கண்கண்ட தெய்வமாக திகழக் கூடியவர் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபடுவதால் பல நன்மைகள் நமக்கு ஏற்படும். கடன் ரீதியான பிரச்சினைகள் தீர்வும், சொத்து பிரச்சினைகள் நீங்கவும், திருமண தடைவிலகமும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வேலை கிடைக்க என்று பல வகைகளிலும் நாம் முருகப் பெருமானிடம் வேண்டுதல் வைத்து முருகப்பெருமானை வழிபடலாம். அப்படி நாம் முழுமனதோடு வழிபடும் பொழுது முருகப்பெருமானின் அருளால் நாம் வேண்டியது நமக்கு கிடைக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அப்படி நாம் வேண்டுதல் வைக்கும் பொழுது எந்த பொருட்களை முருகப்பெருமானுக்கு வைத்து வழிபட வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.
முருகன் வழிபாடு பொருட்கள்
பொதுவாக எந்த ஒரு தெய்வத்தை நாம் வழிபடுவதாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கு உகந்த பொருட்களை வைத்து வழிபட்டோம் என்றால் அந்த வழிபாட்டின் பலன் என்பது நமக்கு விரைவிலேயே கிடைக்கும். அதே சமயம் அதிக அளவில் பலன் கிடைக்கும். அந்த வகையில் முருகப்பெருமானுக்குரிய தினங்களாக கருதப்படும் சஷ்டி, கிருத்திகை, விசாகம், செவ்வாய்க்கிழமை போன்று நாட்களில் முருகப்பெருமானுக்கு வைத்து வழிபட வேண்டிய பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
முருகப்பெருமான் என்பவர் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர். செவ்வாய் கிரகத்திற்கு உகந்த தானியமாக கருதப்படுவது துவரம் பருப்பு. அதனால் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் சிறிதளவு துவரம் பருப்பை வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம் சொந்தமாக வீடு மனை வாங்கும் யோகமும் சொத்துகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வும் கிடைக்கும்.
அடுத்ததாக முருகப் பெருமானுக்கு உகந்த பொருளாக கருதப்படுவது பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய வளையல். இந்த வளையலை முருகப்பெருமானுக்கு உகந்த தினங்களில் வைத்து முருகப்பெருமானை மனதார வழிபடுபவர்களுக்கு இருக்க கூடிய குழந்தை தடை நீங்கி விரைவிலேயே குழந்தை பாக்கியம் ஏற்படும். இவ்வாறு வழிபாடு செய்து விட்டு பெண்கள் இந்த வளையலை கையில் அணிந்து கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக நாம் பார்க்கப் போவது பச்சை பயறு. முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த பொருளாக கருதப்படக்கூடிய இந்த பச்சை பயிரை வாங்கி வைத்து நாம் வழிபாடு செய்து அதை பிரசாதமாக உண்ணும் பொழுது நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து விதமான தடைகளும் நீங்கி நன்மைகள் உண்டாகும். அடுத்ததாக நாம் பார்க்கப்போவது மஞ்சள் மற்றும் குங்குமம். இந்த மஞ்சளானது தூளாக இருக்கக் கூடாது கிழங்கு மஞ்சளாக இருக்க வேண்டும். இந்த மஞ்சளை வாங்கி வைத்து வழிபடுபவர்களுக்கு இருக்கக்கூடிய திருமண தடை நீங்கி விரைவிலேயே திருமணம் நடைபெறும்.
இந்த பொருட்களை வாங்கி வைப்பதோடு முருகப் பெருமானுக்குரிய இந்த மந்திரத்தையும் நாம் 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரைவிலேயே அந்த பலன் நமக்கு கிடைக்கும்.
மந்திரம்
ஓம் சரவணா பாவாய நமஹ
ஞான சக்தி தரா ஸ்கந்தா வள்ளி
கல்யாண சுந்தரா
தேவசேனா மணா ஹ்காண்ட்
கார்திகேய நமோஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நமஹ
இதையும் படிக்கலாமே:
முருகப்பெருமானின் மீது முழு நம்பிக்கை வைத்து மேற் சொன்ன பொருட்களை செவ்வாய்க்கிழமை, சஷ்டி, கிருத்திகை, விசாகம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் வைத்து வழிபட்டு அதற்குரிய பலனை முழுமையாக பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.