நாளை அமாவாசை! முன்னோர்கள் சாபத்தால் முன்னுக்கு வர முடியாமல் தத்தளிக்கும் குடும்பத்தினர் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்.

amavasai
- Advertisement -

நிறைய பேர் வீடுகளில் சந்தோஷம் நிலைகுலைந்து போவதற்கு காரணமாக இருப்பது இந்த முன்னோர்களின் சாபம் தான். குடும்பத் தலைவரின் ஜாதக கட்டத்திலேயே இது இருக்கும். குடும்பத்திற்கு முன்னோர்களின் சாபம் இருப்பதாக ஜோதிடர் மூலமாக உங்களுக்கு தெரிந்து விட்டது. குடும்பத்தில் வரக்கூடிய அடுத்தடுத்த கஷ்டங்கள், அடுத்தடுத்த துன்பங்கள் துயரங்கள், எல்லாம் உங்கள் குடும்பத்திற்கு முன்னோர்கள் சாபம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதிலிருந்து வெளிவர நிறைய காசு செலவு செய்து, எவ்வளவோ பரிகாரங்களை செய்து விட்டோம்.

ஆனால் குடும்பத்தில் சந்தோஷமோ நிம்மதியோ இல்லை. ஒரு சுப காரியங்கள் கூட நடக்கவே மாட்டேங்குது என்று ரொம்பவும் கஷ்டப்படுபவர்கள் ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இந்த எளிமையான பரிகாரம் உங்கள் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை முழுமையாக உங்களுக்குப் பெற்றுத் தரும். முன்னோர்கள் சாபத்தால் படாத பாடுபடும் குடும்பம் கூட கொஞ்சம் தலைத் தூக்குவதற்கு இந்த எளிமையான பரிகாரம் உதவியாக இருக்கும்‌. வாங்க நேரத்தை கடத்தாமல் ஆன்மீகம் சொல்லும் அந்த பரிகாரம் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

முன்னோர்கள் சாபம் விலக அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்:
அமாவாசை தினத்தில் எப்போதும் போல உங்களுடைய முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பண காரியங்களை முடித்துவிட்டு, பூஜையறையில் முன்னோர்களுக்கு உண்டான படைகளை போட்டுவிட்டு, பூஜையை முடித்து விடுங்கள். அதன் பிறகு மாலை நேரத்தில் கூட நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

சதுர வடிவில் இருக்கும் ஒரு வெள்ளை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் அளவு எள்ளு, 1 ஸ்பூன் அளவு பச்சரிசி வைத்து, 1 ரூபாய் நாணயம், 1 விரலி மஞ்சள் வைத்து விடுங்கள். ஒரு வெள்ளை நிற பேப்பரில் உங்களுடைய மறைந்த முன்னோர்களின் மூன்று தலைமுறை பெயரை எழுத வேண்டும்.

- Advertisement -

உங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களின் மூன்று தலைமுறை பெயர்களை அந்த பேப்பரில் எழுதி விடுங்கள். குறைந்தபட்சம் மூன்று தலைமுறையினர் பெயரை எழுத வேண்டும். உங்களுக்கு அதற்கு மேலும் வாழ்ந்தவர்களுடைய பெயர்கள் தெரிந்தாலும் அந்த பேப்பரில் எழுதலாம்.

அந்த வெள்ளை துணியில் வைத்திருக்கும் பொருட்களோடு இந்த பேப்பரையும் மடித்து வைத்து அந்த வெள்ளை துணியை முடிச்சாக கட்டி, பூஜை அறையில் ஒரு ஓரமாக வைத்து விடுங்கள். அதாவது பூஜை அறை அலமாரியில் இதை வைத்துவிட்டு, மனதார முன்னோர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். அறிந்தும் அறியாமலும் நாங்களோ அல்லது எங்கள் குடும்பத்தில் வாழ்ந்தவர்களோ தெரியாமல் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை மன்னிக்கும் படி பிரார்த்தனை வைத்துவிட்டு, தினமும் விளக்கு ஏற்றும் போது இந்த முடிச்சுக்கும் ஒரு ஊதுவத்தையே காண்பித்து முன்னோர்களை வேண்டிக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அயல் நாட்டவர் போல சண்டை போட்டு வாழும் கணவன் மனைவி இருவரும் அண்டை நாட்டவர் போல இணக்கமாக வாழ அருமையான எளிய தீப பரிகாரம்.

அடுத்த அமாவாசை வரை இந்த முடிச்சு உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும். அடுத்த அம்மாவாசை வழிபாட்டு முறையை முடித்துவிட்டு இந்த முடிச்சை அப்படியே கொண்டு போய் ஓடுகின்ற தண்ணீரில் விட்டு விட வேண்டும். சமுத்திரத்திலும் இதைப் போடலாம். இந்த எளிமையான பரிகாரம் உங்களுடைய முன்னோர்களின் சாபத்திலிருந்து உங்கள் குடும்பத்தை காப்பாற்றும் என்பது நம்பிக்கை.

- Advertisement -