பாரம்பரிய சுவையில் டாங்கர் பச்சடி செய்வது எப்படி?

pachadi
- Advertisement -

பாரம்பரிய உணவில் நாம் மறந்தே போன ஒரு ரெசிபியை தான் இன்று பார்க்கப் போகின்றோம். பெரும்பாலும் இதை ஐயர் வீடுகளில் சமைப்பார்கள். இதன் பெயர் டாங்கர் பச்சடி. பெருசாக இதை செய்ய சிரமப்பட வேண்டாம். தயிர் இருந்தால் பத்து நிமிடத்தில் இந்த டாங்கர் பச்சடியை தயார் செய்து விடலாம்.

சுடச்சுட பருப்பு பொடி சாதம், வத்த குழம்பு சாதம் அல்லது சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அல்லது பிரியாணிக்கு ரைதாவாக கூட இந்த பச்சடியை நாம் சைடிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். சில பேர் இதை சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுவார்கள். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபி எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு பொடி 1 டேபிள் ஸ்பூன்
ஒரு நாள் புளித்த தயிர் 1 கப்
உப்பு தேவையான அளவு
நீர் மோர் அல்லது தண்ணீர் 1/2 கப்
பெருங்காயம் 2 சிட்டிகை, கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது சிறிதளவு
எண்ணெய் 1 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது 1.

செய்முறை

1 கப் அளவு தயிருக்கு, 1 டேபிள் ஸ்பூன் அளவு உளுந்த பொடி நமக்கு தேவைப்படும். ஆனால் உளுந்தை அவ்வளவு குறைவாக மிக்ஸி ஜாரில் போட்டால் அரைபடாது. இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் உளுந்து எடுத்துக்கோங்க.

- Advertisement -

ஒரு கடாயில் இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு, இந்த உளுந்தை போட்டு பொன்னிறமாக சிவக்கும்படி வறுத்து நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது இந்த உளுந்து பொடியை எடுத்து பச்சடி செய்ய நாம் பயன்படுத்தலாம். இப்போது உளுந்து பொடி அரைச்சாச்சது அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக ஒரு பாத்திரத்தில் தயாராக எடுத்து வைத்திருக்கும் 1 கப் தயிரை கட்டிகள் இல்லாமல் ஒரு கரண்டியை வைத்து அடித்து கலக்குங்கள். இதில் இப்போது நீர்மோர் 1/2 கப் ஊற்றலாம். நீர்மோர் உங்கள் வீட்டில் இல்லை என்றால் தண்ணீர் கூட 1/2 கப் ஊற்றி இந்த தயிரை கலக்கலாம்.

- Advertisement -

ரொம்பவும் தண்ணீராக நீர்மோர் போல இதை கரைக்கக் கூடாது. தயிர் தான் ஆனால், கட்டிகள் இல்லாத கொஞ்சம் திக்கான தயிர் நமக்கு தேவை. இப்போது கரைத்து வைத்திருக்கும் இந்த தயிரில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் உளுந்து பொடி 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் 2 சிட்டிகை, தேவையான அளவு உப்பு, போட்டு நன்றாக கலந்து விடுங்கள்.

இதுதான் டாங்கர் பச்சடி. இதற்கு ஒரு மணமான தாளிப்பு கொடுக்க வேண்டும். ஒரு தாளிப்பு கரண்டியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு கருவாப்பிலை பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு போட்டு, தாளித்து இதை அப்படியே தயாராக செய்து வைத்திருக்கும் டாங்கர் பச்சடியில் கொட்டி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சர்க்கரை வள்ளி கிழங்கில் அட்டகாசமான ஒரு பாயாசம் ரெசிபி

இறுதியாக மிகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை கொஞ்சம் கூடுதலாக சேர்த்து கலந்தால் சூப்பரான டாங்கர் பச்சடி தயார். இதை செய்வதற்கு பத்து நிமிடம் தான் எடுக்கும். உளுந்து பொடி அரைத்து வைத்திருந்தால் ஐந்து நிமிடம் கூட எடுக்காது. ஆனால் இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். ஒரே ஒரு முறை உங்க வீட்ல முயற்சி செய்து பாருங்கள். மீண்டும் மீண்டும் அடிக்கடி இந்த ரெசிபியை உங்க வீட்டுல செய்ய தொடங்கி விடுவீங்க.

- Advertisement -