முன்னேற்றியில் மட்டும் இப்போதுதான் வெள்ளை முடி எட்டிப் பார்க்கிறதா? நிறைய வெள்ளை முடி வராமல் இருக்கவும், அதை அப்படியே உடனடியாக சரி செய்யவும் இந்த 1 பொருள் போதும்.

hair19
- Advertisement -

நிறைய பேருக்கு ஆரம்பத்தில் வெள்ளை முடி இந்த முன் நெற்றியில், காதோரங்களில் இருக்கக்கூடிய முடியில் தான் வரும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தலை முழுவதும் நரை முடி வர தொடங்கிவிடும். இது ஒரு பக்கம் இருக்க, இந்த வெள்ளை முடிகளை மறைப்பதற்கு இயற்கையாக ஹென்னா அவுரி பொடி போன்ற பொருட்களை தலையில் போட்டாலும், அந்த வெள்ளை முடி செம்பட்டை முடியாக மாறுமே தவிர, நல்ல கருப்பு நிறத்திற்கு மாறாது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சரி செய்யவும், ஆரம்பத்தில் வரக்கூடிய வெள்ளை முடியை அப்படியே தடுத்து நிறுத்தவும், வெள்ளை முடி வருவதை தள்ளி போடவும் ஒரு சூப்பரான ஹேர் பேக் ரெமடி இருக்கிறது. அதை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கருஞ்சீரகம் நம்மில் எல்லோருக்குமே தெரியும். இது முடியை கருப்பாக அதிவேகமாக வளர செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள். இந்த கருஞ்சீரகத்தை வைத்து தான் இன்றைக்கான ஹேர் டை நாம் பார்க்கப் போகின்றோம். கருஞ்சீரகம், அவுரி இலை பொடி, மருதாணி இலை பொடி, அதாவது இதை ஹென்னா பொடி என்றும் சொல்லுவோம் அல்லவா. இந்த மூன்று பொருட்கள் தான் நமக்கு தேவை. இது மூன்றுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அல்லது பெரிய பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் கிடைக்கும். வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. அதில் 4 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகத்தை போட்டு, தண்ணீர் ஊற்றி விழுது போல அறைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் நைசாக இதை அரைக்க முடியாது. கொஞ்சம் கொரகொரப்பாக தான் இருக்கும். கருஞ்சீரகத்தை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விட்டு அதன் பின்பு அரைக்கும் போது ஓரளவுக்கு கொஞ்சம் நைசாக நமக்கு அரைபட்டு கிடைக்கும். அரைத்த கருஞ்சீரகத்தை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். (உங்களுக்கு கருஞ்சீரகம் பொடியாக கிடைத்தால் இன்னும் சிறப்பு. அந்த பொடியை அப்படியே பயன்படுத்தலாம்.)

இந்த கருஞ்சீரகத்தோடு அவுரி இலை பொடி 5 டேபிள் ஸ்பூன், ஹென்னா பொடி 3 டேபிள் ஸ்பூன் போட்டு, நன்றாக கலந்து ஒரு மணி நேரம் அப்படியே ஊற வைத்து விடுங்கள். அதன் பின்பு இதை எடுத்து உங்களுடைய தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளலாம். வெள்ளை முடி இருக்கும் இடத்தில் கொஞ்சம் கவனம் எடுத்து அப்ளை செய்யுங்கள். அதிகபட்சம் இரண்டு மணி நேரம் இந்த பேக் உங்கள் தலையில் இருக்கலாம். உங்களுக்கு தலைபாரம் வரும் என்றால் ஒரு மணி நேரம் இந்த பேக்கை தலையில் வைத்து விட்டு வெறும் தண்ணீரை போட்டு தலையை அலசுங்கள்.

- Advertisement -

இந்த பேக்கை போட்ட அன்றே ஷாம்பூ சீயக்காய் போட்டு தலையை கசக்க கூடாது. இந்த பேக் போடும்போது உங்களுடைய முடியின் நிறம் லேசாக கருப்பாக மாறி இருக்கும். அடுத்த இரண்டு நாட்களில் கொஞ்சம் அடர் கருப்பு உங்களுடைய முடிக்கு கிடைத்திருக்கும். இரண்டு நாள் கழித்து ஷாம்பு சீயக்காய் போடும்போது, அந்த கருப்பு வண்ணம் அவ்வளவு எளிதில் உங்கள் முடியை விட்டு நீங்காது.  (வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை தலையில் போட்டால் கூட போதும்.)

தொடர்ந்து வருடக் கணக்கில் இந்த பேக்கை நீங்கள் பயன்படுத்திக் கொண்டே வந்தால் உங்களுடைய தலைமுடி நிரந்தரமாக கருப்பாக இருக்கும். எந்த ஒரு பக்க விளைவுகளும் வராது. ஆனால் ட்ரையாக இருக்கக்கூடிய இந்த அவுரி இலை பொடி, ஹென்னா பொடியை தலையில் போடும்போது தலை முடி வறட்சி ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே தலையில் எப்போதும் எண்ணெய் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் ஒரு நாள் நல்லெண்ணெய் தேய்த்து ஆயில் பாத் எடுப்பது ரொம்ப ரொம்ப தலைமுடிக்கு நல்லது.

- Advertisement -