முகத்தை அழகாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்வதை இன்றைய கால பெண்கள் மட்டும் செய்யவில்லை. அந்த காலத்தில் கூட அழகு தொடர்பான விஷயங்களில் அதிக அக்கறையுடனே செயல் பட்டு வந்திருக்கிறார்கள். அதற்கென அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தும் இயற்கையானவையே. அப்படி ஒரு இயற்கையான பொருளை பற்றி தான் இந்த அழகு குறிப்பு பதிவில் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.
முகத்துடன் முழு உடலையும் அழகாக்க இன்று பல்வேறு வகையான அழகு சாதனங்களை பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் இவை கெமிக்கல் கலந்தவையாகத் தான் இருக்கிறது. இதனால் உடலுக்கு தேவையில்லாத பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த பதிவில் கிளியோபாட்ரா காலத்தில் பயன் படுத்திய அழகு சாதன பொருலான முல்தானி மெட்டியை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த முல்தானி மெட்டி மண் வகையை சார்ந்தது தான். நம்முடைய பாரம்பரிய வழக்கத்தில் மண் வைத்து பல இயற்கையான சிகிச்சை முறைகள் உள்ளது. அப்படி இயற்கையான முறையில் அழகு தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் எது மிகவும் நல்லது. இந்த முல்தானி மெட்டியை முகத்திற்கு மட்டுமல்லாது முழு உடலுக்குமே பயன்படுத்தலாம்.
தலைமுடி ஆரோக்கியத்திற்கு முல்தானி மெட்டி
முல்தானி மெட்டியுடன் தயிர், வெட்டி வேர் ஊற வைத்து தண்ணீரை சேர்த்து குழைத்து கொள்ளுங்கள். பொடுகு அதிகம் உள்ளவர்கள் இத்துடன் கொஞ்சம் எலுமிச்சை சாறும் கலந்து கொள்ளலாம். முதலில் தலையில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து பத்து நிமிடம் மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு இந்த பேக்கை தலைக்கு தேய்த்து ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முடியை அலசி விடுங்கள். இதனால் தலையில் இருக்கும் இறந்த செல்கள் முழுவதுமாக நீங்குவதுடன், தலைமுடியும் ஆரோக்கியமாக ஷைனிங்காக வளரும்.
முகத்தை அழகாக முல்தானி மெட்டி
முகத்திற்கு இதை பேக்காக போட காய்ச்சிய பாலுடன் முல்தானி மெட்டி கலந்து போடலாம். இது வறண்ட சருமத்திற்கு உகந்த பேக். உங்களுடைய முகம் ஆயில் ஸ்கின்னாக இருந்தால் இதில் வெள்ளரி சாறு, ரோஸ் வாட்டர் போன்றவற்றை கலந்து தேய்க்கலாம். இதனால் முகம் வெள்ளையாவதுவுடன், சீக்கிரத்தில் வயதான தோற்றம் வருவதை தடுக்கும்.
முழு உடல் உடலுக்கு முல்தானி மெட்டி
முழு உடலையும் தங்கம் போல் மின்ன வைக்க முல்தானி அற்புதமான மருந்து என்றே சொல்லலாம். இதற்கு முல்தானி மெட்டி எவ்வளவு எடுக்கிறீர்களோ அதை கடலை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கொஞ்சம் கஸ்தூரி மஞ்சள் போட்டு இதை தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
நீங்கள் குளிப்பதற்கு முன்பு முழு உடம்பிலும் எண்ணெய் தேய்த்து சிறிது நேரம் அப்படியே விட்டு விடுங்கள் இதற்கு தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் பாதாம் ஆயில் ஆலிவ் ஆயில் எப்படி எந்த எண்ணெய் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பத்து நிமிடம் கழித்து நீங்கள் தயார் செய்த இந்த பேக்கை உடல் முழுவதும் தேய்த்து லேசாக மசாஜ் செய்து உடனே குளித்து விடுங்கள் பேக் போட்ட பிறகு உடம்பில் அதிக நேரம் ஊற விட வேண்டாம்.
இதையும் படிக்கலாமே: 50 வயதிலும் 20 வயது போல் இளமையான சருமத்தை பெற இந்த ஃபேஸ் பேக்கை உபயோகப்படுத்தி பாருங்கள்.
வாரம் ஒரு முறை இப்படி குளிப்பதன் மூலம் உடலில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி தோல் மினுமினுக்காக மாறுவதுடன் தோல் சுருக்கம் தோல் வியாதி போன்றவை எதுவும் வராமல் இந்த முல்தானி மெட்டி தடுக்கிறது. இந்த முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.