கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் என்றால் அது கருணை உள்ள கொண்ட கந்தபெருமான் தான். கந்தா என்று அழைத்தாலே போதும் உடனே கண் முன் தோன்றி நம்முடைய குறைகளை தீர்ப்பதில் கந்தனுக்கு நிகர் யாரும் இல்லை என்றே சொல்லலாம் ஆகையால் தான். நினைத்த மாத்திரத்தில் நம்முடைய குறைகளை தீர்க்கக் கூடிய தெய்வங்களின் முக்கியமானவர் எனில் அவர் முருகப்பெருமான்தான் ஆகையால் தான் இன்று உலகெங்கிலும் முருக பக்தர்கள் பெருமளவு பெருகி இருக்கிறார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அப்படியான முருகப்பெருமானின் அருளைப் பெற ஒரு எளிய மந்திர முறை உள்ளது அதை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
வாழ்வில் சிறக்க முருக மந்திரம்
நாம் வாழக் கூடிய ஒவ்வொரு நாளும் இன்பங்களை காட்டிலும் துன்பங்களை அதிகம் தரக்கூடியதாய் அமைந்துள்ளது இந்த துன்பங்களில் உழன்று தவிப்பவர்களை கரைசேர்க்கக் கூடிய கடவுளாய் விளங்குபவர் தான் இந்த கந்த கடவுள். ஒவ்வொருவருக்கும் பலவகையான துன்பங்கள் சிலருக்கு கடன் தொல்லை இன்னும் சிலருக்கு திருமணம் ஆகவில்லை குழந்தை பேரு இல்லை நல்ல வீடு மனை இல்லை இப்படி எது இல்லை என்றாலும் அதை உடனே தந்து அருள்பவர் இந்த கந்தர்.
இவரை வழிபட உகந்த தினங்களில் அது செவ்வாய்க்கிழமை தான் ஆகையால் தான் செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் உள்ள சகல துன்பங்களும் நீங்கி இன்பமாய் வாழக்கூடிய யோகம் அமையும் என்று சொல்வார்கள். அப்படியான இன்றைய நாளில் முருகப்பெருமானின் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை சொல்லும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விரைவில் மறையும் என்று சொல்லப்படுகிறது. அந்த மந்திரம் இதோ.
ஓம் கந்தா போற்றி
இது தான் மந்திரம். இந்த மந்திரத்தை இந்த நாளில் 108 முறை சொல்ல வேண்டும். அதை சொல்லும் முன்பு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். முருகர் சிலை இருந்தால் அதற்கு அபிஷேகம் வேலிருந்தால் அதற்கும் அபிஷேகம் செய்து வணங்குவது மிகவும் சிறப்பு. இன்று தேனிலால் இந்த அபிஷேகத்தை செய்தால் பல நன்மைகள் பெறலாம்.
அப்படி சிலையோ வேலோ இல்லாதவர்கள் முருகப்பெருமான் படத்திற்கு நல்ல வாசனை மிக்க மலர்களை போட்டு இந்த மந்திரத்தை சொல்லலாம். இந்த மந்திரத்தை சொல்லும் பொழுது முருகப்பெருமானுக்கு முன்பு தீபம் எறிய வேண்டும். இந்த தீபம் கிழக்கு முகமாக இருக்க வேண்டும். நீங்கள் வடக்கு முகமாக அமர்ந்தவாறு மனதை ஒரு நிலைப்படுத்தி முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.
இதையும் படிக்கலாமே:செல்வ வளத்துடன் வாழ பெருமாள் வழிபாடு
இந்த வழிபாடு உங்கள் பலனால் துன்பங்களை ஒரே நாளில் போக்குவதற்கான வழியை காட்டும் என்று சொல்லப்படுகிறது. முருகரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து விட்டாலே போதும் எல்லாம் நம்மை நாடி வரும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த மந்திர வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் இன்றைய நாளை தவிர விடாமல் நம்பிக்கையுடன் வழிபட்டு முருகனும் அருளோடு சீரும் சிறப்புமாக வாழலாம் என்ற தகவலோடு பதிவினை முடிவு செய்து கொள்வோம்.