என்னங்க இந்த ரெண்டுபேரும் இப்படி ஆடுறாங்க. வருங்காலத்தில் இருவரும் எங்கயோ போகப்போறாங்க இந்திய அணி வீரர்களை புகழ்ந்த – ஆட்டநாயகன் முன்ரோ

Munro

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் செடன் பார்க் மைதானத்தில் இன்று நடந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

Hardik

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 212 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் முன்ரோ 40 பந்தில் 72 ரன்கள் குவித்து அசத்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த இமாலய இலக்கினை துரத்திச்சென்ற இந்திய அணி அதிர்ஷ்ட வசமின்றி வெறும் 4 றன் வித்தியாசத்தில் தோற்று தொடரை இழந்தது.

இந்த போட்டி குறித்து ஆட்டநாயகன் முன்ரோ கூறியதாவது : இந்திய அணி கடைசி வரை எங்களை அச்சுறுத்தியது. இருப்பினும் எங்களது அணி பவுலர்கள் வெற்றியை பெற்று தந்தனர். இந்திய அணி வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினார்கள். அவர்களின் ஆட்டம் நிச்சயம் எங்களுக்கு ஏற்படுத்தியது.

அவர்கள் மிகச்சிறந்த வீரர்கள் கண்டிப்பாக அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. மேலும், இறுதியில் கார்த்திக் மற்றும் குருனால் பாண்டியா ஆகியோர் 18 மற்றும் 19 ஆம் ஓவர்களில் ஆட்டத்தை வெற்றி அருகில் கொண்டு சென்றனர். இறுதியில் நாங்கள் பெற்ற வெற்றி மிகச்சிறப்பானதாகும் என்று முன்ரோ தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

கடைசிவரை பயத்திலே இருந்தோம். போராடியே வெற்றி பெற்றோம் சிறப்பான ஒரு வெற்றி – வில்லியம்சன்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்