும். முகப்பரு வந்த பிறகு அது இருந்த இடம் கருப்பாக மாறிவிடும். எனவே முகத்தில் ஆங்காங்கே கருப்பு திட்டுகள் அப்படியே நின்றுவிடும். இவ்வாறு வருகின்ற முகப்பரு மற்றும் கருப்பு திட்டுகளை இருந்த இடம் தெரியாமல் அகற்றி முகத்தை பொலிவாக மாற்ற பலன் தரக்கூடிய இந்த குறிப்புகளை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

முகப்பரு வந்துவிட்டால் போதும் அதனை எப்படி சரி செய்வது, எப்போது இந்த முகப்பரு போகும், என்ற ஆர்வத்தில் பல்வேறு வழிகளை முயற்சிப்போம். ஆனால் ஒரு முறை கூட இந்த முகப்பரு ஏன் வருகிறது என்பதை பற்றி எவரும் யோசிப்பது கிடையாது. இதனை மட்டும் யோசித்து அதற்கான பதிலை தெரிந்து கொண்டால் மறுபடியும் முகப்பரு வருவதை அடியோடு தவிர்த்து விடலாம்.

- Advertisement -

முகத்தில் கொழுப்பு அதிகமாக வெளியேறுதல், கிருமி தொந்தரவு, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு இவ்வாறான காரணங்களினால் தான் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுகிறது. இதற்கு முதல் காரணம் கொழுப்பு சத்துக்கள் அதிகமாக இருக்கும். உணவுப்பொருட்களை உண்பது தான். எனவே இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டால் இந்த பிரச்சனையை முழுவதுமாக தவிர்த்து விட முடியும்.

விட்டமின் ஈ மாத்திரையில் உள்ள ஆக்ஸிஜன் எற்றிகள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை முழுவதுமாக அகற்ற உதவிபுரிகிறது. அது மட்டுமல்லாமல் முகத்தின் நிறத்தையும் அதிகரிக்கிறது. எனவே இந்த விட்டமின் ஈ எண்ணெய் முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு ஃபேஸ் வாஷ் வைத்து முகத்தை கழுவி விட வேண்டும்.

- Advertisement -

எலுமிச்சை பழத்தில் இருக்கும் சிட்ரிக் அமிலம் முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகளை மறைய வைக்க உதவுகிறது. எனவே எலுமிச்சை சாறை முகத்தில் தடவி, 20 நிமிடத்திற்கு அப்படியே உலர விட்டு, அதன் பிறகு குளிர்ந்த நீரை வைத்து முகத்தை கழுவி விட வேண்டும். இதனை நேரம் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் அதாவது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலனை கொடுக்கும்.

ஒரு ஸ்பூன் சந்தன பவுடர், ஒரு ஸ்பூன் கிளிசரின் மற்றும் ஒரு ஸ்பூன் பன்னீர் இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்தக் கலவையை முகத்தில் தடவி நன்றாக உலர வைக்க வேண்டும். அதன் பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் மறைந்து கருப்பு திட்டுகள் அகன்றுவிடும்.

- Advertisement -