தலையில் ஏற்படும் நோய்களை போக்கும் சக்தி மிக்க மந்திரம்

Sivan-2

“எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்று நம் தமிழ் ஞானச்சித்தர் ஒருவர் பாடியதிலிருந்தே நம் உடலில் தலையின் முக்கியத்துவத்தை நாம் அறிய முடிகிறது. இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் மக்களில் பலருக்கும் உடல், மனம் பாதிப்படைவதால் தலைச்சுற்றல், ஒற்றைத்தலைவலி போன்ற தலை சம்பந்தமான பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இது போன்ற தலை சம்பந்தமான வியாதிகள் இன்று அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது. மருந்துகள் உட்கொண்டாலும் நூறு சதவீத நிவாரணம் கிடைப்பதில்லை. ஆகவே வைத்திய சிகிச்சையோடும், இறைவனின் ஆற்றலோடும் இந்நோய்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த மந்திரம் தான் இந்த “சிவ மந்திரம்“.

Sivan temple

மந்திரம்:
“லூங் ஓங் நம சிவாய”

இம்மந்திரத்தின் அளவு சிறிதாகத் தோன்றினாலும், மிகவும் சக்தி வாய்ந்து. இம்மந்திரம் உச்சரிக்கப்படும் போது சக்தி வாய்ந்த ஒலி அதிர்வலைகள் வெளிப்படும் வண்ணம் இம்மந்திரம் நம் தமிழ்ச் சித்தர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே திடசித்தத்துடன் இம்மந்திரத்தை உச்சரிக்கும் போது உறுதியாக பலனளிக்கும். மேலும் இத்தனை முறைதான் என்றில்லாமல் உங்களால் முடிந்த அளவிற்கு இம்மந்திர உரு ஜெபிப்பதால் பலன்கள் விரைந்து கிட்டும்.

இதையும் படிக்கலாமே:
செல்வத்தையும் வளத்தையும் அல்லி தரும் கணபதி மந்திரம்

English OVerview:
Here we have one best mantra to resolve problems in head. This Sivan mantra in Tamil may be very short. But it has excellent power.