விதி! உங்களை வாழ்க்கையில் முன்னேற விடாமல், அதல பாதாளத்தில் தள்ளிக்கொண்டே இருக்கின்றதா? அந்த விதியையும் வென்று முன்னேற, சக்திவாய்ந்த ‘ஒரு வரி, ஒரு வழி’ உங்களுக்காக!

வாழ்க்கையில் எல்லோருக்கும் உள்ள ஒரு பிரச்சனை இது. ‘ஜான் ஏறினால் முழம் சறுக்கும்’ என்று சொல்லுவார்கள். வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்து, முட்டிமோதி, போராடி ஏதாவது ஒரு வேலையை தொடங்குவோம். முதல் முறை அதில் வெற்றியையும் கண்டிருப்போம். வெற்றியில் ஒரு படி ஏறி ஆகிவிட்டது. இரண்டாவது படி ஏறி விட்டோம் என்றால், அடுத்தடுத்த பணிகளை சுலபமாய் கடந்து விடலாம் என்ற சூழ்நிலை இருக்கும். விதி நம்மை அந்த இரண்டாவது படியை ஏறவே வைக்காது. முதல் படியையும் தாண்டி கீழே விழுந்தால் பரவாயில்லை. சில சமயம் நம்மை அந்த விதி அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும்.

sad

இந்த சூழ்நிலையில் ஒரு மனிதனுடைய மனது எப்படி இருக்கும்? ஒரு முறை முயற்சி செய்யும் போது, தைரியமாக இருப்பான். இரண்டாவது முறை முயற்சி செய்தும் போதும் ஒரு வகையான தைரியம் இருக்கும். போகப் போக மனம் நொந்து, வெந்து வாடி வதங்கிப் போய் விடுவான். அடுத்த முறை முயற்சி செய்வதற்கு பயம் வந்துவிடும். தோற்றுவிடுவோமோ என்று தான்! ஒருகட்டத்தில் அவன் முயற்சியை கைவிட்டு இருப்பான்.

இவ்வளவு பிரச்சனையை சந்திக்கும் அவனுக்கு வாழ்க்கையில் முன்னேற தகுதி இருக்கும். அறிவாற்றல் இருக்கும். விடாமுயற்சி இருக்கும். ஆனாலும் தான் எண்ணிய வேலையை முடிக்க முடியாது. வெற்றிக்கனியை பறிக்க முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு குருவும், சந்திரனும் ஜாதக கட்டத்தில் சாதகமாக இருக்காததும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு காரணம்.

guru bagwan

சரி, ஆன்மீக ரீதியாக இதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா என்ற தேடுபவர்களுக்கு, சொல்லப்பட்டுள்ள ஒரு மந்திரத்தைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆனால், இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்கள் மன குழப்பம் இல்லாமல் இருக்கவேண்டும். உங்களுடைய வாழ்க்கையில், நீங்கள் எதை நோக்கி செல்லப் போகிறீர்கள் என்பதை முதலில் தீர்மானித்து விட்டு, அதைப் பற்றிய தெளிவான முடிவை எடுத்துவிட்டு, அதன் பின்பு இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்குங்கள். மனக் குழப்பத்தோடு இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு பலன் கிடைக்காது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

மனக் குழப்பத்தை தீர்க்கும் நேரம் என்பது, அதிகாலை வேளையான பிரம்ம முகூர்த்த வேளை தான். முதலில் காலையில் எழுந்து மனதை அமைதியாக வைத்துக் கொண்டு கண்களை மூடி எம்பெருமானை நினைத்து தியானம் செய்துவிட்டு, அதன் பின்பு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் உங்களுக்கான காலை எழுந்ததும் உச்சரிக்க வேண்டிய மந்திரம் இதோ!

shivan

ஓம் ஐம் வசி கஜா!

இதோடு சேர்த்து இரவு தூங்குவதற்கு முன்பாக இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ஓம் சந்திரபிரபாவ மதி மஸ்த்து!

thiruchedur

5 லிருந்து 11 முறை இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். உங்களால் எப்போது முடியுமோ அப்போது, முடிந்தால் விசாக நட்சத்திரத்தன்று திருச்செந்தூர் முருகனை சென்று தரிசனம் செய்து வந்தால், உங்களுக்கு வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி உண்டு. தோல்வியை தூக்கி எறியக் கூடிய சக்தி திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தால் நமக்கு கிடைக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
குபேர சாஸ்திரம் கூறும் தீபாவளி திருநாள் பரிகாரம்! இதை செய்தால் அடுத்த தீபாவளிக்குள் நீங்களும் குபேரன் ஆகிவிடலாம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.