நீங்களே செய்யக்கூடிய இந்த ஒரு லிக்விட் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். கடினமான பல வேலைகளையும் சுலபமாகச் செய்திடலாம்.

soap4
- Advertisement -

நமது தாத்தா பாட்டி காலத்திலெல்லாம் கெமிக்கல் பொருட்களான சோப்பு, ஷாம்பூ போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இயற்கையான பொருட்களை வைத்தே தங்களது வேலையை செய்து கொண்டனர். ஆனால் இப்பொழுது பார்த்தோமென்றால் துணி துவைக்க, பாத்திரம் கழுவ, பட்டுப் புடவை துவைக்க, வீடு கழுவ, பாத்ரூம் கழுவ என்று தனித்தனி லிக்விட்கள் வந்துவிட்டன. இத்தனை தேவைகளுக்கும் இவ்வளவு லிக்விட்கள் வாங்க வேண்டுமென்றால் இவற்றை வீட்டில் அடுக்கி வைப்பதற்கே இடம் இருக்காது. அது மட்டுமல்லாமல் இவற்றிற்காக பணம் செலவு செய்வதும் வீண்விரயம் தான். எனவே பணத்தையும் மிச்சப்படுத்தி அனைத்து வேலைகளையும் சுலபமாக செய்ய இந்த ஒரு ஹோம்மேட் லிக்விட் போதும். இதனை எப்படி தயார் செய்யவது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

soap1

தேவையான பொருட்கள்:
பூந்திக்கொட்டை – 10, பன்னீர் ரோஜா – 10.

- Advertisement -

செய்முறை:
சீயக்காய் தூள் அரைக்கும்பொழுது பயன்படுத்தும் பூந்திக்கொட்டையை தான் இந்த லிக்விட் செய்வதற்காக பயன்படுத்த போகிறோம். முதலில் ஒரு பாத்திரத்தில் இந்த பத்து பூந்திக் கொட்டைகளை எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து 8 லிருந்து 10 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பூந்திக்கொட்டை நன்றாக ஊறிய பின்னர் கைகளால் நன்றாக கசக்கி விட வேண்டும்.

பின்னர் பூந்திக் கொட்டை இருக்கும் பாத்திரத்தை அப்படியே அடுப்பின் மீது வைத்து அதனுடன் ரோஜா இதழ்களையும் சேர்த்து மிதமான தீயில் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இவை நன்றாக கொதித்து பூந்திக்கொட்டை வெந்ததும் அடுப்பை அனைத்து இவற்றை ஆற வைக்க வேண்டும். இவை நன்றாக ஆறியதும் கைகளை பயன்படுத்தி இந்த பூந்திக் கொட்டைகளை பிசைய ஆரம்பித்தால் நுரை பொங்கி வர ஆரம்பிக்கும். இவ்வாறு ஐந்து நிமிடங்கள் செய்துவிட்டு இந்த லிக்விடை வடிகட்டி ஒரு டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இவை ஒரு மாதம் வரையிலும் நன்றாக இருக்கும்.

- Advertisement -

soap

பயன்கள்:
1. இந்த லிக்விடிலிருந்து சிறிதளவு எடுத்து தண்ணீரில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இதில் வீட்டில் பயன்படுத்தும் கால்மிதிகளை ஒரு மணி நேரம் ஊர வைக்க வேண்டும். அதன்பின் இவற்றை பிரஷ் ஏதும் பயன்படுத்தி தேய்க்காமல் கைகளால் லேசாக கசக்கி, அலசி காய வைத்தாலே போதும். அழுக்குகள் அனைத்தும் சுத்தமாகி கால்மிதி பளிச்சென்று மாறிவிடும்.

2. பட்டுப் புடவைகளில் எண்ணெய் கறை படிந்துவிட்டால் இந்த லிக்விடை தண்ணீரில் கலந்து பட்டுப்புடவையை 5 நிமிடம் ஊற வைத்து, அதன்பின் அலசி எடுத்தால் போதும். எண்ணெய் கறை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். பட்டுப் புடவையும் எந்த ஒரு சேதமும் அடையாமல் நன்றாக இருக்கும்.

- Advertisement -

silk-saree

3. வீட்டில் இருக்கும் தண்ணீர் குழாய்கள் கறை படிந்திருந்தால் இந்த லிக்விடை பயன்படுத்தி நன்றாக தேய்த்து கல்வினால் கரைகள் சுத்தமாக அகன்றுவிடும். அதுமட்டுமல்லாமல் வீடு கழுவ இந்த லிக்விடை பயன்படுத்தும் பொழுது வீடு பளிச்சென்று சுத்தமாகி வாசனையுடன் இருக்கும்.

4. பாத்திரம் துலக்க இந்த லிக்விடில் சிறிதளவு தண்ணீர் கலந்து கொண்டு பாத்திரம் தேய்த்தால் பாத்திரங்கள் பளிச்சென்று மாறிவிடும்.

zink

5. அதேபோல் தண்ணீரில் சிறிதளவு லிக்விடை கலந்து துணிகளை ஊற வைத்து, அதன் பிறகு துவைத்தோம் என்றால் சுலபமாக கறைகள் நீங்கி துணிகள் சுத்தமாகிவிடும்.

- Advertisement -