தொடர் கஷ்டங்களுக்கு இந்த சாபமும் காரணமாக இருக்கலாம்! சாபம் நீங்க எளிமையாக பரிகாரம் செய்வது எப்படி?

crow-astro

ஒருவர் தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அதற்குப் பின்னால் ஏதாவது ஒரு சாபம் காரணமாக அமைந்திருக்கும். உண்மையில் சாபங்கள் பலிக்குமா? என்றால் நிச்சயம் பலிக்கும் என்பது தான் பதிலாக இருக்கும். சாதாரணமாக சொல்லும் வார்த்தைகளை சாபங்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. உண்மையிலேயே மனதில் வலியுடன் கொடுக்கப்பட்ட சாபங்கள் வழிவழியாக அடுத்த சந்ததிகளையும் தொடர்கின்றன.

pithru dosham

அதிலும் குறிப்பாக நம்முடைய முன்னோர்கள் சாபம் கொடுத்து இருந்தால் அவைகள் தோஷமாக மாறிவிடக்கூடும். இதனால் அவர்களுக்கு தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். இதிலிருந்து விமோசனம் பெற என்ன பரிகாரம் செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

சாபங்கள் மொத்தம் 13 வகையாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த 13 வகையான சாபங்களும் மனிதனுடைய வாழ்க்கையில் நீங்க முடியாத பிரச்சனைகளை உண்டு பண்ணும். எவ்வளவு தான் முன்னேற நினைத்தாலும் முன்னேற்றத்தில் தொடர்ந்து தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதில் இருந்து விமோசனம் பெற உங்களால் முடிந்த அளவிற்கு பிறருக்கு தான தர்மங்களை செய்யலாம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற கூற்றுக்கு இணங்க, நாம் செய்யும் சிறு விஷயத்தில் மற்றவர்கள் மனம் மகிழ்ந்தால் நமக்கு ஏற்பட்டிருக்கும் சாபங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதைத்தான் புண்ணியம் என்பார்கள். கூடுமானவரை புண்ணியத்தை சேர்க்க பழகிக் கொள்ளுங்கள்.

இந்த 13 வகையான சாபத்தில் முன்னோர்கள் சாபம் மிகவும் பொல்லாதது என்பார்கள். ஏனென்றால் முன்னோர்கள் என்பவர்கள் நம் குடும்பத்தில் இறந்து போனவர்கள். இறந்து போன ஆத்மாக்கள் உடைய சாபம் மிகவும் வலிமை வாய்ந்தது. நீங்கள் ஒரு தவறும் செய்யாமல் இருந்தாலும் உங்களுடைய முன்னோர்கள் செய்த பாவத்தினால் உங்களுக்கும் அந்த தண்டனையில் பங்குண்டு. பூர்வீக சொத்துகள் வழிவழியாக எப்படி அடுத்த சந்ததிகளுக்கு வந்து சேர்கிறதோ! அதே போல தான் பூர்வீக சாப பலன்களும் வழி வழியாக அடுத்த சந்ததிகளுக்கு வந்து சேரும்.

- Advertisement -

இப்படியாக முன்னோர்கள் தங்களுடைய சந்ததிகளுக்கு இட்ட சாபங்கள் தொடர்ந்தால், வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நீங்கள் முன்னேறவே முடியாது. பெற்றோர்களுடைய பாவத்தை வாங்கி சுமப்பவர்களுக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்காத துன்பங்கள் வந்து சேரும். நம்மை இந்த பூமிக்குக் கொண்டு வந்தவர்கள் பெற்றோர்கள் தான் என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.

sad-crying4

உங்கள் ஜாதகத்தை நீங்கள் நல்ல ஜோசியர்களிடம் கொண்டு சென்றால் பித்ரு சாபம் இருப்பதாக கூறுவார்கள். பித்ரு சாபம் இருப்பவர்கள் எளிமையாக இந்த பரிகாரத்தை செய்தால் அதிலிருந்து விமோசனம் பெறலாம். நிச்சயமாக அடுத்தடுத்த படிகள் முன்னேற்றத்துடன் செல்வதற்கு இந்த பரிகாரம் துணை செய்யும்.

astrology

பித்ரு சாபம் அல்லது முன்னோர்கள் சாபம் இருப்பவர்களுக்கு தோல்விகளில் இருந்து மீள்வதற்கு இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு உயிர் ஜனனம் ஆவதற்கு காரணமாக இருப்பதற்கு நீங்கள் உதவி செய்யலாம். அதாவது ஒரு ஏழை தாய்மாரின் பிரசவத்திற்கு தேவையான உதவிகளை முன்னின்று நீங்கள் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முன்னோர்கள் சாபம் பலிக்காமல் போகும்.

Mazaa during pregnancy

அதே போல 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சாவின் விளிம்பிலிருந்து நீங்கள் காப்பாற்றலாம். எவ்வளவோ குழந்தைகள் பணம் இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த உயிர்களை நீங்கள் காப்பாற்ற முயற்சி செய்தாலே உங்களுடைய சாபங்கள் முற்றிலுமாக நீங்கிவிடும். மற்றவர்களுக்கு உதவி செய்வதை விட சிறப்பான பரிகாரம் இந்த உலகத்தில் எதுவுமே இருக்க முடியாது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

இதையும் படிக்கலாமே
வீட்டின் சுபீட்சத்திற்கு இந்த 1 பொருள் கியாரண்ட்டி தரும். அது என்ன பொருள்? என்று நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.