10 நிமிடத்தில் கறி சுவையில் காளான் 65 ரொம்ப சுலபமாக இப்படி நீங்கள் வீட்டிலேயே செய்ய திரும்ப சாப்பிடணும்னு தோணும்!

mushroom-kalaan-65
- Advertisement -

ரொம்பவே சுவையான காளான் 65 கறி சுவையையும் மிஞ்சிவிடும் அளவிற்கு இருக்கப் போகிறது. சைவப் பிரியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் இந்த காளான் 65 செய்வதற்கு ரொம்பவே சுலபமானது. இதில் தயாரிக்கப்படும் மசாலா வகைகள் காளான் 65 மட்டுமல்லாமல் மற்ற சைவ பொருட்கள் மற்றும் அசைவ பொருட்களையும் வறுக்க பயன்படுத்திக் கொள்ளலாம். சுவையான சத்தான காளான் 65 எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

காளான் 65 செய்ய தேவையான பொருட்கள்:
காளான் – 300 கிராம், கடலை மாவு – ஒரு டீஸ்பூன், மைதா மாவு – 2 டீஸ்பூன், சோள மாவு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலா – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலா – கால் டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு – அரை மூடி, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

காளான் 65 செய்முறை விளக்கம்:
முதலில் 300 கிராம் அளவிற்கு காளான் எடுத்து தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு காளானையும் தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சில காளான்கள் மேல்தோலை உரித்தால் வந்துவிடும். மேல் தோலில் இருக்கும் அழுக்குகள் நீங்க இவ்வாறு தோலை உரிப்பது உண்டு. அப்படி நீங்களும் மேல் தோலை உரிக்க வந்தால், உரித்து சுத்தம் செய்து தனித் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உலர்ந்த காளான் துண்டுகளை ஐந்து ஆறு துண்டுகளாக ஒரே அளவுகளில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு பெரிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் சேர்க்க வேண்டும். கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு, கரம் மசாலா, மிளகுத்தூள், சீரகத்தூள், வெறும் மிளகாய் தூள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக நல்ல பிளேவர் கொடுக்க இஞ்சி பூண்டு விழுது நைசாக அரைத்து சேர்க்க வேண்டும். வறுக்கும் பொழுது ஒரு வித புளிப்புத் தன்மைக்கு அரை மூடி எலுமிச்சை சாற்றை விதைகள் இல்லாமல் சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கெட்டியாக முதலில் கலந்து விட வேண்டும். பிறகு அரை டம்ளர் அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அளவுகளில் நீங்கள் மசாலா தயாரிக்கும் பொழுது ரொம்பவே சுவையான ஒரு வறுவல் தயாராகிவிடும். இதை கருணைக்கிழங்கு, வாழைக்காய், காலிஃபிளவர், சிக்கன், மட்டன், மீன் என்று எந்த வகை வறுவலாக இருந்தாலும் தாராளமாக செய்து பார்க்கலாம். குறிப்பாக காளான் வறுவல் செய்வதற்கு இது ரொம்பவே சூப்பரான மசாலாவாக இருக்கும்.

மசாலா தயாரித்த உடன் வெட்டி வைத்துள்ள காளான் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு எல்லா இடங்களிலும் படும்படி கலந்து வைக்க வேண்டும். கலந்து வைத்த பின்பு குறைந்தது அரை மணி நேரம் அப்படியே மூடி வைத்து ஊற விட வேண்டும். அப்பொழுது தான் மசாலா உள்ளே இறங்கும். அதன் பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். பின்னர் மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு துண்டுகளாக போட்டு சிவக்க பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான காளான் 65 பத்து நிமிடத்தில் தயாராகி விட்டிருக்கும், இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -