முட்டைக்கோஸில் தான் இதை செய்தீர்கள் என்று அடித்து சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. சுவையான இந்த முட்டைகோஸ் கிரேவியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

muttaikose-gravy_tamil
- Advertisement -

முட்டைக்கோசை வைத்து வித்தியாசமான ஒரு ரெசிபியைத்தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். ஆப்பம், தோசை, சப்பாத்தி, பூரி, இடியாப்பத்திற்கு, சூப்பரான சைட் டிஷ் இது. இதை முட்டைக்கோஸ் பால்கறி என்று சொல்லுவார்கள். வித்தியாசமான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் முட்டைக்கோஸ் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள்.

முதலில் 200 கிராம் அளவு முட்டைக்கோசை எடுத்து நைசாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் அரசி தண்ணீரை வடிய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் – 1 கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 2, முந்திரி பருப்பு – 10, பொட்டுக்கடலை – 1 ஸ்பூன், பட்டை – 1 சிறிய துண்டு, லவங்கம் – 2, சோம்பு – 1 ஸ்பூன், போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதும் அப்படியே இருக்கட்டும். (காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் – 1/2 ஸ்பூன், கல்பாசி சின்ன துண்டு – 1, பிரிஞ்சி இலை – 1, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 கைப்பிடி அளவு, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு நன்றாக வதங்க வேண்டும். வெங்காயம் பாதி அளவு வதங்கி வந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, தக்காளி பழம் – 2 பொடியாக நறுக்கியது, போட்டு வதக்குங்கள்.

இப்போது வெங்காயம் தக்காளி எல்லாம் பச்சை வாடை போக வதங்கி வந்தவுடன் கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன் போட்டு, நன்றாக வதக்கி விட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை இதில் ஊற்றி 1 நிமிடம் வதக்கி கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, உப்பு போட்டு நன்றாக கலந்து ஒரு தட்டு போட்டு மூடி இந்த விழுதை பச்சை வாடை போக கொதிக்க வைக்க வேண்டும். காரணம் மிக்ஸி ஜாரில் நாம் பட்டை லவங்கம் சோம்பு எல்லாம் பச்சையாக தான் சேர்த்திருக்கின்றோம் அல்லவா. இந்த விழுதின் பச்சை வாடை நீங்கும் அளவிற்கு கொதிக்க ஐந்து நிமிடம் எடுக்கும்.

- Advertisement -

ஐந்து நிமிடம் கழித்த பிறகு வெட்டி வைத்திருக்கும் முட்டைக்கோசை இந்த குக்கரில் இருக்கும் கிரேவியில் போட்டு நன்றாக கலந்து விடுங்கள். உப்பு சரி பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி, அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு பிரஷர் அடங்கியதும் திறந்து பாருங்கள்.

மணக்க மணக்க சூப்பரான ஒரு கிரேவி தயாராகி இருக்கும். இதில் கலருக்கு உங்களுக்கு விருப்பம் என்றால் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம். சுட சுட இதை சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையான ருசி இருக்கும். இதனுடைய வாசமே ஆளை தூக்கும். இதில் முட்டை கோஸில் தான் செய்தீர்கள் என்று சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டாங்க. அவ்வளவு சுவை இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -