- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வெறும் 10 நிமிடத்தில் சூப்பராக இந்த மஷ்ரூம் பக்கோடாவை செய்துவிடலாம். மழையில் டீ குடிக்கும் போது,...

வெறும் 10 நிமிடத்தில் சூப்பராக இந்த மஷ்ரூம் பக்கோடாவை செய்துவிடலாம். மழையில் டீ குடிக்கும் போது, பக்கத்தில் இந்த பக்கோடா இருந்தால் செமையா இருக்குங்க.

- Advertisement -

சாயங்கால நேரத்தில் இருக்கக்கூடிய லேசான குளிர், லேசான மழை சாரல், இதில் சுடச்சுட டீ காபி குடிக்கும் போது பக்கத்தில் இப்படி ஒரு பக்கோடா இருந்தால் வேறு என்ன சொர்க்கம் வேணும். மஷ்ரூமை வைத்து மிக மிக எளிமையான முறையில் மொறு மொறு பக்கோடா எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த மழைக்காலத்தில் இந்த ரெசிபியை மிஸ் பண்ணவே பண்ணாதீங்க

இந்த பக்கோடா செய்ய முதலில் 250 கிராம் அளவு மஷ்ரூமை வாங்கிக் கொள்ளுங்கள். அதை தண்ணீரில் போட்டு முழுசாக கழுவி ஒரு வெள்ளைத் துணியில் வைத்து ஈரத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள். அதன் பின்பு இதை நீளவாக்கில் மெல்லிசாக வெட்டிக் கொள்ள வேண்டும். வெட்டிய மஷ்ரூமை ஒரு அகலமான பவுலில் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மஸ்ரூமுடன் நீளவாக்கில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, சோம்பு – 1/2 ஸ்பூன், இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிய பச்சை மிளகாய் – 4, கருவாப்பிலை – 1 கொத்து, கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 1/2 கப், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மல்லித்தூள் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றாமல் உங்கள் கையை வைத்து நன்றாக பிசையுங்கள்.

இதிலிருந்து தண்ணீர் வரும். கூடுமானவரை தண்ணீர் தேவைபடாது. தேவைப்பட்டால் ஒரு இரண்டு சொட்டு அளவு தண்ணீர் தெளித்து பிசைந்தாலே போதும். ஏனென்றால் மஸ்ரூம் வெங்காயத்தில் இருந்து தண்ணீர் விட தொடங்கி விடும்.

- Advertisement -

இந்த பக்கோடா மாவை தயார் செய்யும் போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த பக்கோடா மாவை தயார் செய்து சிறிது நேரம் வைத்தால் கூட இதில் இருந்து தண்ணீர் விடத் தொடங்கி விடும். பின்னர் பகோடா மொறுமொறுப்பாக வராது. கடாயில் வைத்த எண்ணெய் மிதமான சூட்டில் காய்ந்து வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, இந்த தயார் செய்து வைத்திருக்கும் மஸ்ரூம் பக்கோடா மாவை எடுத்து உதிரி உதிரியாக அப்படியே எண்ணெயில் விட்டு மிதமான தீயில் பொரித்து எடுத்தால் சூப்பரான மொறு மொறு மஸ்ரூம் பக்கோடா தயார்.

மஸ்ரூம் நன்றாக பொன்னிறமாக சிவந்து வந்தவுடன், இதை அடுப்பில் இருந்து எடுத்து விடுங்கள். எண்ணெயை வடித்து எடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து சுட சுட சாப்பிட வேண்டியதுதான். இதில் கலர் தேவை என்றால் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது ஃபுட் கலர் ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபி. பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்