முருகனுடைய வேலை வீட்டில் இப்படி செய்தால்! கணவன்-மனைவிக்குள் சண்டையே வராது! மழலை செல்வம் உங்கள் வீட்டிலும் தவழும்.

vel-poojai

குழந்தை இல்லையே என்று ஏங்குபவர்கள் ஏராளமானோர் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று பல்வேறு பரிகாரங்களையும் செய்திருப்பார்கள். ஆனால் வருடக்கணக்கில் குழந்தை இல்லாதவர்கள் முருகனுடைய வேலை வைத்து வீட்டில் இப்படி செய்யும் பொழுது நிச்சயமாக, விரைவாக குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. மேலும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். வீட்டில் அடிக்கடி கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்படுவதும் தடுக்கப்படும். இந்த பரிகாரத்தை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Murugan kovil

முருகனுக்கு உரிய கிருத்திகை, விசாகம் போன்ற நட்சத்திரங்களிலும் அல்லது சஷ்டி திதி வரும் பொழுதும் இந்த பரிகாரத்தை தொடங்கலாம். அல்லது செவ்வாய்க் கிழமையில் தொடங்குவது உத்தமம். முருகன் கோவிலுக்கு சென்று தம்பதியராக வழிபட வேண்டும். முருகன் சன்னிதானத்தில் நின்று சண்முக கவசம் படிக்க வேண்டும். 30 பாடல்களைக் கொண்டுள்ள இந்த கவசம் பாம்பன் சுவாமிகள் அருளியது ஆகும். சக்தி வாய்ந்த இந்த கவசத்தை தம்பதிகள் ஒன்றிணைந்து பாராயணம் செய்யும் பொழுது எண்ணற்ற பலன்களை கொடுக்க வல்லது.

ஷண்முக கவசத்தை தம்பதியராக அமர்ந்து கொண்டு மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். அதுபோல் சிவாலயங்களில் இருக்கும் முருகன் சந்நிதியிலும் இப்படி செய்யலாம். பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் விற்கப்படும் வேல்! பித்தளை உலோகத்தால் செய்தவற்றில் 2 வேல்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு வேல்களை வாங்கி வீட்டின் பூஜை அறையில் வையுங்கள்.

Lord Murugan Vel

ஒரு பித்தளை பாத்திரத்தில் சிறிதளவு பச்சரிசியை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் இந்த இரண்டு வேல்களையும் சொருகி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வாங்கும் வேல் கட்டை விரலின் உயரத்தை விட சிறியதாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். 6 அங்குல வேலை வாங்குவது நல்லது. இரண்டு வேல்களுக்கும் விபூதி, சந்தனம், குங்குமம் ஆகியவற்றை பூசிக் கொள்ள வேண்டும்.

இரண்டு குத்து விளக்குகளை முருகன் படம் அல்லது சிலை முன்பு வைத்து, அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். மூன்று திரிகள் மட்டும் போட வேண்டும். பஞ்சுத்திரி கிழக்கு முகமாகவும், சிவப்புத் துணியால் செய்யப்பட்ட திரி மேற்கு முகமாகவும், வாழைத்தண்டு திரி வடக்கு முகமாகவும் போட வேண்டும். பின்னர் தீபமேற்றி ஷண்முக கவசத்தை தம்பதியராக அமர்ந்து 3 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

kuthu-vilakku

முருகனுக்கு விருப்பமான நைவேத்யம் படைத்து பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். இப்படி 108 நாட்கள் தொடர்ந்து முருகனுக்கு பூஜை செய்த பின் இரண்டு வேல்களில் ஒரு வேலை மட்டும் முருகன் கோவிலில் சென்று உண்டியலில் போட்டு விடலாம். அதன் பிறகு உங்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவாக உண்டாகும். குழந்தை பிறந்த பிறகு, 40 நாட்கள் ஆன பிறகு தீட்டுக் கழிக்கப்பட்ட பின் இரண்டாவது வேலை பிரசித்தி பெற்ற பழனி மற்றும் திருச்செந்தூர் ஆகிய கோவில்களில் சென்று . காணிக்கையாக செலுத்தி விட்டு வந்து விடலாம்.