வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கி நல்ல மகிழ்ச்சியும் முன்னேற்றமும் சந்தோஷமும் உண்டாக வேண்டும் என்பதுதான் பலரது ஆசையாக இருக்கும். அப்படிப்பட்ட ஆசையை நிறைவேற்றுவதற்குரிய அற்புதமான விரத நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் சஷ்டி விரதம். எப்படி தேவர்களின் கஷ்டத்தை போக்கி மகிழ்ச்சியை முருகப்பெருமான் அருளினாரோ அதேபோல் நம்முடைய கஷ்டங்களையும் தீர்த்து நமக்குத் தேவையானவற்றை அருள் புரிவார் என்ற ஒரு நம்பிக்கையும் நிலவி வருகிறது. அப்படிப்பட்ட சஷ்டியின் முதல் நாள் அன்று செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சஷ்டி முதல் நாள் பரிகாரம்
சஷ்டி விரதத்தை மேற்கொண்டு முருகப்பெருமானின் அருளை பரிபூரணமாக பெறவேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் தங்களுடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அப்படி நினைக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் கந்தசஷ்டி திருவிழாவில் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். முருகப்பெருமானை பல விதங்களில் வழிபாடு செய்தாலும் முருகப்பெருமானுக்குரிய சஷ்டி தினத்தில் வழிபாடு செய்யும்பொழுது அதற்குரிய பலன் சற்று அதிகமாகவே கிடைக்கும் என்று கூட கூறலாம். இதேபோல் தான் சஷ்டி விரத சமயத்தில் முருகப்பெருமானை நினைத்து நாம் செய்யக்கூடிய பரிகாரத்திற்கும் அதிக அளவில் பலன் இருக்கிறது. அந்த வகையில் சஷ்டியின் முதல் நாள் அன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை சஷ்டியின் முதல் நாளான அக்டோபர் மாதம் 22ஆம் தேதி புதன்கிழமை அன்று செய்ய வேண்டும். முருகப்பெருமானின் வழிபாடு என்றாலேயே மாலை நேரத்தில் செய்யக்கூடிய வழிபாடு தான் நினைவிற்கு வரும். மாலை நேரத்தில் நாம் முருகப்பெருமானை பல விதங்களில் வழிபாடு செய்வோம். எந்த விதத்தில் வழிபாடு செய்தாலும் இந்த ஒரு பரிகாரத்தையும் அதனுடன் சேர்த்து செய்தால் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இந்த பரிகாரத்தை நாம் மாலை முருக வழிபாட்டை செய்வதற்கு முன்பாகவே தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு சுத்தமான ஒரு டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டம்ளர் முழுவதும் குடிக்கின்ற சுத்தமான தண்ணீரை பிடித்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதனுடன் சந்தன தூலையும் ஒரு சிட்டிகை அளவு சேர்த்து இரண்டு மூன்று துளசி இலைகளையும் அதன்மேல் போட்டு முருகப்பெருமானுக்கு முன்பாக வைத்து விட வேண்டும். உங்களுடைய வழிபாடு அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக இந்த தண்ணீரை எடுத்து முருகனை மனதார நினைத்துக் கொண்டு வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முருகப்பெருமானின் பரிபூரணமான அருளால் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகுவதோடு நல்ல முன்னேற்றமும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினையை தீர்க்கும் கந்த சஷ்டி பரிகாரம்
முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முருகப்பெருமானுடைய வழிபாட்டையும் அதேசமயம் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தையும் செய்வதன் மூலம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தடைகளும் விலகும், நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.