உங்கள் வீட்டு பூஜை அறை இப்படி இருந்தால், ஸ்ரீ தேவி வெளியேறி விடுவாள், மூதேவி குடியேறி விடுவாள்.

poojai-room
- Advertisement -

ஸ்ரீதேவி என்று சொல்லப்படும் மகாலட்சுமி, நம் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என்றாலும், ஸ்ரீதேவிக்கு பதிலாக மூதேவி வந்து நம் வீட்டில் குடி கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றாலும், நம்முடைய பூஜை அறையை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றியும், என்னென்ன விஷயங்களை நம் வீட்டு பூஜை அறையில் தவறியும் கூட செய்யக் கூடாது என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்தப் பதிவின் இறுதியில், பூஜை அறையில் இருக்கும், அஷ்டலக்ஷ்மி திருவுருவப் படத்தையும், மகாலட்சுமியின் திருவுருவப் படத்தையும், எந்த திசையில் வைத்தால் வீட்டில் பணப் பிரச்சனை தீரும் என்பதையும் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

poojai

உங்களுடைய வீட்டில் பூஜை அறை தனியாக இருந்தாலும் சரி, பூஜை அறை வீட்டு அலமாரியில் ஒரு பகுதியில் இருந்தாலும் சரி, பூஜை படங்களை வைத்திருக்கும் இடங்களை சுற்றி தேவையற்ற பொருட்களை நிரப்பி வைக்க கூடாது. குறிப்பாக சில பேர் சமையலறையிலேயே பூஜை அறையை வைத்திருப்பார்கள். சில பேர் ஹாலில் பூஜை அறையை வைத்திருப்பார்கள். இடவசதி இல்லாத காரணத்தினால் இப்படி பூஜை அறையை அமைத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.

- Advertisement -

ஆனால், பூஜை அலமாரியின் மேல் பக்கத்திலும் கீழ் பக்கத்திலும் தேவையற்ற பொருட்களை அடைத்து வைப்பதன் மூலம் வீட்டில் மூதேவி குடியேறி விடுவாள். முடிந்தவரை நீங்கள் பயன்படுத்தும் உபயோகப்படுத்தும் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய, வீட்டுக்கு பயன்படுத்தக் கூடிய சில பொருட்களை பூஜை புகைப்படங்கள் வைத்திருக்கும் அலமாரியை சுற்றி வைக்க வேண்டும்.

pooja-room

இதோடு சேர்த்து அந்த பொருட்களை மாதத்திற்கு ஒரு முறையாவது எடுத்து சுத்தப்படுத்தி தூசு அடையாமல் வைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. (குறிப்பாக கிழிந்த ஆடைகளின் துணி மூட்டை, பயன்படுத்தாத உடைசல் பொருட்கள், கிழிந்த நோட்டு புத்தகங்கள், மொத்தத்தில் நமக்கு தேவை இல்லை என்று குப்பையில் போட வேண்டிய பொருட்களை, பூஜை அலமாரியை சுற்றி வைக்கக்கூடாது.)

- Advertisement -

உங்கள் வீட்டு பூஜை அறையை பார்த்த உடனேயே பார்ப்பவர்கள் கையெடுத்து கும்பிடும் அளவிற்கு லட்சுமிகடாட்சம் பொருந்தியதாக இருக்க வேண்டுமே. தவிர குப்பைகளுக்கு நடுவே பூஜை அலமாரியை வைத்திருக்கவே கூடாது. இதோடு சேர்த்து நிறைய பேர் தினம்தோறும் சுவாமி படங்களுக்கு புதியதாக பூ போட முடியாத காரணத்தினால், வாடிய பூக்களை அப்படியே விட்டு விட்டு தீபம் ஏற்றும் பழக்கத்தை வைத்து இருக்கிறார்கள்.

pooja-room0

குளிர் காலங்களில் நாம் சுவாமிக்கு சூட்டிய பூ, சீக்கிரத்தில் வாடாது. இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் அப்படியே இருக்கும். பூ வாடாமல் இருக்கும் பட்சத்தில் அப்படியே தீபம் ஏற்றலாம். வெயில் காலங்களில் போட்ட பூக்கள் மறுதினமே வாடிவிடும். சுவாமிக்கு பூ இல்லாமல் கூட விளக்கு ஏற்றலாமே தவிர, வாடிய பூக்களை வைத்து தீபம் ஏற்றக்கூடாது. வாடிய பூக்களை பூஜை அறையிலிருந்து உடனே அப்புறப்படுத்துங்கள்.

- Advertisement -

deepam

விளக்கில் போட்டிருக்கும் திரி, கரி பிடித்து உருண்டை உருண்டைகளாக இருந்தால், அந்தத் திரியை மாற்றிவிட வேண்டும். பழைய திரியில் தீபம் ஏற்றலாமா ஏற்றக் கூடாதா என்ற சந்தேகத்தை விடுத்து விட்டு, கரி பிடித்த, தீபச்சுடர் சரியாக எரியாத திரியில், கட்டாயம் தீபம் ஏற்றவே கூடாது. முடிந்தவரை புதிய திரியில் தீபமேற்றுவது நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொண்டுவரும்.

pooja-room1

இன்னும் சில பேர் செய்யும் தவறு சுவாமி படங்களுக்கு மஞ்சள் குங்குமப் பொட்டை இட முடியாமல், ஸ்டிக்கர் பொட்டு வைப்பது. வாரம் ஒரு முறை கட்டாயம் சுவாமி படங்களை துடைத்து மஞ்சள் சந்தன குங்கும பொட்டு தான் வைக்க வேண்டுமே தவிர, ஸ்டிக்கர் பொட்டை சுவாமி படங்களுக்கு ஒட்டவே கூடாது. வாசம் இல்லாத செயற்கையான பிளாஸ்டிக் பூக்களை, சுவாமிக்கும், இறந்தவர்களது படத்திற்கும் போடுவது நல்லது அல்ல.

mahalakshmi3

இறுதியாக மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை எந்த திசை நோக்கி வைக்க வேண்டும் தெரிந்துகொள்ளலாமா. குபேரர்  படமாக இருந்தாலும் சரி, அஷ்டலட்சுமிகளின் திருஉருவ படமாக இருந்தாலும் சரி, மகாலட்சுமியின் திருஉருவ படமாக இருந்தாலும் சரி, இந்தப் படங்கள் வேறு சுவாமி படங்களோடு சேராமல் தனியாக இருக்கும் பட்சத்தில், (‘பிள்ளையார் சரஸ்வதி லட்சுமி’ படங்கள் மூன்றும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் பட்சத்தில் அதை கிழக்கு பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.) உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே நமக்கு ஐஸ்வரியத்தைத் தரும் கடவுள்களை வடக்குப் பார்த்தவாறு மாட்டி வைப்பது, அதிர்ஷ்டத்தை நமக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
போகி அன்று உங்கள் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை எரிப்பது போல, கண்ணுக்குத் தெரியாத துர்தேவதைகளை எரிக்க இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -