வீட்டின் சுபீட்சத்திற்கு இந்த 1 பொருள் கியாரண்ட்டி தரும். அது என்ன பொருள்? என்று நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

saraswathi-komatha-cow

வீட்டில் ஐஸ்வர்யமும், சுபீட்சமும் நிலைத்திருக்க வீட்டை எப்பொழுதும் லட்சுமி கடாட்சத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஒரு சில வீடுகளுக்குள் நுழைந்தாலே அப்படி ஒரு மனநிறைவு கிடைக்கும். ஆனால் சில வீடுகளில் செல்லும் பொழுது நமக்குள் கெட்ட அதிர்வுகள் உண்டாவதை உணர்வோம். ஆக ஒரு வீட்டை நாம் எப்படி வைத்திருக்கிறோம்? என்பதை பொருத்தும் சுபீட்சம் நிலைக்கும் என்பதை இதன் மூலம் உணர முடிகிறது. அவ்வகையில் ஒரு வீட்டில் சுபீட்சம் நிலைத்திருக்க இந்த ஒரு பொருளை நாம் பயன்படுத்துவதால் நிறைய நன்மைகள் உண்டாகும். அது என்ன பொருள்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

home

நாம் முதலில் வெளியிலிருந்து வீட்டிற்கு வரும் பொழுது வரவேற்பறையை தான் உற்று நோக்குகிறோம். எனவே வீட்டின் மற்ற அறைகளை விட வரவேற்பறை விசேஷமான அமைப்பாக அமைத்துக் கொள்வது யோகத்தை தரும். வீட்டின் வரவேற்பறையில் சில பொருட்களை வைப்பதால் வீடு சுபீட்சமாக இருக்கும்.

அந்த காலத்திலெல்லாம் வீடுகளில் வீணை வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அதற்கு என்ன காரணம் தெரியுமா? வீணை மட்டுமல்ல, எந்த ஒரு வாத்தியக் கருவிகளை நாம் வீட்டின் வரவேற்பறையில் வைத்திருந்தாலும் வீட்டின் சுபீட்சத்தை அதிகமாக்கி தரும் ஆற்றல் அதற்கு உண்டு. அதிலும் குறிப்பாக வீணையை வைத்திருப்பதற்கு மிகப் பெரிய காரணம் உண்டு. வீணையின் அமைப்பு வீட்டின் சுபீட்சத்திற்கு ஊன்றுகோலாக இருக்கும்.

veenai

நமக்கு வாசிக்கத் தெரியுமோ! தெரியாதோ! அது பரவாயில்லை. ஆனால் வீட்டில் வாத்தியக் கருவிகள் இருப்பது பொதுவாகவே யோகம் தரும். ஆனால் வாத்தியக் கருவிகளை வாங்கி வைக்கும் அளவிற்கு வசதி இல்லாதவர்கள் என்ன செய்யலாம் தெரியுமா? வீட்டின் வரவேற்பறையில் உள்ளே நுழைந்ததும் அனைவரின் கண்களுக்கும் பளிச்சென தெரியும் படியாக வாத்தியக் கருவிகளின் புகைப்படத்தை மாட்டி வைக்கலாம். இவ்வாறு செய்வதால் வீட்டில் சுபீட்சத்திற்கு உத்தரவாதம் கொடுக்க முடியும்.

- Advertisement -

மேலும் அதே போல வரவேற்பறையில் பசுமாடு கன்று குட்டியுடன் இருக்கும் படத்தை மாட்டி வைத்தால் சுபீட்சமாக இருக்கும். சுபகாரிய தடை, காரிய தடை நீங்கும். நல்ல விஷயங்கள் அந்த வீட்டில் நடைபெறத் துவங்கும். பழ வகைகள் மற்றும் ஏலக்காய் போன்ற வாசனை மூலிகைப் பொருட்கள் வரவேற்பறையில் வைப்பதால் வீட்டில் சுபீட்சத்திற்கு வழிவகுக்கும். அதிகம் நாட்கள் வரை கெட்டுப் போகாத பழங்களான வாழை சீப்பு, அண்ணாச்சி பழம் போன்ற பழங்களை வரவேற்பறையில் ஒரு அழகிய பாத்திரத்தில் வைத்து விட்டால் போதும்.

Elakkai

அதே போல ஏலக்காய் நிறைய வாங்கி ஒரு கண்ணாடி பேழையில் அடைத்து வைத்து விட்டால் போதும், அப்படி ஒரு சுபீட்சம் நிலைத்து நிற்கும். இந்த பொருட்களெல்லாம் வீட்டின் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டவை. இவைகளை அடிக்கடி பார்க்கும் பொழுது நமக்கு நல்ல வைப்ரேஷன்கள் கிடைக்கும். மேலும் தெய்வீக சக்தியை அந்த வீட்டில் உணர முடியும். நீங்கள் பூஜைகள் செய்யும் பொழுது ஊதுபத்தியை ஏற்றி வரவேற்பரையில் இரண்டு பத்திகளை வைத்து விட்டால் போதும். அந்த வீடு முழுவதும் நறுமணம் பரவி நல்லதொரு சுபீட்சத்தை உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே
எப்படிப்பட்டவர்களுக்கும் அரசாங்க வேலை நிச்சயம் கிடைக்கும். தினம்தோறும் பசுமாட்டிற்கு இந்த 1 பொருளை தானம் கொடுத்து வாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.