தலை முடியை அடிக்கடி சரி செய்வீர்களா? முகப்பரு ஏற்பட உங்களுக்கு ஏற்படும் இந்த 6 விஷயங்கள் தான் காரணமாம்! பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைய இதைத் தான் செய்ய வேண்டும்.

ponnankanni-keerai-pimple
- Advertisement -

ஒருவருடைய தன்னம்பிக்கைக்கு காரணமாக இருப்பது அவருடைய அழகிய தோற்றம் தான். இந்த முக அழகைக் கெடுத்துக் கொண்டிருக்கும் பருக்களுக்கு குட்பை சொல்வதற்கு முன்பு, அது எதனால் ஏற்படுகிறது? என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். சீல், கரும்புள்ளி, வெண்புள்ளி, வலியுடன் கூடிய பருக்கள் என்று விதவிதமான வடிவங்களில் தோன்றும் நம்முடைய முகப்பருக்களுக்கு காரணமாக இருக்கும் ஆறு விஷயங்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

காரணம் 1:
வழிவழியாக பரம்பரையாக வரக்கூடிய மரபணு மாற்றத்தின் காரணமாக உண்டாகும் பருக்கள்! உங்களுடைய அப்பா, அம்மாவுக்கு இருந்தால் உங்களுக்கும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. உடல் வெப்பம், ஜீன் மாற்றம் போன்றவைகள் பரு உண்டாவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. எனவே ஒரு நாளைக்கு சராசரியாக 8 டம்ளர் தண்ணீரை கட்டாயம் பருகுவதை வாடிக்கையாக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

காரணம் 2:
காற்றின் மூலம் பரவக்கூடிய பாக்டீரியா, தூசு, மாசு போன்றவற்றால் முகத்தில் இருக்கும் துவாரங்கள் வழியாக முகப்பருக்கள் தோன்றக் கூடும். ஒரு நாளைக்கு நான்கு முறையாவது அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி பாருங்கள், முகப்பரு வருவது குறைந்துவிடும். இரவு தூங்க செல்லும் முன்பு உங்களுடைய தலையணையின் மீது ஒரு டவல் போட்டு கொண்டு தூங்குங்கள். உங்கள் தலையில் பொடுகு தொந்தரவு இருந்தால், அது தலையணையின் மூலமாக உங்கள் முகத்திற்கு முகப்பருக்களை ஏற்படுத்தக்கூடும்.

காரணம் 3:
டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஹார்மோன், கோளாறு செய்யும் பொழுது நம் முகத்தில் அதிகப்படியான முகப்பருக்கள் தோன்றுகிறது. கர்ப்ப காலம், மாதவிடாய், பூப்பெய்தும் சமயம் போன்ற சமயத்தில் இந்த ஹார்மோன் மாற்றம் காரணமாகத் தான் பெண்களுக்கு முகப் பருக்கள் தோன்றுகிறது.

- Advertisement -

காரணம் 4:
ஒருவர் நீண்ட நேரம் தூங்குவதால் உடலின் வெப்பம் அதிகரிக்கிறது. வெப்பம் அதிகரித்தால் முகப்பரு தோன்றும். சரியான காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருக்கும் பொழுது வியர்வையின் காரணமாகவும் முகத்தில் முகப்பரு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. நீங்கள் அடிக்கடி உங்கள் தலை முடியை சரி செய்து கொள்வீர்கள் என்றால், உங்களுடைய முகத்தில் நகங்கள் கீறி விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு, இதன் மூலமாகவும் உங்கள் முகத்தில் முகப்பருக்கள் தோன்ற அதிக வாய்ப்புகள் உண்டு.

காரணம் 5:
நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் காரணமாகவும் முகத்தில் முகப்பருக்கள் அதிகம் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக பித்தம் உடலில் அதிகரித்தால் முகப்பரு தோன்றும். ஐஸ்கிரீம், சாக்லேட், காஃபி, எண்ணெய் பதார்த்தங்கள் போன்றவை கன்னாபின்னாவென்று வரைமுறை இல்லாமல் சாப்பிடுபவர்களுக்கு முகப்பருக்கள் நிச்சயம் தோன்றும். இதிலிருந்து விடுபடுவதற்கு பொன்னாங்கண்ணிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் முளைகட்டிய பயறு, பால், தயிர் போன்றவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலமாக முகப்பரு கட்டுப்படும்.

காரணம் 6:
முகத்தைப் பொறுத்தவரை எப்பொழுதும் இயற்கையான பொருட்களைக் கொண்டு பராமரிக்க வேண்டும். அதனை விடுத்து வேதிப்பொருள் நிறைந்துள்ள அழகு சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு பருக்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. முகப்பரு தொந்தரவு அதிகம் இருப்பவர்கள் பயத்தம் மாவுடன், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து தினமும் பூசி வர நாளடைவில் எப்பேற்பட்ட பருக்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

- Advertisement -