முனீஸ்வரன் கோவில் எலுமிச்சை பழத்திற்கு இத்தனை மகிமைகள் உண்டா? இது தெரிந்தால் இனி எப்போதும் முனீஸ்வரன் கோவில் எலுமிச்சையை தவறவிட மாட்டீர்கள்.

Muneeswaran
- Advertisement -

நம்மை பாதுகாக்க பல தெய்வங்கள் இருந்தாலும், காவல் தெய்வங்களுக்கென்று தனி சிறப்பு உள்ளது. அப்படியான ஒரு காவல் தெய்வம் தான் முனீஸ்வரரின். முனீஸ்வரனை குலதெய்வமாக கொண்டவர்களும் பல பேர் உண்டு. இவர் இல்லாத கிராமமே கிடையாது என்று கூறும் அளவிற்க்கு தமிழகம் முழுவதும் முனீஸ்வரனுக்கு ஆலயம் அதிகம் உண்டு. இப்படியான முனீஸ்வரனை எப்படி வழிபடலாம் என்பது குறித்தும், அவரை வழிபடுவதன் மூலம் நமக்கு ஏற்படும் நல்லவை குறித்தும், அவரின் எலுமிச்சை மகிமை குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம்.

ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள் மூன்று பேர். விக்னேஸ்வரர், சனீஸ்வரர் மற்றும் முனீஸ்வரர். ஆதலால் தான் மற்ற காவல் தெய்வங்களை விட முனீஸ்வரருக்கு சக்தி அதிகம் என்று நம்பப்படுகிறது. தன்னை நம்பி வந்தவர்களுக்கு அனைத்து நன்மைகளையும் செய்யும் இவரை பஞ்சமுனி என்றும் சப்தமுனி என்றும் வேறு சில பெயர்களிலும் அழைப்பதுண்டு.

- Advertisement -

நம் முன்னோர்கள் காலத்தில் குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லை என்றாலும் அல்லது எதையாவது பார்த்து பயந்து இருந்தாலும் முனீஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் சென்று மந்திரத்து கையிலோ அல்லது கழுத்திலோ கயிறு கட்டும் வழக்கம் இருந்தது, இன்றளவும் சில கிராமங்களில் இந்த வழக்கம் வருகிறது. அப்படி செய்வதன் மூலம் அவர்களின் பயம் நீங்கி உடல் அனாதைகள் தீரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

மேலும் வீட்டில் ஏதாவது செய்வினை கோளாறுகள் இருந்தால், முனீஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்கு மந்திரத்து கொடுக்கும் விபூதியை வாங்கி வீட்டிற்கு வந்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் வாங்கிவந்த விபூதியையும், மல்லிகை பூவையும் கலந்து வீட்டில் தெளித்தால், அனைத்து கோளாறுகளும் நீங்கும் என்று இன்றளவும் நம்பப்படுகிறது. வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியும் அணுகாமல் இருப்பதற்கு, முனீஸ்வரர் கோவிலில் மந்திரத்து கொடுக்கப்படும் கயிறை வீட்டு வாசலில் முன்பு கட்டுவது ஒரு வழக்கம்.

- Advertisement -

முனீஸ்வரன் கோவில் எலுமிச்சை மகிமை:
முனீஸ்வரரின் ஆயுதமாக அவர் கையில் அரிவாள் இருக்கிறது. அந்த அரிவாளின் நுனியில் எலுமிச்சம் பழம் இருக்கும். இந்த எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து உடல் நலம் குறைவாக இருப்பவர்களுக்கு சாறு பிழிந்து கொடுப்பதன் மூலம் அவர்களின் உடல்நலம் ஆரோக்கியம் அடையும். மேலும் அந்த பழத்தை வீட்டிற்கு வாங்கி வந்து, சரிபாதியாக வெட்டி அதில் குங்குமத்தை தடவி வாசலின் இருபுறமும் வைத்தால் நமக்கு வரக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

எந்த வேலைக்கும் செல்லாமல் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பவர்கள், முனீஸ்வரன் கோவிலில் ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி அதை தலையை சுற்றி கீழே போட்டு இடது காலால் மிதிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்மை பிடித்திருக்கும் தரித்திரம் நீங்கி, நேர்மறை ஆற்றல் அதிகரிக்க துவங்கும்.

- Advertisement -

உங்கள் கைகளாலேயே 108 எலுமிச்சைகளை மாலையாக கோர்த்து அதை முனீஸ்வரனுக்கு சாத்துவதன் மூலம் உங்கள் மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறும். உங்களை அழிக்க வேண்டும் என்று நினைத்த எதிரிகள் கூட உங்களை பார்த்து விலகி போவார்கள். இந்த எலுமிச்சை மாலையை கோர்க்கும்போது உங்கள் வேண்டுதல் என்னவோ அதை கூறிக்கொண்டே கோர்க்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முனீஸ்வரரை வழிபட உகந்த நாட்களாக கருதப்படுவது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள். மேலும் முனீஸ்வரருக்கு வெட்டிவேர் மாலை, எழுமிச்சை மாலை சாற்றினால் அது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. முனீஸ்வரரை மனதார நாம் நினைத்து நம் வீட்டில் தினமும் அவருக்கென்று ஒரு தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். மேலும் அவருக்கு கற்கண்டு, திராட்சை மற்றும் அன்னம் போன்றவற்றை நெய்வேத்தியம் செய்யலாம்.

முனீஸ்வரரை தினமும் வணங்குவதன் மூலம் நமக்கு இருக்கும் பயம் நீங்கிவிடும். வினைகள் அகன்று விடும். கண் திருஷ்டிகள் ஏற்படாது. எதிரிகளின் தொல்லை அகலும். காவல் தெய்வம் என்று சொன்னாலே அவர் ஊரை காப்பவராகவும், வீட்டை காப்பவராகவும், குடும்பத்தை காப்பவராகவும், நம்மை காப்பவராகவும் இருப்பார். அப்படிப்பட்ட முனீஸ்வரனை வணங்கி நலம் பெறுவோம்.

- Advertisement -