செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை இப்படி வழிபட்டு வந்தால் நீங்களும் கொஞ்ச காலத்திலேயே சொந்த வீடு வாங்கலாம் தெரியுமா?

murugan-home
- Advertisement -

செவ்வாய்க் கிழமையில் முருக வழிபாடு செய்வது என்பது மிகவும் விசேஷமானது. முருகனுக்கு உகந்த செவ்வாய்க் கிழமையில் முருகனை முறையாக துதிக்கும் பொழுது முத்தான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. எல்லோருக்குமே சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது மிகப் பெரிய கனவாக இருந்து இருக்கும். முருகனுடைய அருளைப் பெற்றால் சொந்த வீடு கனவு என்பது விரைவாகவே நிறைவேறும். இவ்வகையில் முருகனை எப்படி முறையாக செவ்வாய்க் கிழமையில் வழிபடலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

built-home1

தனக்கென ஒரு வீடு இருக்க வேண்டும் என்கிற நியாமான ஆசையை நிறைவேற்ற கூடிய சக்தி பெற்றவர் முருகப் பெருமான். முருகப் பெருமான் வீற்றிருக்கும் சிறுவாபுரி ஸ்தலத்தில் செங்கல் வாங்கி வழிபட்டால் உடனடியாக வீடு கட்டும் யோகம் உண்டாகும் என்பது பக்தர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. அத்தகைய அருளைக் கொடுக்கும் முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமை தோறும் வீட்டில் முறையாக இப்படி வழிபடும் பொழுது வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். மேலும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நியதி.

- Advertisement -

வேண்டிய வரத்தை வேண்டியபடி வாரி வழங்கும் கருணையே வடிவான கந்தனை வீட்டில் விக்ரஹம் வைத்திருப்பவர்கள் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். முருகன் விக்ரகத்துக்கு தூய தண்ணீரால் முதலில் அபிஷேகம் செய்து விட்டு பின்னர் பால், தேன் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்ய வேண்டும். காய்ச்சாத பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்த பின், தேன் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். விபூதி பிரியராக இருக்கும் முருகப் பெருமானுக்கு இறுதியாக விபூதியைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

murugan-silai-abishegam

பின்னர் சாதாரண தண்ணீரால் அபிஷேகம் செய்து விட்டு சந்தன, குங்குமம் கொண்டு பொட்டு வைக்க வேண்டும். முருகனுடைய வேல், முருகனுடைய நெற்றிப் பகுதி, கைகள், பாதம் என்று அத்தனை இடங்களிலும் பொட்டு வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் அவருக்கு பிடித்த முல்லை, செவ்வரளி மலர்கள் அல்லது கதம்பம் அல்லது வாசனை மிகுந்த மலர்களால் மாலை சாற்றி வைக்கலாம். விக்ரஹம் இல்லாதவர்கள் படத்திற்கு இது போல் பொட்டு வைத்து பூ சூடி அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

முருகனுக்கு உகந்த நைவேத்யம் சாம்பார் சாதம் ஆகும். எனவே உங்களுக்கு விருப்பமான பல காய்கறிகளை கொண்டு மணம் மிக்க சாம்பார் செய்து அதில் நெய் ஊற்றி நிவேதனம் வையுங்கள். பின்னர் கற்கண்டு படையுங்கள். சித்தரன்னம் என்று சொல்லப்படும் கலவை சாத வகைகளைக் கூட நிவேதனம் வைக்கலாம். அது உங்கள் விருப்பம் தான். பின்னர் ஆறு விளக்குகள் வைத்து அதற்கும் சந்தன, குங்கும திலகமிட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். ஆறுமுகனுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபடும் பொழுது நாம் வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும் என்பது நியதி.

பிள்ளைவரம் எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் இது போல் ஆறு விளக்கு ஏற்றி, சாம்பார் சாதம் நெய்வேத்தியம் வைத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து, முருகனுடைய மந்திரங்களை உச்சரித்து வழிபட்டு வந்தால் விரைவாக பிள்ளைப்பேறு உண்டாகும். அவருடைய வேலுக்கும் இது போல் அபிஷேகம் செய்து வழிபடும் பொழுது நிறைய பலன்கள் கிடைக்கும். வேலுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் பொழுது வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் நீங்கும், உங்களை பற்றியிருக்கும் பகைவர்களின் தொல்லைகள் ஒழியும். தொழில் மற்றும் வியாபார விருத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -