நாம் ஒவ்வொருவருக்கும் ஏழு ஜென்மங்கள் இருக்கிறது என்று புராணங்கள் கூறுகின்றன. ஒரு ஜென்மத்தில் நாம் செய்யக்கூடிய பாவமானது மற்றொரு ஜென்மத்தில் தொடர்ந்து அந்த பாவத்திற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை என்பது உண்டாகும். இதே போல் கடைசியாக வரக்கூடிய ஏழாவது ஜென்மம் என்பது மறுபிறப்பு அற்றதாக திகழக்கூடியது. அதனால் இந்த ஏழாவது ஜென்மத்தில் இதுவரை நாம் செய்த முன் ஜென்ம பாவங்களும் கர்ம வினைகளுக்கும் சேர்த்து வைத்து ஏழாவது ஜென்மத்தில் கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்தை படுவோம் என்றும் கூறப்படுகிறது. இப்படி முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவத்தால் ஏற்பட்ட கர்ம வினைகளை நீக்குவதற்காக தான் தான தர்மங்களை நாம் செய்கிறோம். அதிலும் குறிப்பாக சித்திரை மாதத்தில் எந்த தானத்தை செய்தால் நம்முடைய முன் ஜென்ம பாவங்கள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முன் ஜென்ம பாவம் தீர பரிகாரம்
ஒருவருக்கு முன் ஜென்ம பாவம் என்பது இருந்தால் அவர் தொட்ட காரியம் எதிலும் வெற்றிகள் என்பதே இருக்காது. சுப காரியத்தில் தடைகள் உண்டாகிக் கொண்டே இருக்கும். மற்றவர்களுக்கு எளிதாக கிடைக்கக் கூடிய விஷயம் கூட அவர்களுக்கு கடினமாக கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். என்னதான் நல்லது செய்தாலும் அது வெளியே தெரியாமல் மோசமானவர்கள், கெட்டவர்கள் என்ற பெயரையே சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலை கூட ஏற்படும். நிம்மதி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் மன உளைச்சலில் ஆளாகி இருப்பார்கள். இவர்கள் அனைவரும் இப்படி கஷ்டத்தை அனுபவிப்பதற்கு அவர்களுடைய முன் ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவமே காரணமாக திகழ்கிறது. இந்த முன் ஜென்ம பாவம்தான் கர்ம வினையாக வந்து இந்த ஜென்மத்தில் நமக்கு கஷ்டங்களை தருகிறது.
அப்படிப்பட்ட இந்த கஷ்டங்களை தவிர்ப்பதற்கு நம்முடைய முன்னோர்கள் தானங்களை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். நம்மால் இயன்ற தானங்களை பிறருக்கு செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகளும் பாவங்களும் குறையும் என்றும் கூறப்படுகிறது. அப்படி நம்முடைய கர்ம வினைகள் முற்றிலும் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சித்திரை மாதத்தில் சில பொருட்களை தானமாக தர வேண்டும்.
சித்திரை மாதம் என்பது கோடை காலம். உஷ்ணம் நிறைந்த காலமாக திகழ்கிறது. அதனால் சித்திரை மாதத்தில் நம்மால் இயன்ற நாளில் மோர் தானம் செய்ய வேண்டும். அதேபோல் இனிப்பு கலந்த பானகத்தையும் தானமாக தரவேண்டும். இவை இரண்டும் உஷ்ணத்தை தணிக்க கூடியது. இதை அறிந்துபவர்களுக்கு உடல் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி ஏற்படும். இப்படி யாரெல்லாம் அதைக் குடித்து குளிர்ச்சி அடைகிறார்களோ அதன் மூலம் நம்முடைய பாவங்களும் குறைந்து நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.
இதோடு சேர்த்து இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் காலை உணவு வாங்கித் தர வேண்டும். இப்படி தருவதன் மூலமும் நம்முடைய கர்ம வினைகள் என்பது நீங்கும். நமக்கு தெரிந்த நபர்களுக்கு வாங்கித் தருவதன் மூலம் எந்த வித பலனும் இருக்காது. நமக்கு முன்பின் அறிமுகம் இல்லாமல் சாப்பாட்டிற்கு கஷ்டப்படக் கூடியவர்களுக்கு காலை உணவை வாங்கித் தருவதன் மூலம் நம்முடைய முன் ஜென்ம பாவம் என்பது நீங்கும். இந்த தானத்தை சித்திரை மாதம் முழுவதும் செய்யலாம். ஒரு நாள் மட்டும் தான் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் வரக்கூடிய நாளில் செய்தால் கூடுதல் சிறப்பு கிடைக்கும். தங்களால் இயலும் பட்சத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எப்படியாவது இந்த தானத்தை செய்தால் கண்டிப்பான முறையில் முன்ஜென்ம பாவம் குறையும்.
இதையும் படிக்கலாமே:தமிழ் புத்தாண்டு தானங்கள்
தமிழ் வருடத்தின் முதல் மாதமாக திகழக்கூடிய சித்திரை மாதத்தில் இந்த தானங்களை செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் முற்றிலும் நீங்கும். முழுமனதோடும் முழு மகிழ்ச்சியோடும் தானத்தை மனமுவந்து செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.