நூக்கல் பொரியலை 5 நிமிஷத்துல இப்படி செஞ்சி பாருங்க! இதை அடிக்கடி சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு கட்டுப்படுமாம்.

nookal-poriyal
- Advertisement -

காய்கறிகளில் பெரும்பாலான காய்கறிகள் நாம் சமைத்து சாப்பிடுவதே இல்லை. இன்றைய தாய்மார்கள் பலரும் நாட்டு காய்கறிகளை விரும்பி தேர்ந்தெடுத்து சமைத்து பார்ப்பதில்லை. அந்த வகையில் இந்த நூக்கல் காய்கறியும் ஒன்று. இந்த பெயரையே கேள்வி பட்டது இல்லை என்று சொன்னாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் இதில் இருக்கும் சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவில் நன்மைகளை வாரி வழங்குபவையாக இருக்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த நூக்கல் பொரியலை 5 நிமிஷத்துல சட்டுனு செஞ்சிரலாம். அது எப்டினு இந்த பதிவுல இனி தொடர்ந்து பார்ப்போம்.

nookal1

நூக்கல் காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகளை அடிக்கடி உட்கொள்வதால் உடலின் உஷ்ண தன்மை குறையும். நூக்கல் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது. குடல் நாளங்களை பலமடையச் செய்யும் மிகச்சிறந்த காயாக நூக்கல் விளங்குகிறது. ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் இந்த காய்கறியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நலம் பெறுவார்கள்.

- Advertisement -

நூக்கல் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், நூக்கல் – 2, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன், வெங்காயம் – 1, தேங்காய் துருவல் – 1/2 கப், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1, கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு – தேவையான அளவிற்கு.

nookal

நூக்கல் பொரியல் செய்முறை விளக்கம்:
முதலில் நூக்கல் தோல் நீக்கி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். முள்ளங்கி போன்று நூக்கல் மேல் வளர்ந்திருக்கும் இலைகளை தூக்கி எறிய வேண்டாம். அதைப் பொரியல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். பின்னர் அடுப்பைப் பற்ற வைத்து அடி கனமான பாத்திரம் அல்லது வாணலியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளிக்க வேண்டும்.

- Advertisement -

தாளிப்பதற்கு முறையே கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை போட்டு தாளித்தம் செய்து கொள்ளவும். அதன் பின் வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள நூக்கலை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கி மூடி வைத்து விடவும். அந்த சூட்டிலேயே நூக்கல் அருமையாக வெந்து வரும். 2 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் நூக்கல் வெந்து தண்ணீர் வற்றி இருக்கும். அந்த சமயத்தில் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து இரண்டு பிரட்டு பிரட்டி விட்டு நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கினால் அற்புதமான, அருமையான சுவையில் நூக்கல் பொரியல் தயார்.

nookal-poriyal1

பிள்ளை பெற்ற தாய்மார்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பொரியலை சாப்பிட்டால் தாய்பால் அதிகம் சுரக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். புரதச் சத்தும் வைட்டமின்களும் அதிகம் நிறைந்துள்ள நூக்கல் பொரியல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முற்றிய நூக்கலை விட பிஞ்சு நூக்கல் வாங்குவது நல்லது. இதுவரை செய்து பார்க்காதவர்கள் இனி அடிக்கடி உணவில் சேர்த்து நலம் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
ஹாப்பிமா போட்டாலும் ‘வெஜ் ஃப்ரைட் ரைஸ்’ செய்ய வரவில்லையா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க ஹோட்டல்ல சாப்பிட்ட மாதிரியே இருக்கும்!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -