- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇன்று உச்சரிக்க வேண்டிய முருகனின் நாமங்கள்

இன்று உச்சரிக்க வேண்டிய முருகனின் நாமங்கள்

- Advertisement -

இந்த பூமியில் ஒவ்வொரு நொடியும் நகர்ந்து செல்கின்றது என்றால், அதற்கு காரணம் இறைசக்தி. இந்த உலகம் இயங்கிக் கொண்டிருப்பதற்கு காரணம் கலியுகத்துக்கடவுளான முருகன் என்று முதலில் நாம் நம்ப வேண்டும். நம் கை கொண்டு எந்த காரியமும் நடப்பது இல்லை. எல்லாம் அவன் நினைப்பது மூலமாகத்தான் நடக்கிறது. முருகனுடைய மனதிற்குள் நாம் குடியேறுகின்றோமோ இல்லையோ, நம்முடைய மனதிற்குள் முதலில் முருகனை குடியேற வைக்க வேண்டும்.

நம்முடைய மனதிற்குள் முருகன் தங்கி விட்டால் போதும். பிறகு எல்லாம் நல்லபடியாக நடக்கும். இந்த நம்பிக்கையை முதலில் நீங்கள் கொண்டு வாருங்கள். பிறகு பரிகாரங்களும் வழிபாடுகளும் செய்யுங்கள். நிச்சயம் வேண்டிய வரகங்களை சுலபமாக இறைவனிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -

இன்று முருகனுக்கு சொந்தமான நாள். முருகனுக்கு சொந்தமான சஷ்டி திதி, முருகன் பிறந்த கார்த்திகை நட்சத்திரம் இரண்டும் சேர்ந்து இந்த நாளில் இருக்கிறது. இந்த நாளில் முருகன் வழிபாடு செய்யாமல் விட்டு விட்டால் அது எப்படி. ஆகவே கட்டாயம் ஒவ்வொருவரும் இன்றைய தினம் முருகனை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.

இன்று மாலை உங்கள் வீட்டில் இருக்கும் முருகனது திருவுருவப்படத்திற்கு முன்பாக 2 நெய் தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு, சின்ன கிண்ணத்தில் கற்கண்டு நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள் போதும். முருகனுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த இனிப்பு பிரசாதம் இது. நெய்வேதியம் வைத்து தூப தீபங்கள் காட்டி கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இறைவனுக்காக நெய்வேத்தியம் வைத்தீர்கள் அல்லவா. அந்த கற்கண்டில் இருந்து 2 எடுத்து உங்களுடைய வாயில் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு முருகனை இந்த நாமங்களைச் சொல்லி கூப்பிடுங்கள். பாசத்தோடு அன்போடு உரிமையோடு, நீங்கள் உங்களுடைய குழந்தையை பாசமாக எப்படி கூப்பிடுவீங்க. அதுபோல கூப்பிடுங்க. உங்களுடைய அப்பாவை பாசமாக எப்படி கூப்பிடுவீங்க அதுபோல முருகனை நினைத்து கூப்பிடலாம்.

முருகனின் பெயர்கள்

முருகா, முத்துக்குமரா, வடிவேலா, குகா, கந்தா, கடம்பா, கதிர்வேலா,  சண்முகா, கார்த்திகேயா, என் அப்பனே சுப்ரமணியா வந்து என்னுடைய பிரச்சனையை கொஞ்சம் தீர்த்து வையப்பா. பாரத்தை என்னால் சுமக்க முடியவில்லை. எந்த ஜென்மத்தில் செய்த பாவமாக இருந்தாலும், அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி இந்த ஜென்மத்தில் மனதறிந்து யாருக்கும் பாவம் செய்யாமல் நீயே பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சிறப்பு மிகுந்த சஷ்டி கிருத்திகை வழிபாடு

என் வாழ்க்கையில் இருக்கும் இந்த பிரச்சனையை மட்டும் கொஞ்சம் சரி செய்து கொடுத்து விட்டால் போதும். எனக்கு நிம்மதி கிடைத்துவிடும் என்று முருகனை மனம் உருகி அழைத்து வழிபட்டு பாருங்களேன். முருகன் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து உங்களுடைய பிரச்சனையை நிச்சயம் தீர்த்து வைப்பான். இந்த நாளில் உங்களது வாயால் முருகனது இத்தனை பெயர்களை உச்சரித்த புண்ணியம் இந்த பதிவையே வந்து சேரட்டும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்