இன்றைக்கு நாம் எல்லோரும் கஷ்டப்படுவது எதற்காக. நம்முடைய அடுத்த தலைமுறை சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே. பெற்றவர்கள் இன்று ஓடி ஓடி சம்பாதிக்கிறார்கள். ஆனால் பிள்ளைகளுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? சந்தோஷமாக இருக்கிறதா. சில பிள்ளைகள் சந்தோஷமாக ஆரோக்கியத்தோடு நன்றாக வாழ்கிறார்கள். சில பெற்றவர்களுக்கு பிள்ளைகளால் சில கவலை இருக்கிறது. சில குழந்தைகளுக்கு தீராத நோய் நொடி பிரச்சனை இருக்கும்.
சில குழந்தைகளுக்கு பேச்சு சரியாக வராது. சில குழந்தைகள் சரியாக படிக்காது. சில குழந்தைகள் வீட்டிற்கு அடங்காது. இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகள் குழந்தைகளிடம் இருக்கும். ஒரே மாதிரி பிரச்சனை எல்லா குழந்தைகளுக்கும் இருப்பது கிடையாது. ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகள் ஒவ்வொரு குழந்தைக்கு இருக்கும்.
உங்களுடைய குழந்தைக்கு இதுபோல ஏதேனும் பிரச்சனை இருந்தால் சரி அல்லது இதையெல்லாம் தாண்டி இன்னும் ஏதாவது புது பிரச்சனைகள் உங்கள் குழந்தைகள் இருந்தாலும் சரி, அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு வேண்டிக்கொண்டு இந்த வழிபாட்டை மட்டும் செய்யுங்கள். நிச்சயம் உங்களுடைய அடுத்த தலைமுறையான உங்கள் குழந்தை நல்வழியில் நடக்கும்.
முருகன் பால் அபிஷேகம்
அழகன் முருகன் அவதரித்த நாள். நாளை வைகாசி விசாகம். நாளைய தினம் முருகனுக்கு உங்கள் கையால் பசும்பால் வாங்கி கொடுத்து பால் அபிஷேகம் செய்தால் உங்களுடைய வேண்டுதல் உடனே பலிக்கும். அதுவும் குழந்தை சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் நாளைய தினம் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் 100% உங்கள் வேண்டுதலை முருகப்பெருமான் நிச்சயம் நிறைவேற்றி வைப்பான். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் இந்த பாலபிஷேகம் செய்து வைப்பது ஒரு சின்ன ரகசியம் இருக்கிறது.
சுத்தமான பசும்பால் வாங்கி, அப்படியே பாக்கெட்டோடு கொண்டு போய் கோவிலில் கொடுத்து விடக்கூடாது. ஒரு லிட்டர் அல்லது அரை லிட்டர் பசும்பால் வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். சுத்தமான பித்தளை சொம்பு, செம்பு செம்பு அல்லது வெள்ளி சொம்பில் அந்த பாலை ஊற்றி, இரண்டு கைகளில் அந்த பால் சொம்பை வைத்துக் கொண்டு, முருகப் பெருமானை மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டும். இன்று நீ குழந்தையாக அவதரித்த நாள்.
உன்னைப் போலவே என்னுடைய குழந்தையின் வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்க வேண்டும். என்று மனமுருக பிரார்த்தனை செய்து நடந்தே வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகர் கோவிலுக்கு சென்று அந்த பாலை முருகருக்கு அபிஷேகம் செய்ய கொடுக்க வேண்டும். சில ஊர்களில் முருகப்பெருமானுக்கு பால்குடம் ஊர்வலமாக செல்லும்.
உங்கள் ஊரில் அப்படி வருவாய்ப்பு இருந்தால் அந்த பால் குடத்தை நீங்கள் எடுத்துச் சென்று முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்தீர்கள் என்றால், உங்களுடைய வேண்டுதலை முருகப்பெருமான் மனம் குளிர்ந்து நிறைவேற்றி வைப்பான். முருகப்பெருமான் அவதரித்த இந்த வைகாசி விசாகத்திற்கும் பாலுக்கும் என்ன சம்பந்தம் என்பது உங்களுக்கு தெரியுமா.
முருகப்பெருமான் அவதரித்த பிறகு, தாய் பார்வதி தேவி தன்னுடைய மகன் முருகப்பெருமானுக்கு தன்னுடைய மார்பகத்தால் பாலூட்டிய நாள் இந்த வைகாசி விசாகம். முருகப்பெருமானுக்கு இன்று பால் அபிஷேகம் செய்தால் அவர் மனம் குளிர்ந்து உங்களுடைய ஆசையை நிறைவேற்றி வைப்பார் என்பது தான் நம்பிக்கை. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இந்த வைகாசி விசாகத்தன்று இந்த வழிபாட்டை மேற்கொண்டு பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: அஷ்ட ஐஸ்வர்யம் தரும் தீப வழிபாடு
பிள்ளைகள் பற்றிய கவலை அடுத்த நாளிலிருந்து உங்களுக்கு இருக்கவே இருக்காது. சிறு குழந்தைகளுக்காக தான் இந்த வேண்டுதலை வைக்க வேண்டும் என்று கிடையாது. உங்கள் பிள்ளை பெரியதாகி விட்டது. காலேஜ் படிக்குது, கல்யாணம் கூட ஆயிடுச்சு அந்த குழந்தைக்காக கூட நீங்கள் வேண்டுதல் வைக்கலாம். தவறு ஒன்றும் கிடையாது. எவ்வளவு வயதானாலும் தாய்க்கு தன்னுடைய பிள்ளை, குழந்தை தானே. இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.