முளைக்கீரை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

mulai-keerai

தாவரங்களின் நிறம் பச்சை. இந்த பச்சை நிறம் தான் தாவரங்களை உணவாக கொள்ளும் உயிர்களுக்கு மிகுந்த நன்மைகளை தருகிறது என்பது அறிவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. சாப்பிடும் கீரை வகைகள் பல இந்த பச்சை நிறம் காரணமாக ஏற்படும் சத்துகள் அதிகம் கொண்டதாகும். அப்படிப்பட்ட ஒரு கீரை தான் முளைக்கீரை. இந்த முளைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

mulai keerai

முளைக்கீரை பயன்கள்

மூளை வளர்ச்சி
முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிரம்பியுள்ளது. மேலும் இதில் தாமிரச் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது நமது உடலில் ஓடும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவதோடு, இதிலுள்ள மணிச்சத்து மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. எனவே இக்கீரையை வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பது நல்லது.

காய்ச்சல், ஜுரம்

சீதோஷண மாற்றங்கள், கிருமி தொற்று போன்ற காரணங்களால் ஜுரம், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. முளைக் கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, சில மிளகாய் வற்றல் கிள்ளிப்போட்டு, தண்ணீர் ஊற்றி அவித்து அந்த சாற்றை வடித்து, சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சல், ஜுரங்கள் போன்றவை குணமாகும்.

mulai keerai

- Advertisement -

மூலம்

மூலம் எனப்படும் ஆசனவாய் பகுதியில் ஏற்படும் புடைப்பு, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த பாதிப்புகளை உண்டாக்குகிறது. இந்த மூல வியாதியை நீக்க முளைக் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு சேர்த்து அதனுடன் சிறுபருப்பு சேர்த்துக் சமைத்துச் சாப்பிடுவதால் உள் மூலம், பௌத்திரக் கட்டி மூலம், ரத்த மூலம் போன்ற பலவகையான மூல நோய்கள் குணமாகும்.

பசியின்மை

ஒவ்வொரு வேளை உணவு உண்டு முடித்ததும் அடுத்த வேளை உணவுக்காக பசி உணர்வு வயிற்றில் ஏற்பட வேண்டும். பசியின்மை ஏற்பட்டிருப்பவர்கள் முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்ததுக் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறைபாடு தீர்ந்து நல்ல பசி உண்டாக்கும்.

mulai keerai

ருசியின்மை

உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் சமயம் சிலருக்கு எந்த ஒரு உணவு சாப்பிட்டாலும் நாக்கில் ருசியின்மை உண்டாகும். இந்த பிரச்சனை ஏற்பட்டவர்கள் முளைக் கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, அவித்துச் சாப்பிட்டு வந்தால் நாக்கில் ஏற்படும் ருசி அறிய முடியாத குறைபாடு நீங்கும்.

ஊட்டச்சத்து

உடல் வளர்ச்சிக்கு தேவையான பல சத்துகள் முளைக்கீரை கொண்டுள்ளது. முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தேவையான வைட்டமின்கள், தாது சத்துகள் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். தங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என நினைப்பவர்கள் அடிக்கடி குழந்தைகளுக்கு முளைக்கீரை சமைத்து சாப்பிட கொடுக்க வேண்டும்.

Mulai-keerai

பித்தம்

உடலில் இருக்கின்ற பித்தத்தின் அளவு அதிகரித்தாலும், குறைந்தாலும் உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. முளைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தித் தூள் செய்து சாப்பிட்டால் பித்தம் அளவு சமசீராகி பித்தம் குறைபாடுகளால் ஏற்படும் மயக்கம் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை சீராகும்.

வயிற்று புண்கள்

காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், அடிக்கடி உணவு சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் வயிறு மற்றும் குடல்களில் புண்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. இப்படி வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தீர முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் ஏற்பட்டிருக்கும் புண்கள் விரைவில் குணமாகும்.

mulai keerai

முகப்பொலிவு

முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். அதிலும் பெண்கள் முகப்பொலிவாக இருக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் அடிக்கடி தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப் பொலிவு ஏற்படும்.

தோல் வியாதிகள்

தோல் வியாதிகள் ஏற்பட்டால் பலருக்கும் அது மிகுந்த சங்கடத்தை தருகின்றது. சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் ஏற்பட்டவர்கள் முளைக்கீரையை உண்பதினால் குணமடையும். மேலும் தோலில் ஏற்படும் வறட்சி தன்மையை ஈரப்பதத்தையும், பளபளப்பான தன்மையையும் தருகிறது.

இதையும் படிக்கலாமே:
முள்ளங்கி ஜூஸ் பயன்கள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mulai keerai benefits in Tamil. It is also called as Mulai keerai payangal in Tamil or Mulai keerai uses in Tamil or Mulai keerai in Tamil.