இனி நீங்க ப்ரைட் ரைஸ் சாப்பிடணும்னா ஹோட்டல் போய் வெயிட் பண்ற நேரத்தை விட சீக்கிரமாக, வீட்டில் அதுவும் நல்ல டேஸ்ட்டாவே செஞ்சுடலாம். இந்த முறையை ட்ரை பண்ணுங்க. செம ஈஸியான மஷ்ரூம் ப்ரைட் ரைஸ் ரெசிபி.

- Advertisement -

ஹோட்டல்களில் கிடைக்கும் எல்லா உணவுகளையும் நாம் வீட்டில் சமைத்தாலும் கூட, இந்த பிரைட் ரைஸ் நான் அதிகமாக வீட்டில் செய்ய முயற்சிப்பதில்லை ஏனென்றால் ப்ரைட் ரைஸ் என்பது அங்கே பெரிய பெரிய பாத்திரங்களை வைத்து கரண்டியே பயன்படுத்தாமல் வித்தியாசமாக சமைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வீட்டில் நமக்கு இது போல சமைக்க வராது என்று தான் இந்த பிரைட் ரைஸ் வகைகளை சமைக்க முயலுவதே இல்லை.இனி நீங்கள் அப்படி எல்லாம் செய்யாமல் வீட்டில் நாம் சாதாரணமாக சமைக்கும் முறையிலேயே இந்த ப்ரைட் ரைஸ் செய்யும் செய்துவிடலாம். அது எப்படி என்று தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்: மஸ்ரூம் – 1/2 கப் (நறுக்கியது), பாஸ்மதி ரைஸ் – 1 கப், பூண்டு – 1/4 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது, இஞ்சி – 1/4 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 1/4 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது, வெங்காயம் – 1 சின்னது பொடியாக நறுக்கியது, வெள்ளை மிளகு – 1/4 டீஸ்பூன், டார்க் சோயாசஸ் – 1 டீஸ்பூன், வினிகர் -1/4 டீஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

பிரைட் ரைஸ் செய்வதற்கு முதலில் பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை நன்றாக தண்ணீர் வடித்த பிறகு இதில் சேர்த்து கொஞ்சம் உப்பு, எண்ணெய் சேர்த்து வேக வைக்க வேண்டும். இதில் எண்ணெய் சேர்ப்பதால் அரிசி ஒட்டாமல் தனித் தனியாக நமக்கு கிடைக்கும். ஒரு 80 லிருந்து 85 சதவீதம் வரை சாதம் வெந்தால் போதும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த அரிசி தண்ணீரை வடித்து ஒரு தட்டில் பரப்பி வைத்து விடுங்கள்.

இப்போது மறுபடியும் அடுப்பில் நல்ல அடி கனமான ஒரு கடாய் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு இந்த ப்ரைட் ரைஸ் சுலபமாக கிண்ட இது போல் பாத்திரம் தான் சரியாக வரும். இப்போது அதில் முதலில் எண்ணெய் ஊற்றி அந்த கடாய் முழுவதும் எண்ணெய் படுமாறு நன்றாக பரப்பி விட்டுக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் நறுக்கி வைத்த பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் அனைத்தையும் சேர்த்து லேசாக வதக்கிய பிறகு நறுக்கி வைத்து மஸ்ரூயை இதில் சேர்த்து அந்த மசாலாவில் ஒரு நிமிடம் லேசாக வதங்கட்டும். அதன் பிறகு வடித்து ஆற வைத்த சாதத்தை இதில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அதில் டார்க் சோயா சாஸ், பெப்பர், சர்க்கரை, உப்பு அனைத்தையும் சேர்த்து இரண்டு நிமிடம் வரை நன்றாக கிளறினால் போதும். அதிகம் கிளறக் கூடாது அரிசியும் உடைந்து விடாமல் கிளறி இதன் மேல் ஸ்பிரிங் ஆனியனை தூவி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இதை சூட்டுடன் இருக்கும் போதே பரிமாறி சாப்பிட்டால் இதன் சுவை ஹோட்டல்களில் செய்யும் பிரைட் ரைஸ் போலவே சுவையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: 70 வயதிலும் பெண்களுக்கு முதுகு வலி வராமல் இருக்க, எலும்பு தேய்மானம் ஆகாமல் இருக்க, பாலில் 1 ஸ்பூன் இதை மட்டும் கலந்து குடிங்க.

இது செய்வதற்கு ஒன்றும் அதிக நேரம் ஆகாது, கடினமான வேலையும் இல்லை சுலபமாக வீட்டில் நாம் இதை செய்து கொடுத்து விடலாம். குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -