காரசாரமான மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை! வெறும் 10 நிமிஷம் போதுமே இந்த ரெசிபி செய்ய.

mushroom
- Advertisement -

காளானை வைத்து விதவிதமாக எத்தனையோ வகை ரெசிபிகளை நாம் செய்தாலும், மிளகு சேர்த்து செய்யக்கூடிய இந்த மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும். குறிப்பாக, அசைவ பிரியர்களுக்கு இந்த மஷ்ரூம் ஃப்ரையின் சுவை நாக்கிலேயே ஒட்டிக் கொள்ளும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு காரசாரமான, வாசமுள்ள ஒரு குறிப்பை தான் இன்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஃப்ரை செய்ய நிறைய பொருட்கள் கூட தேவையில்லை. காளான் மட்டும் இருந்தால் போதும். மற்றபடி நம் வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை வைத்து சுவையான மஷ்ரூம் ஃப்ரை செய்து விடலாம். ரெசிபியை இப்பவே பார்த்திடலாம் வாங்க.

mushroom1

முதலில் ஒரு சிறிய மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மிளகு 1 டேபிள்ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், சோம்பு 1/4 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு மிக்ஸி ஜாரில் 90% அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் சிறிய அம்மிக்கல் இருந்தால் அதில் நன்றாக கையிலேயே இடித்து அரைத்தால் இதன் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். இந்த மிளகுத்தூள் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

250 கிராம் அளவு உள்ள காளானை நன்றாக கழுவி விட்டு, அதன் பின்பு வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

mushroom2

அடுத்தபடியாக அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றி, நன்றாக சூடானதும், கடுகு – 1/4 ஸ்பூன் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். சிறிய துண்டு இஞ்சி, 2 பல் பூண்டை பொடியாக துருவிக் இந்த எண்ணெயில் சேர்த்து வதக்க வேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயங்களை கடாயில் சேர்த்து பொன்நிறம் வரும் வரை வதக்க வேண்டும். இப்போது கழுவி வெட்டி வைத்திருக்கும் காளானை வெங்காயத்தோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் உங்களுக்கு தேவைப்பட்டால் கொஞ்சம் குடை மிளகாயையும் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பம்தான். குடைமிளகாய் பிடிக்காதவர்கள் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

mushroom3

அடுத்தபடியாக இடித்து வைத்திருக்கும் மிளகுத்தூளை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து தேவையான அளவு உப்பு போட்டு 2 டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீரைத் தெளித்து நன்றாகக் கிளறி விட்டாலே போதும். இந்த மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை நன்றாக வெந்து கருப்பு நிறத்தில் வரும்.

- Advertisement -

mushroom4

தண்ணீர் எல்லாம் சுண்டி மஷ்ரூம் வெந்தவுடன் அடுப்பிலிருந்து கீழே இறக்கி, தேவைப்பட்டால் கொத்தமல்லி இலைகளை தூவி, பரிமாற வேண்டியதுதான். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டிலும் ட்ரை பண்ணி பாருங்க நாவிற்கு ருசி தரக்கூடிய ரெசிபிக்களில் இதுவும் ஒன்று.

இதையும் படிக்கலாமே
சப்பாத்தியும், பூரி மாதிரி உப்பி வர, இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணினாலே போதும். எந்த மாவில் சப்பாத்தி பிசைந்தாலும் இப்படி பிசைய கத்துக்கோங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -