சொன்னா நம்பவே மாட்டீங்க! இந்த பொருட்கள் வீட்டில் இருந்தாலும், நம்முடைய வீட்டிற்கு கஷ்டம் வந்தே தீரும். செல்வம் தங்காது.

நம்முடைய வீட்டில் எதிர்மறை அதிர்வுகளை தரக்கூடிய பொருட்களின் பட்டியலில், எத்தனையோ பொருட்கள் இருந்தாலும், அந்த வரிசையில் முதல் இடத்தை பிடிக்கக் கூடிய ஒரு முக்கியமான பொருளை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை எத்தனை பேர் நம்புவீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் உங்களுடைய வீட்டில் தீராத பணகஷ்டம் இருந்து வந்தால், தீராத பிரச்சினைகள் இருந்தால், இந்த ஒரு விஷயத்தை மாற்றி பாருங்கள். இந்த ஒரு விஷயத்தை மாற்றுவதன் மூலம் பல காலங்களாக உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் தீருவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

sarry

இதன் மூலம் மட்டும் தான் பிரச்சனை என்று சொல்ல வரவில்லை. இதன் மூலமும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. ஒரு சிலரது வீட்டில் பாரம்பரியமாக, பரம்பரை பரம்பரையாக, சில பொருட்களை வைத்திருப்பார்கள். அதாவது 3 தலைமுறைக்கு முன் உள்ளவர்கள் பயன்படுத்திய பொருட்கள் கை மாறி வரும்போது, அந்தப் பொருள் கூட சில சமயம் நமக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.

அதாவது, நம்முடைய அப்பாவிற்கு, தாத்தா பயன்படுத்திய பொருளை பரம்பரை பரம்பரையாக வீட்டில் வைத்து பாதுகாக்கலாம். எடுத்துக்காட்டாக, நான்கு தலைமுறைக்கு முன்பாக வாழ்ந்தவர் பயன்படுத்திய செருப்பு, அல்லது அவர் பயன்படுத்திய பேக், துணி, எதுவாக இருந்தாலும் சரி, அதை நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சில சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.

berow

சில பேர் வீடுகளில் பழைய மரத்தால் செய்யப்பட்ட பீரோ, இரும்பினால் செய்யப்பட்ட பீரோ, பீரோவுக்கு போடும் சாவி, இப்படிப்பட்ட பொருட்கள் எல்லாம் இருக்கும். கேட்டால், நான்கு தலைமுறைக்கு முந்தையது என்று சொல்லுவார்கள். முடிந்தால் இதையெல்லாம் மாற்றிவிட்டு புதிய பொருளை வாங்கிக் கொள்ளலாம்.

- Advertisement -

முடிந்தவரை இதை உங்களுடைய வீட்டிலிருந்து அப்புறப்படுத்துவது தான் நல்லது. இதேபோல் உங்களுடைய அம்மா அப்பா அல்லது நெருங்கிய உறவினர்கள் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் உடைகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை எடுத்துக்கொண்டு போய் வெற்றிலை பாக்கோடு சேர்த்து, ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து ஓடும் ஆற்றில் விட்டு விடுவதுதான் முறை. அதை உங்களுடைய வீட்டில் வைத்துப் பாதுகாப்பது அவ்வளவு சரியல்ல.

river

இல்லை, எங்களுடைய அப்பா அம்மாவின் துணியை பொக்கிஷமாக நாங்கள் பத்திரப்படுத்தி வைத்துள்ளோம். நாங்கள் நன்றாகத்தான் வாழ்கின்றோம் என்று சொல்லுபவர்களுக்காக இந்த பதிவு அல்ல. உங்களுடைய நேரம் சரியில்லை. உங்களுடைய வீட்டில் தொடர் கஷ்டம், உங்கள் வீட்டு குடும்பத் தலைவனுக்கு சரியான வேலை இல்லை, சரியான வருமானம் இல்லை, வீட்டில் வறுமை. இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் உங்களுடைய வீட்டில், இப்படிப்பட்ட பொருட்கள் இருந்தால், அதை அப்புறப்படுத்தி பாருங்கள். சில சமயம் இந்த தவறுகளை திருத்திக் கொண்டால் கூட, உங்கள் வாழ்க்கையில் மாற்றம் வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது.

crying-sad

சாஸ்திரம் சொல்லியிருப்பதை தான் நாம் இந்த பதிவின் மூலம் உங்களுக்காக தெரியப்படுத்துகின்றோம். தவிர, உங்களுக்கு என்று ஒரு விருப்பம் இருக்கும். எங்களுடைய முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் எங்கள் வீட்டில்தான் இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளலாம். யாரையும் வற்புறுத்தவில்லை.

gold-lakshmi

இன்னும் சில பேருக்கு ஒரு கேள்வி மனதில் எழும். நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்த சொத்து பத்துகள், தங்க நகைகளை மட்டும் நம் வைத்துக் கொள்ளலாமா? என்று! நூறு வருடங்கள் கடந்த வீடாக இருந்தாலும் சரி, அந்த வீட்டை இடித்துவிட்டு அதற்கான கடைகாலை புதியதாக போட வேண்டும் என்று சொல்லுவார்கள். தங்கத்துக்கு எந்த ஒரு தோஷமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இருப்பினும் தங்கம் கூட, சில பேருக்கு புதையலாக கிடைக்கும். இந்த புதையல்கூட சிலருக்கு அதிர்ஷ்டத்தை தரும். சிலருக்கு துரதிஷ்டத்தைத் தரும். பழைய தங்கத்தையும் மாற்றிக்கொள்வது நல்லது.) நம்பிக்கை உள்ளவர்கள் இந்த குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டு பூஜை அறை இப்படி இருந்தால், ஸ்ரீ தேவி வெளியேறி விடுவாள், மூதேவி குடியேறி விடுவாள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.