10 ஓவர்களில் இவ்வளவு ரன்னையா குடுப்ப. நல்ல பவுலர் தான நீங்கள். ஏன் இப்படி பண்ணிட்டீங்க என்று திட்டி தீர்த்த ரசிகர்கள்

Nz vs Ban

நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது வங்கதேச அணி. ஆனால், அவர்களின் இந்த முடிவு சோதனையில் முடிந்தது.

Sabbir

ஆம் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 330 ரன்களை குவித்தது. இதனால் 331ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கினை நிர்ணயித்தது. அதனை தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 242 ரன்கள் மட்டுமே குவித்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் முதலில் பந்துவீசிய வங்கதேச அணியின் பந்துவீச்சாளரான முஷ்டபிசூர் ரஹ்மான் 10 ஓவர்கள் வ வீசி 93 ரன்களை விட்டுக்கொடுத்தார். அணியின் முன்னணி இளம் பந்துவீச்சாளரான இவர் சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக பந்துவீசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mustafizur

இவரின் இந்த பந்துவீச்சுக்கு வங்கதேச ரசிகர்கள் அவரை இணையத்தில் திட்டித்தீர்த்த வண்ணம் உள்ளனர். இருப்பினும், ஒரு போட்டியில் இப்படி செயல்பட்டதால் அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் ஒரு ரசிகர் கூட்டம் அவரை ஆதரித்து பதிவிடுகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

அதிக ரன்கள் குவித்த நியூசி வீரர் பிளமிங்கை முந்திய நியூசி அதிரடி வீரர். ஆனால், இதுதான் உங்கள் அணி வீரரின் அதிகபட்ச ரன்களா ? ரசிகர்கள் கலாய்ப்பு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்