பக்தனை காக்க சென்னை அரசு மருத்துவ மனைக்கே நேரில் வந்த முருகப் பெருமான் – உண்மை சம்பவம்

murugan

கடந்த 1923-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி சென்னையில் உள்ள தம்புசெட்டித் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார் பாம்பன் சுவாமிகள். அப்போது அந்த வழியாக ஒரு குதிரை வண்டி வேகமாக வந்தது. ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்த பாம்பன் சுவாமிகள் இருக்கும் இடம் நோக்கி வேகமாய் வந்த குதிரை வண்டி அவரின் கால் மீது ஏறியது.

pamban swamigal

வலி தாங்கமுடியாத பாம்பன் சுவாமிகள் அந்த இடத்திலேயே அமர்ந்துவிட்டார். பின் தட்டு தடுமாறி எழ முயன்றபோது தான் தெரிந்தது அவரின் கணுக்கால் எலும்பு முறிந்திருப்பது. பின் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவரை நன்கு பரிசோதித்தனர். அவர் காலில் எக்ஸரே எடுக்கப்பட்டது. அதில் எலும்புகள் முறிந்திருப்பது நன்கு தெரிந்தது. ஆனால் அந்த எலும்புகள் மீண்டும் கூடுவது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் நினைத்தனர். அதற்கு காரணம் அவரின் வயதும்(73 வயது), உப்பில்லாமல் சாப்பிடும் அவரது உணவு பழக்கமுமே.

Pamban Swamigal

பாம்பன் சுவாமிகள் தொடர்ந்து 10 நாட்கள் வலியால் துடித்துக்கொண்டிருந்தார். ஆனால் அந்த வலியிலும் அவர் சண்முக கவசத்தை பாடிக்கொண்டிருந்தார். நோய் நொடி இல்லாமல் வாழுவதற்காக முருக பக்தர்கள் பாடும் கவசம் அது. ஆனால் அதை பாடியும் அவரது வலி குறையவில்லை. இதனால் அவர் முருகனிடம் மனமுருகி வேண்டினார்.

- Advertisement -

Pamban Swamigal

முருகா எனக்கு இப்படி கால் உடைந்தற்கு காரணம் நான் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமாக இருக்கலாம். ஆனால் சண்முக கவசம் பாடியும் நோய் தீரவில்லை என்றால் இவ்வுலக மக்கள் உன்னை தூற்ற மாட்டார்களா? எனக்கு கால் உடைந்தது பெரிய வலியாக தெரியவில்லை ஆனால் சண்முக கவசம் குறித்து மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்களே என்பது தான் பெரிய மன வலியாக இருக்கிறது என்று அவர் தன் மனதிற்குள் முருகனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்.

Lord Murugan

 

அன்றிரவு அவர் தங்கி இருந்து அரை அருகே இரண்டு மயில்கள் வந்து நடனம் ஆட தொடங்கின. அந்த மயில்களின் ஆட்டத்தை கண்டு அவர் மெய் மறந்தார். சிறிது நேரத்தில் அவர் கண் முன் ஒரு அழகிய குழந்தை தோன்றியது. அழகு என்றால் அப்படி ஒரு பேரழகு. அந்த குழந்தையை கண்டு அவர் ஆனந்தத்தில் மிதந்தார். சிறிது நேரத்தில் அந்த குழந்தை அங்கிருந்து மறைந்தது.

Pamban Swamigal

வந்தது முருகன் தான் என்பதை அவர் அறிந்தார். பின் மன நிறைவோடு அவர் அன்றிரவு தூங்கினார். அடுத்த நாள் காலை அவர் தன் அன்பர்களிடம் தான் கண்ட அபூர்வ காட்சியை பற்றி விவரித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு கால் வலி இருப்பதாகவே அவர் உணரவில்லை. சிறிது நேரத்தில் மருத்துவர்கள் அங்கு வந்தனர்.

hospital

இதையும் படிக்கலாமே:
சர்ப தோஷம் எதனால் ஏற்படுகிறது ? அதற்கான பரிகாரம் என்ன ?

மீண்டும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது ஆனால் இந்த முறை எக்ஸரேவில் பல மாறுதல்கள் இருந்தன. அவரது கால் எலும்புகள் கூட துவங்கியுள்ளதை மருத்துவர்கள் எக்ஸரேவில் கண்டு பிரமித்து போனார்கள். இவளவு வயதானவர், இப்படி ஒரு உணவு பழக்கம் இருபவரது எலும்புகள் எப்படி கூட ஆரமிக்கிறது என்பது மருத்துவர்களுக்கு பிரமிப்பாக இருந்தது. அங்கிருந்த பிரிட்டிஷ் மருத்துவர்கள், இது உண்மையில் கடவுளின் அற்புதம் தான் என்று நம்பினர். பிறகு வெகு சில நாட்களிலேயே பாம்பன் சுவாமிகளின் எலும்புகள் கூடிவிட்டன. அவரும் பரிபூரணமாக குணமடைந்தார்.