வேண்டுதல் நிறைவேற வேண்டும், வேண்டிய வரம் கிடைக்க வேண்டும் என்று முருகப்பெருமானை பலரும் வழிபாடு செய்வார்கள். அப்படி முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது சில சூட்சமமான வழிமுறைகளை நாம் பின்பற்றினோம் என்றால் கண்டிப்பான முறையில் நாம் வேண்டிய வரத்தை முருகப்பெருமாள் நமக்கு அருள்வார். கருணையின் மறு உருவமாய் திகழக்கூடிய முருகப்பெருமானை எந்த முறையில் வழிபட்டால் நாம் வேண்டிய வரத்தை நம்மால் பெற முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை பெறுவதற்கு செய்யக்கூடிய முயற்சியோடு முருகப் பெருமானையும் நாம் வழிபடும் பொழுது அந்த முயற்சிகள் வெற்றி அடைந்து நமக்கு வேண்டிய அனைத்தையும் நம்மால் பெற முடியும். வேலை கிடைக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்பட, இடம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க, பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட என்று எந்த வரத்தை கேட்டாலும் அந்த வரத்தை முருகப்பெருமான் தருவார்.
வேண்டிய வரத்தை தரும் முருகன் வழிபாடு
முருகப்பெருமானை வழிபடுவது என்றால் அவருக்கு மிகவும் உகந்த கிழமையான செவ்வாய்க்கிழமையை தான் நாம் தேர்வு செய்ய வேண்டும். மற்ற நாட்களிலும் நாம் வழிபடலாம். செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் சிறப்பு. அதுவும் குறிப்பாக பிரம்ம முகூர்த்த வேளையில் முருகப்பெருமானை நாம் வழிபட்டோம் என்றால் அதன் பலன் மிகவும் அதிகமாக இருக்கும். இந்த வழிபாட்டை காலை 5:30 மணிக்குள் செய்து முடித்து விட வேண்டும். அப்படி செய்ய இயலாத பட்சத்தில் மாலை 6:30 மணிக்கு மேல் செய்வது நல்லது.
இதற்கு நமக்கு வெற்றிலை இருந்தால் போதும். முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாசனை நிறைந்த மலர்களால் அவரை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அவருக்கு முன்பாக ஒரு தாம்பாளத்தை வைத்துக் கொள்ளுங்கள். மூன்று, ஆறு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் நல்ல வெற்றிலைகளாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.
அதை சுத்தம் செய்து அதன் காம்பை நீக்கிவிட்டு விசிறி போன்ற அமைப்பில் தாம்பாளத்தின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். இதன் நுனியில் மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். நுனி வெளியே தெரிவது போல் இருக்க வேண்டும். இப்பொழுது ஒரு அகல் விளக்கை எடுத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு வெற்றிலைகள் சேர்ந்திருக்கும் இடத்தில் அகல் விளக்கை கிழக்கு முகமாக பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அதில் நெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். நாம் எடுத்து வைத்திருக்கும் கிராம்பை அந்த நெய்யில் போட்டு விட வேண்டும். இப்பொழுது அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரித்துவிட்டு உங்களுடைய கோரிக்கை என்னவோ அதை முருகப்பெருமானிடம் மனதார கூறி எனக்கு வேண்டும் என்று கேளுங்கள்.
இந்த வழிபாட்டை செய்யும் பொழுது முருகப்பெருமானுக்கு தேன், ஏலக்காய் போட்ட பால் இப்படி ஏதாவது ஒன்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் நாம் முருகப்பெருமானுக்கு தீபமேற்றி வழிபட என்ன வேண்டுதலை நாம் முன்வைத்து இந்த வழிபாட்டை மேற்கொண்டோமோ அந்த வேண்டுதல் நிறைவேறுவதோடு நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் தீர எலுமிச்சை பரிகாரம்
முருகப் பெருமானின் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் அவர்கள் நினைத்த அனைத்து காரியமும் வெற்றிகரமாக நடைபெறும். விருப்பம் இருப்பவர்கள் முயற்சி செய்து பலன் பெறுங்கள்