ஒரே சிலையை சிவனாகவும், விஷ்ணுவாகவும், புத்தராகவும் வழிபடும் கோவில்

Mukthinath-4

மனிதர்களை மற்ற உயிர்களிடமிருந்து வேறு படுத்தி காட்டுவது ஆறறிவு. அந்த மனிதர்களிலும் ஞானிகள் மற்றும் மகான்களை வேறுபடுத்தி காட்டுவது, எந்நேரமும் இறைவனை குறித்த அவர்களின் தேடலாகும். இப்படி இறைவனை குறித்து தியானத்திலும், தேடல்களிலும் இருப்பவர்கள் மட்டுமே முக்தி நிலையை அடைய முடியும் என்பது ஒரு பொதுவான எண்ணமாகும். ஆனால் கடின பயணத்தை மேற்கொண்டு வந்து வழிபடும் பக்தர்களுக்கு முக்தி அளிக்கும் முக்திநாத் கோவிலை பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

Mukthinath temple

உயரமான இமய மலைத்தொடர்களைக் கொண்ட நேபாள நாட்டின், மஸ்தங் பகுதியில் 3500 மீட்டர் உயரமான மலைச்சிகரத்தில் அமைந்துள்ளது இந்த முக்திநாத் கோவில். முற்காலத்தில் இந்த முக்திநாத் கோவில் “சாளக்கிராம ஷேத்திரம்” என அழைக்கப்பட்டது. ஏனெனில் இந்த முக்திநாத் கோவிலுக்கு சற்று தொலைவில் ஓடும் “கண்டகி ஆற்றில்” இயற்கையாக நிறைந்திருக்கும் சாளக்கிராம கற்கள் கிடக்கின்ற காரணத்தால் தான். இந்த சாளக்ராம கற்கள் விஷ்ணுவின் அம்சம் கொண்டதாக வைணவர்களால் போற்றப்படுகிறது.”108 வைணவ திவ்ய தேசங்களில்” இது “106” ஆறாவது திவ்ய தேசமாக கருத படுகிறது. மற்றும் வைணவர்கள் புனிதமாக கருதும் ஏழு புண்ணிய வைணவ கோவில்களில் இதுவும் ஒரு முக்கிய கோவிலாக கருதப்படுகிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் பாரதத்திற்கு வெளியில் இருப்பது இந்த ஒரு கோவில் தான். ஆழ்வர்களில் திருமங்கை ஆழ்வார் இந்த முக்திநாத் கோவிலுக்கு வரும் முயற்சியில் ஈடுபட்டு, அது முடியாமல் போனதால் இக்கோவில் இருக்கும் ஊருக்கு சற்று அருகில் இருந்த வாறே இந்த முக்திநாதரின் தரிசனம் பெற்று மங்களாசாசனம் பாடி அருளினார் திருமங்கை ஆழ்வார். இக்கோவிலில் இருக்கும் முக்திநாதரின் சிலை ஒரு மனிதனின் உயரத்தில் இருக்கிறது. மேலும் இந்த சிலையின் பெரும்பாலான பகுதி தூய தங்கத்தால் செய்ய பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் சுற்று சுவரில் 108 பசுமாட்டின் தலை கொண்ட சிலைகளின் வாயிலிருந்து தீர்த்தம் கொட்டுகின்றன. இதில் குளித்து முக்திநாதரை வழிபட்டால் அவருக்கு முக்தி கிட்டும் என்பது வைணவர்களின் நம்பிக்கை.

Mukthinath temple

சிவனை நாயகனாக கொண்டு வழிபடும் சைவர்களும் இந்த முக்திநாத் கோவிலை 51 சக்திபீடங்களில் ஒன்றாக கருதுகின்றனர். இந்த முக்திநாதரை சைவர்கள் பைரவராக கருதி வழிபடுகின்றனர். இந்த நேபாளத்தில் தான் மகாஞானி புத்தர் பிறந்தார். அந்த புத்த மதத்தின் உபகடவுளான “அவலோகிதேஸ்வரர்” இந்த முக்திநாதராக இருப்பதாகவும், பத்மசாம்பவேஸ்வர என்ற புத்த துறவி இங்கு தியானம் செய்வததாலும் இந்த கோவிலை புனித இடமாக கருதுகின்றனர் புத்த மதத்தினர்.

இதையும் படிக்கலாமே:
கந்த புராணத்தோடு தொடர்புடைய நார்வே, பின்லாந்து நாட்டு மக்கள் பற்றி தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், ஆன்மீக அதிசயங்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்

English Overview:
Here we described Muktinath temple in Temple. The special of this temple is Lord Shiva, Lord Vishnu and Budha are being worshipped in the single statue.