- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்70 வயதிலும் பெண்களுக்கு முதுகு வலி வராமல் இருக்க, எலும்பு தேய்மானம் ஆகாமல் இருக்க, பாலில்...

70 வயதிலும் பெண்களுக்கு முதுகு வலி வராமல் இருக்க, எலும்பு தேய்மானம் ஆகாமல் இருக்க, பாலில் 1 ஸ்பூன் இதை மட்டும் கலந்து குடிங்க.

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் 30 வயதை கடக்கும் போதே, முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். அதிலும் ஒரு குழந்தை பிறந்த பின்பு, அவர்களுக்கு உடம்பில் ஊட்டச்சத்து என்பதே இருப்பது கிடையாது. சிறுவயதில் இருந்தே பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கியமான ஒரு ஹெல்த் ட்ரிங்க் பவுடர் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இதை எல்லா வயது உள்ள பெண்களும் குடிக்கலாம். தினமும் இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் எலும்புகள் ஆரோக்கியம் பெறும். முதுகு வலி மூட்டு வலி எலும்பு தேய்மானம் என்பதே இருக்காது.

இந்த பொடி அரைக்க நமக்கு தேவையான பொருட்கள். முளைகட்டிய ராகி மாவு – 1 கப், கருப்பு எள்ளு – 1/4 கப், பாதாம் பருப்பு – 15, சோம்பு – 2 ஸ்பூன். (முளைகட்டிய ராகி மாவு இப்போது கடைகளிலேயே விற்கின்றது. அதை பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.) சாதாரண ராகி மாவிலும் இதை செய்யலாம். ஆனாலும் முளைகட்டிய ராகி மாவில் இந்த பொடியை தயார் செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து முளைகட்டிய ராகி மாவை அந்த கடாயில் போட்டு பச்சை வாடை நீங்கும் அளவிற்கு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். வருத்த இந்த மாவை அகலமான ஒரு பவுலில் கொட்டி, வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அதே கடாயில் கருப்பு எள்ளு போட்டு படபடவென பொறியும் அளவுக்கு வறுத்து ஆற வைக்கவும். அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த இந்த கருப்பு எள்ளு, பாதாம் பருப்பு, சோம்பு, இந்த மூன்று பொருட்களையும் போட்டு பொடியாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பொடியை ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் ராகிமாவோடு கொட்டி நன்றாக ஒரு கரண்டியை வைத்து கலந்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் போதும் நமக்கு தேவையான ஹெல்த் பவுடர் தயார்.

- Advertisement -

பசும்பாலில் இந்த ஹெல்த் பவுடரை போட்டு கலந்து குடிக்க போகின்றோம். அது எப்படி என்பதையும் இப்போது பார்த்து விடுவோம். (பசும்பால் கிடைக்கவில்லை என்ற பட்சத்தில் பாக்கெட் பால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.) 1/4 டம்ளர் அளவு வெதுவெதுப்பான தண்ணீரில், 1 டேபிள் ஸ்பூன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பொடியை போட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டம்ளர் சூடான பாலில் நாம் கரைத்து வைத்திருக்கும் இந்த கலவையை ஊற்றி, நன்றாக கலக்க வேண்டும். அதன் பின்பு பாலுக்கு தேவையான அளவு பணவெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து குடித்து விட வேண்டியது தான். (நாம் அறைத்து வைத்திருக்கும் பொடியை அப்படியே பாலில் சேர்த்தால் கட்டி கட்டியாக இருக்கும் அல்லவா. அதனால் தான் அதை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து பாலில் கலக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.)

அவ்வளவு தாங்க. கால்சியம் சத்து நிறைந்த இந்த ஹெல்த்தி ட்ரங்கை யாரும் மிஸ் பண்ணாதீங்க. கூடுமானவரை இதை காலை நேரத்தில் குடிப்பது தான் சிறப்பு. ஆண்களும் இதை குடிக்கலாம். ஆனால் பெண்கள் இதை குடிப்பது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது.

சற்று முன்