- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டிய வரம் கிடைக்க முருகன் வழிபாடு

வேண்டிய வரம் கிடைக்க முருகன் வழிபாடு

- Advertisement -

நாம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பலவிதமான வேண்டுதல்கள் இருக்கும். அந்த வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக பலவிதமான பூஜைகளையும், விரதங்களையும், வழிபாடுகளையும் நாம் மேற்கொள்வதுண்டு. அப்படி செய்யக்கூடிய விரதங்களில் மிகவும் முக்கியமான ஒரு விரதமாக தான் கந்த சஷ்டி விரதம் திகழ்கிறது. கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்ள இயலாதவர்கள் கூட கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான திருக்கல்யாண நாளன்று இந்த ஒரு மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டிய வரத்தை பெற முடியும். அதைப்பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு வருடத்திலும் வரக்கூடிய ஐப்பசி மாதத்தில் கடைபிடிக்கக்கூடிய விரதமாக தான் கந்த சஷ்டி விரதம் திகழ்கிறது. தொடர்ச்சியாக ஆறு நாட்கள் விரதம் இருந்து ஆறாவது நாள் சூரசம்காரத்தை தரிசனம் செய்துவிட்டு ஏழாவது நாள் திருக்கல்யாணத்தையும் தரிசனம் செய்து வழிபாட்டை பூர்த்தி செய்வோம். விரதம் இருக்க இயலாதவர்கள் கூட வழிபாட்டை மட்டும் செய்வார்கள். விரதமும் இருக்கவில்லை வழிபாடும் செய்ய இயலவில்லை என்பவர்கள் முருகனின் அருளை பெறுவதற்கும் வேண்டிய வரத்தை பெறுவதற்கும் செய்ய வேண்டிய ஒரு எளிமையான மந்திர வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த மந்திர வழிபாட்டை அக்டோபர் மாதம் 29ம் தேதியான இன்று இரவு 12 மணிக்குள் செய்து விட வேண்டும். இன்று முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் திருக்கல்யாணம் என்பது நடைபெறும். அதனால் இன்றைய நாள் முருகப்பெருமான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய நாளாக கருதப்படுகிறது. அப்படி முருகப்பெருமான் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய இந்த நாளில் முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை நாம் கூறுவதன் மூலம் அவர் மேலும் மனம் மகிழ்ந்து நாம் வேண்டிய வரத்தை அருள்வார் என்று கூறலாம்.

இந்த மந்திர வழிபாட்டை செய்வதற்கு குளித்திருக்க வேண்டும், அசைவத்தை தவிர்த்து இருக்க வேண்டும், விரதம் இருக்க வேண்டும், சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை வீட்டு பூஜை அறையிலோ கோவிலிலோ தான் செய்ய வேண்டும் என்றும் இல்லை. நாம் வேலை செய்யும் இடத்தில் இருந்து கொண்டு கூட இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த மந்திர வழிபாட்டை செய்வதற்கு ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். தங்களுக்கு எது வசதியாக இருக்குமோ அந்த முறையில் அமர்ந்து கொண்டு மனதில் வள்ளி தெய்வானை சமேத முருக பெருமானை மணக்கண்ணிற்கு கொண்டு வந்து உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை முன்வைக்க வேண்டும். பிறகு பின்வரும் இந்த முருகனின் மந்திரத்தை 15 நிமிடம் நிறுத்தி நிதானத்துடன் கூறி முடித்துவிட்டு திரும்பவும் உங்களுடைய வேண்டுதலை முன்வைத்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.

மந்திரம்

- Advertisement -

“ஓம் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்ய பரப்ரம்மணே நமஹ”

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க சிவ வழிபாடு

முருகப்பெருமானை நினைத்து விரதம் இருக்க இயலவில்லை என்று வருந்துபவர்களும் வழிபாட்டை செய்ய இயலவில்லை என்பவர்களும் இந்த எளிமையான மந்திர வழிபாட்டை செய்து முருகனின் அருளால் வேண்டிய வரத்தை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்