கடைசிவரை பயத்திலே இருந்தோம். போராடியே வெற்றி பெற்றோம் சிறப்பான ஒரு வெற்றி – வில்லியம்சன்

kane-williamson

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் செடன் பார்க் மைதானத்தில் இன்று நடந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

williamson

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 212 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் முன்ரோ 40 பந்தில் 72 ரன்கள் குவித்து அசத்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த இமாலய இலக்கினை துரத்திச்சென்ற இந்திய அணி அதிர்ஷ்ட வசமின்றி வெறும் 4 றன் வித்தியாசத்தில் தோற்று தொடரை இழந்தது.

இந்த போட்டியின் வெற்றி குறித்து வில்லியம்சன் கூறுகையில் : இந்த போட்டி இரு அணிக்கும் ஒரு சிறப்பான போட்டியாகும்.முதல் போட்டியில் வெற்றி பெற்றோம். பிறகு, இரண்டாவது போட்டியில் தோல்வி பெற்றோம். அதிலிருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொண்டு இந்த போட்டியில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றோம்.

gugalin

இறுதிவரை இருஅணிக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருந்தது. கடைசி சில விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பான வெற்றி பெற்றோம். அடுத்து நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடருக்கு இந்த வெற்றி உந்துதலாக இருக்கும் என்று வில்லியம்சன் கூறினார்.

இதையும் படிக்கலாமே :

நாங்கள் தவறவிட்டோம் மாற்றி கூற எதுவும் இல்லை . தோல்விக்கு காரணம் இதுவே – ரோஹித் ஓபன் டாக்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்