30 நாட்கள் மட்டும் இதை தேய்த்தால் போதும், முகத்தில் ஒரு முகப்பரு கூட எட்டிப் பார்க்காது தெரியுமா?

veppilai-pimple
- Advertisement -

இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை முகத்தில் இருக்கும் முகப்பரு தான். அழகிய முகம் இருந்தாலும் அதில் இருக்கும் இந்த பருக்கள் அதனை கெடுத்துக் கொண்டிருக்கும். மேலும் வலியும், வீக்கமும் ஒருபுறம் பாடாய் படுத்தும். முகப்பருக்கள் முகத்தில் அதிகம் இருப்பவர்கள் 30 நாட்களில் இருந்த இடம் தெரியாமல் முகத்தை பட்டுப் போல மின்னும் படி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முகம் பட்டுப் போல ஜொலிக்க முகத்தில் இருக்கும் கிருமிகள் முதலில் வெளியேற வேண்டும். காற்றின் மூலம் பரவும் மாசு, தூசு போன்றவை முக துவாரத்தின் வழியே சென்று முகத்தில் உண்டாக்கக் கூடிய இந்த முகப் பருக்களை எதிர்த்து போராடக்கூடிய ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு. வேப்பிலை மாபெரும் கிருமி நாசினியாக செயல்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இயற்கையாகவே நம் முகத்தை பராமரித்து வந்தால் ஒரு போதும் முகப்பருக்கள் திரும்பவும் தோன்றுவதில்லை.

- Advertisement -

அதிக செலவு செய்து செயற்கையாக முகப்பருக்களை நீக்கக் கூடிய விஷயங்களை செய்வதன் மூலம் தற்காலிக நிவாரணம் கிடைக்குமே தவிர மீண்டும் அந்த இடத்தில் முகப்பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும். இந்த முகப்பருக்களை துன்புறுத்துவதும் மூலம் நாளடைவில் அது வடுவாக மாறி விடும் ஆபத்தும் உண்டு. இத்தகைய பிரச்சனைகளை எளிதாக சரி செய்ய கூடிய அற்புதமான எளிய இயற்கை வழி என்ன?

வேப்பிலையை கொஞ்சம் கை நிறைய எடுத்துக் கொண்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளுங்கள். உரலில் இட்டு அரைத்தாலும், மிக்ஸியில் போட்டு அரைத்தாலும் பரவாயில்லை. ஒரு டீஸ்பூன் அளவிற்கு வேப்பிலை சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வேப்பிலை சாருடன் இயற்கையாக கிடைக்கும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

செடியில் இருந்து பறித்து கற்றாழையை தோல் நீக்கி உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்தெடுத்து நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை கைகளால் நசுக்குவதன் மூலம் பிசுபிசுவென ஒரு ஜெல் பிரியும். இந்த ஜெல்லுடன் வேப்பிலை சாறு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். கற்றாழையில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கும் வரை தான் அதன் வீரியம் இருக்கும். அப்படி இருக்கும் பொழுதே முகம் முழுவதும் நன்கு தடவி கொள்ளுங்கள். பத்து நிமிடம் நன்கு உலர்ந்த பின்பு சாதாரண தண்ணீரால் முகத்தை அலம்பி விடுங்கள்.

வேப்பிலை சாறு மற்றும் கற்றாழை ஜெல் ரெண்டையும் தினமும் நீங்கள் பிரஷ்ஷாக எடுத்து செய்ய வேண்டும். பதப்படுத்துவது என்பது கட்டாயம் கூடாது. பதப்படுத்தினால் அதில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக நம் சருமத்தில் சென்று பணி புரியாது. தொடர்ந்து முப்பது நாட்கள் தினமும் இதே போன்று செய்து பாருங்கள், உங்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையிலான மாற்றம் தெரியும். கொஞ்சம் சிரமப்பட்டு இயற்கையான வழியில் இதை செய்து பாருங்கள், ஒரு முகப்பரு கூட உங்கள் முகத்தை இனி நெருங்க கூட செய்யாது. சக்தி வாய்ந்த இந்த இரண்டு பொருட்களை இப்படியும் பயன்படுத்தி பயன் பெறலாமே.

- Advertisement -