இன்று இந்த மந்திரத்தை ஜபித்தால் வேண்டியவை கிடைக்கும் தெரியுமா

murugan-manthiram1-1

இன்றைய தினம் (15/5/2018) ஒரு சிறப்பான நாளாகும் அமாவாசை, வைகாசி மாதத்தின் முதல் நாள், முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்ச்சத்திரம், அதுவும் அவருக்குரிய செவ்வாய்க்கிழமையில் வருகிறது. இது போன்ற அபூர்வமான தினங்கள் எப்போதாவது ஒரு சில முறை மட்டுமே வரும். “விசாகன்” என்ற அரக்கனை இம்மாதத்தில் முருகப்பெருமான் வதம் புரிந்ததால், இம்மாதம் விசாக மாதம் எனப்பட்டு பின்பு “வைகாசி” மாசமாக பெயர்பெற்றது. “கிருத்திகை” நட்சத்திர தினமும் முருகப் பெருமானுக்குரிய, அவரின் அருட்கடாட்சம் நிறைந்த நாளாகும். இப்படி இரண்டு சிறப்புகள் சேர்ந்து அமைந்த இந்நன்னாளில், முருகப்பெருமானின் மூல மந்திரம் அதை கூறுவதன் பயனாக நாம் வேண்டிய வரம் அனைத்தையும் அவர் தருவார்.

முருகன் மூல மந்திரம்:
“ஓம் ஷ்ரீம் ஹிரீம் விரீம் சௌம் சரவணபவ”

இச்சிறப்பான நன்னாளில் அதிகாலையில் துயிலெழுந்து (அப்படிக் காலையில் இயலாத பட்சத்தில் மாலைப் பொழுதில்) உடல் மற்றும் உள்ளத் தூய்மை செய்து கொண்டு வள்ளி தெய்வானை சமேதராக இருக்கும் முருகன் கோவில் சந்நிதியிலோ அல்லது அத்தகைய முருகனின் படத்திற்கு முன்போ நின்று விளக்கேற்றி பால், பழம் நிவேதனம் வைத்து இம்மூலமந்திரத்தைக் 27 முறைக் கூற வேண்டும். இது மிகவும் ஆற்றல் வாய்ந்த மந்திரம் ஆகும். இதை திடசித்ததுடன் உரு ஜெபிக்கப்படும் போது நிச்சயமான பலன்களைக் கொடுக்கும். ஒரு மண்டலம் அல்லது 48 நாள் இதைத் தொடர்ந்து ஜபித்து வருபவர்களுக்கு நினைத்த நல்லவை யாவும் அந்த முருகனின் அருளாள் நிச்சயம் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே:
தலையில் ஏற்படும் நோய்களை போக்கும் சக்தி மிக்க மந்திரம்

English Overview:
Here we have Lord Murugan moola mantra in Tamil. If we chant this mantra on kiruthigai days it will be really beneficial.