முருங்கை பூ இருந்தா இத செய்யுங்க செய்த உடனே காலி ஆயிடும்.

murngai poo poriyal recipe
- Advertisement -

முருங்கையின் பூ, காய், இலை என அனைத்துமே அதிக மருத்துவ தன்மை கொண்டது. இதில் முருங்கை காயும் இலையும் அடிக்கடி நாம் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஆனால் முருங்கை பூவை பெரும்பாலும் யாரும் அதிகம் எடுப்பதில்லை. இந்த முருங்கை பூவிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

முருங்கைப் பூவை தொடர்ந்து உண்பதால் நரம்பு தளர்ச்சி, ஞாபகம் மறதி, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உபாதைகள் கண் தொடர்பான பிரச்சனைகள் நீரிழிவு போன்ற பல்வேறு வியாதிகளுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கைப் பூவில் அருமையான பொரியலை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

முருங்கைப்பூ – 1 கப்
முட்டை -3
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் -1
காய்ந்த மிளகாய் -1
கடுகு – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
மிளகு -1/2 டீஸ்பூன் கருவேப்பிலை -1 கொத்து
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

முதலில் முருங்கை பூவை நன்றாக சுத்தம் செய்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அலசி வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு போட்டு பொரிய விடுங்கள். அதன் பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை இவை மூன்றையும் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு சுத்தம் செய்து வைத்து முருங்கைப் பூவை சேர்த்து மஞ்சள் தூளையும் சேர்த்த பிறகு ஒரு முறை நன்றாக கலந்து மூடி போட்டு இரண்டு நிமிடம் வரை வேக விட வேண்டும். இதற்கு தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை.

- Advertisement -

இரண்டு நிமிடம் கழித்து முருங்கைப்பூவுடன் முட்டை சேர்த்து உப்பையும் சேர்த்து முட்டை வெந்து வரும் வரை நன்றாக வதக்கிய பிறகு கடைசியாக இறக்கும் போது மிளகுத்தூளை தூவி இறக்கி விட்டால் அருமையான முருங்கைப்பூ முட்டை பொரியல் தயார்.

இதையும் படிக்கலாமே: பாரம்பரிய சுவையில் டாங்கர் பச்சடி செய்வது எப்படி?

இந்தப் பொரியலுக்கு முட்டை சேர்க்க விருப்பமில்லாதவர்கள் தேங்காய் சேர்த்து செய்யலாம் சுவை பிரமாதமாக இருக்கும். அதிக மருத்துவ குணங்கள் கொண்ட முருங்கை பூவை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வதனால் நம் உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் தீரும்.

- Advertisement -