முள்ளங்கியை வைத்து, ஒரு முறை இப்படிச் சட்னி அரைத்து பாருங்கள்! முள்ளங்கியில் வீசக்கூடிய வாடையே தெரியாமல் சுவையாக இருக்கும்.

mullangi-chutney2

நம்முடைய உடலுக்கு அதிகப்படியான நீர்ச் சத்தையும், நார்ச் சத்தையும் கொடுக்கக் கூடிய இந்த முள்ளங்கியை வைத்து, நம்முடைய வீடுகளில் அதிகபட்சமாக சாம்பார் தான் வைப்போம். ஆனால், இதே முள்ளங்கியை வைத்து முள்ளங்கி துவையலை, சுவையாக எப்படி அரைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதே பதிவின் இறுதியில் முள்ளங்கியை வைத்து சுலபமான முறையில் கார பொரியல் எப்படி செய்வது என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

Mullangi-keerai

முள்ளங்கி துவையல் செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 2 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும், கடுகு – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை –  இரண்டு கொத்து, வரமிளகாய் – 5 அல்லது 6, புளி – சிறிய எலுமிச்சை பழம் அளவு, பூண்டு பல் – 10 தோல் உரித்தது, சின்ன வெங்காயம் – 10 பல் தோல் உரித்து, பொடியாக நறுக்கியது முள்ளங்கி தோல் சீவி பொடியாக நறுக்கியது – 2(வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு, முள்ளங்கி சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.), மல்லித்தழை – இரண்டு கைப்பிடி அளவு(இறக்குவதற்கு 30 வினாடிகளுக்கு முன்பாக மல்லித்தழை போட வேண்டும்).

மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஒரு பாத்திரத்தில் இந்த பொருட்களை எல்லாம் போட்டு, நன்றாக ஆற வைத்த பின்பு, மிக்ஸியில் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, துவையல் பதத்திற்கு அரைத்து, சூடான சாப்பாட்டில், ஒரு சொட்டு நெய் விட்டு இந்தத் துவையல் போட்டு சாப்பிடலாம், அல்லது கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து, கடுகு கறிவேப்பிலை, மிளகாய், பெருங்காயம், தாளித்துக் கொட்டி, இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்னியில் முள்ளங்கியின் ஒருமாதிரியாக வீசும் வாடை என்பது கட்டாயம் வராது.

mullangi-chutney1

பீர்க்கங்காய் தோல் துவையல் செய்முறை:
முள்ளங்கி துவையல் போலவே (முள்ளங்கி துவையலுக்கு மேலே என்னென்ன பொருட்களை செய்திருக்கின்றோம்? அதை எல்லாவற்றையும் இந்த பீர்க்கங்காய் தோல் துவையலிலும் சேர்க்க வேண்டும்.), இதே முறையை பின்பற்றி, முள்ளங்கிக்கு பதிலாக, பீர்க்கங்காய் தோல் உள்ளது அல்லவா? அந்த தோலை கொஞ்சம் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, முள்ளங்கிக்கு பதிலாக போட்டு, கூடவே ஒரு தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்தீர்கள், என்றால் அதன் சுவை இன்னும் சூப்பராக இருக்கும். பீர்க்கங்காய் தோலில் அதிக அளவு சத்து உள்ளது. அதை கீழே போட்டு வீணாக்கி விடாதீர்கள். இப்படி துவையல் செய்து சாப்பிடுங்கள். மூட்டு வலி சீக்கிரம் சரியாகிவிடும்.

- Advertisement -

சூப்பரான, சுலபமான முள்ளங்கி பொரியல் செய்முறை:
ஒரு கடாயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், போட்டு சிவக்க விட வேண்டும். அடுத்ததாக ஒரு பெரிய அளவு, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

mullangi-chutney

அந்த வெங்காயம் நன்றாக சிவந்து சுருங்கும், அளவிற்கு வதங்கிவிட வேண்டும். அதன் பின்பு பொடியாக வெட்டி வைத்திருக்கும் முள்ளங்கியைச் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு மிளகாய்த்தூள், தேவையான அளவு தனியாத்தூள் போட்டு, கால் ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து, மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வேக விட வேண்டும்.

perkangai-thool

முள்ளங்கி முக்கால்வாசி நன்றாக வெந்தவுடன், மூடியைத் திறந்து, கைவிடாமல் நன்றாக சிவக்க வைத்து, பொரியலில் இருக்கும் எண்ணெய் தனியாக பிரிந்து வரும் அளவிற்கு வதக்கி, சாப்பிட்டீர்கள் என்றால், சுவையான காரசாரமான முள்ளங்கி பொரியல் தயார். அதாவது, ஜல்லி கரண்டியின் மூலம் அந்த முள்ளங்கியை, நன்றாக கொத்தி கொத்தி பொடிமாஸ் செய்துவிட வேண்டும். சுடச்சுட சாதத்தில், வெறும் முள்ளங்கி பொரியலைப் போட்டு, பிசைந்து சாப்பிட்டாலே போதும். கூட ஒரு வத்தல் வைத்துக் கொள்ளுங்கள். சாப்பாடு சூப்பரா காலியாகிவிடும்.

mullangi-poriyal

பின்குறிப்பு: இந்த முள்ளங்கி பொரியலுக்கு உப்பு, மிளகாய் தூள் காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கவேண்டும். இந்தப் பொறியில் ஊற்றக்கூடிய எண்ணெய், பிரிந்து வரும் அளவிற்கு, எண்ணையின் அளவு கொஞ்சம் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்! சுவையான, சுலபமான, ஆரோகியமான, இந்த மூன்று குறிப்புகளும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும், நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
நூக்கல் பொரியலை 5 நிமிஷத்துல இப்படி செஞ்சி பாருங்க! இதை அடிக்கடி சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு கட்டுப்படுமாம்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.