மஷ்ரூம் மசாலா கிரேவி! அதுவும் 10 நிமிஷத்துல, ரெஸ்டாரன்ட் ஸ்டைல் டேஸ்ட்ல இப்படி செஞ்சு பாருங்க.

mushroomgravy
- Advertisement -

மஷ்ரூமை வைத்தது ரெஸ்டாரண்டில் வாங்கி சாப்பிடும் கிரேவிகளுக்கு சுவை அதிகம். அதைவிட அதனுடைய விலையும் அதிகம். நம்முடைய வீட்டிலேயே ரிச்சாக இந்த காளான் கிரேவி, எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய குழந்தைகளுக்கு, இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். நாவிற்கு அதிகப்படியான சுவையையும் தரும். இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி இப்படி எதற்கு வேண்டுமென்றாலும் இதை சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். 10 நிமிஷத்துல, ரிச் டேஸ்டில், ரொம்ப ரொம்ப ஈஸியா கிரேவி செய்வது எப்படி? பார்க்கலாமா?

mushroom_3

ஒரு கடாயை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை – 2, ஏலக்காய் – 2, கிராம்பு – 1, சீரகம் – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1 சேர்த்து பிரவுன் கலர் வரும் அளவிற்கு வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காய தோடு இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக வதங்கி வந்தபிறகு, பழுத்த தக்காளியை 2 மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து, வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து, ஒரு நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். அதன் பின்பு, கிரேவிக்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

onion-fry

அடுத்தபடியாக, மிளகாய்தூள் – 1 ஸ்பூன், மல்லித் தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், சேர்த்து தக்காளியின் பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்கவேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 200 கிராம் அளவு மஸ்ரூமை சேர்த்து, 2 நிமிடங்கள் வரை லேசாக தண்ணீர் தெளித்து, மூடி போட்டு வேக வைத்தால் மட்டும் போதும். (தண்ணீரை நிறைய ஊற்றவிட கூடாது. ஒரு குழி கரண்டி அளவு தண்ணீர் மட்டும் போதும்.) இறக்குவதற்கு ஒரு நிமிடம் முன்பாக கரம் மசாலா 1/2 ஸ்பூன் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

மிக்ஸி ஜாரில் போட்டு முந்திரியை பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும். கிரேவியுடன் முந்திரிப்பருப்பு பவுடரை 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து, 2 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு, ஸ்டவ்வை ஆஃப் செய்து விடுங்கள். இறுதியாக உங்களுடைய வீட்டில் வெண்ணெய் இருந்தால் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு  இந்த கிரேவியில் சேர்த்து விட வேண்டும்.

mushroomgravy1

வீட்டில் கஸ்தூரி மேத்தி வைத்திருப்பவர்கள், அதை பொடி செய்து மேலே தூவிக் கொள்ளலாம். அப்படி கஸ்தூரி மேத்தி இல்லை என்றால், கொத்தமல்லி தழையை தூவி கூட பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் முந்திரிப் பருப்பை பொடி செய்து கட்டாயம் கிரேவியுடன் கலக்க வேண்டும். அப்போதுதான் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ரிச் டேஸ்டானது நமக்குக் கிடைக்கும். வெண்ணையும், கஸ்தூரி மேத்தி வீட்டில் இருந்தால் மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -