- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamil50 வயதிலும் 20 வயது போல் இளமையான சருமத்தை பெற இந்த ஃபேஸ் பேக்கை உபயோகப்படுத்தி...

50 வயதிலும் 20 வயது போல் இளமையான சருமத்தை பெற இந்த ஃபேஸ் பேக்கை உபயோகப்படுத்தி பாருங்கள்.

- Advertisement -

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்களின் தோற்றம் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பொதுவாக ஒருவருடைய வயதை கேட்டோம் என்றால் இரண்டு வயதாவது குறைத்து தான் கூறுவார்கள். காரணம் தாங்கள் இளமையாக இருப்பதாக நினைப்பதே. அவ்வாறு செய்வதால் இளமை ஏற்படாது. தோற்றத்திலும், எண்ணத்திலும் இளமையாக இருக்க வேண்டும்.

அவ்வாறு நம்முடைய முகம் என்றும் இளமையாக இருப்பதற்கு எந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள். நம் உள்ளத்தில் நாம் என்றும் தூய்மையான எண்ணங்களை நினைத்து, பிறருக்கு தீங்கு செய்யாமல் நன்மையையே செய்தோம் என்றால் நம் மனமும் நாமும் என்றும் அழகுடனும், இளமையாகவும் இருப்போம். எண்ணங்களுக்கு எந்த அளவுக்கு சக்திகள் இருக்கின்றதோ அதே அளவுக்கு நாம் உபயோகிக்கும் பொருட்களிலும் சக்திகள் இருக்கின்றன.

அந்த வகையில் இன்று நாம் சில பொருட்களை உபயோகப்படுத்தி நம்முடைய முகத்தில் ஃபேஸ் பேக் போடுவதால் என்றும் இளமையுடன் இருக்கலாம். இதற்கு நமக்கு தேவைப்படும் பொருட்கள் வேப்பிலை பொடி, கற்றாழை ஜெல், தக்காளி மற்றும் அரிசி மாவு.

- Advertisement -

இளமையாக இருக்க அழகு குறிப்பு

ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் வேப்பிலை பொடியை சேர்த்துக் கொள்ளலாம். நாமே வீட்டில் வேப்பிலையை நிழலில் காயவைத்து பொடியாக அரைத்தும் வைத்துக் கொள்ளலாம். இயலாதவர்கள் நாட்டு மருந்து கடையில் வேப்பிலை பொடியை வாங்கி உபயோகப்படுத்தலாம். அடுத்ததாக நாம் அதில் அரை ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும். இதுவும் நம் வீட்டில் இருக்கும் தூய்மையான கற்றாழை இருந்து மடல்களை எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது.

இயலாதவர்கள் கடைகளில் விற்கும் கெமிக்கல் இல்லாத கற்றாழை ஜெல்லை உபயோகப்படுத்தலாம். மூன்றாவதாக நாம் இதில் சேர்க்கப்படுவது அரை தக்காளி பழம். கடைசியாக இதில் அரை ஸ்பூன் அரிசிமாவை சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக பேஸ்ட் போல கிளற வேண்டும். தேவை ஏற்பட்டால் அதில் சிறிது பன்னீரை சேர்த்து நாம் பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பேஸ்டை முகத்தில் தடவுவதற்கு முன்பாக முகத்தை நன்றாக சுத்தமான தண்ணீரை வைத்து கழுவி விட்டு பிறகு பூச வேண்டும். 15 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். வேப்பிலை நம்முடைய தோலில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தையும் நீக்க உதவுகிறது. மேலும் கரும்புள்ளிகளை மறைய வைக்கிறது. கற்றாழை ஜெல் நம் தோலில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தை தக்க வைக்கும். மேலும் ஒரு வித மினுமினுப்பை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே: உடல் முழுவதும் தங்கம் போல தகதகன்னு மின்ன தினமும் இதில் ஒரு ஸ்பூன் மட்டும் போட்டு தேய்த்து குளித்தால் போதும். அழகே பார்த்து பொறாமைப்படும் பேரழகியாக மாறி விடுவீர்கள்.

தக்காளி இயற்கையான ஒரு ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆக பயன்படுகிறது. அரிசி மாவு இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இவை அனைத்தும் ஒன்றாக சேரும் பொழுது நம் முகத்தில் இளமை என்றும் நிலைத்திருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. மிகவும் எளிமையான இந்த பொருட்களை நாமும் வாரத்தில் ஒருமுறை ஒரு நாளாவது பயன்படுத்தி, நம்முடைய இளமையை தக்க வைத்து கொள்வோம்.

சற்று முன்