10 நிமிடத்தில் முட்டைகோஸ் கூட்டு இவ்வளவு சுவையாக ஹோட்டல் ஸ்டைலில் நம் வீட்டிலேயே செய்யலாமா? இது தெரிஞ்சா இனி முட்டைக்கோஸ் அடிக்கடி வாங்குவீங்க!

- Advertisement -

முட்டைகோஸ் கூட்டு ரொம்பவும் சுவையானது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த முறையில் நீங்கள் ஒரு முறை முட்டைகோஸ் கூட்டு செய்து பாருங்கள், இனி அடிக்கடி முட்டை கோஸ் வாங்க ஆரம்பிச்சிடுவீங்க! அந்த அளவிற்கு டேஸ்டாக இருக்கக்கூடிய இந்த முட்டைகோஸ் கூட்டு இதே அளவுகளில் இதே பொருட்களை வைத்து செய்து பார்க்க வேண்டும். முட்டைக்கோஸ் கூட்டு எளிதாக எப்படி சுவையாக செய்யலாம்? என்பதை இனி பார்ப்போம்.

முட்டைக்கோஸ் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் – கால் கிலோ, சிறு பருப்பு – 50 கிராம், கடலைப்பருப்பு – 50 கிராம், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – இரண்டு, தக்காளி – ஒன்று, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கல் உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – அரை டம்ளர், அரைக்க: தேங்காய் துருவல் – ரெண்டு டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – இரண்டு, கறிவேப்பிலை – ஒரு கொத்து. தாளிக்க: எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், உளுந்து – 1/4 ஸ்பூன், வரமிளகாய் – இரண்டு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், சின்ன வெங்காயம் – நான்கு.

- Advertisement -

முட்டைகோஸ் கூட்டு செய்முறை விளக்கம்:
முதலில் கடலை பருப்பு மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் நன்கு களைந்து சுத்தம் செய்து பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு பருப்பை மட்டுமும் நீங்கள் பயன்படுத்தலாம். பின் கால் கிலோ அளவிற்கு முட்டைக்கோசை நன்கு சுத்தம் செய்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேவையான மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள முட்டை கோஸ் உடன் ஊற வைத்துள்ள பருப்பு வகைகள், பெரிய வெங்காயம் ஒன்று, தக்காளி ஆகியவற்றை நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். சாம்பார் தூள் மற்றும் மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை இப்போது சேர்த்து அரை டம்ளர் அளவிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் குக்கரை மூடி நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, கருவேப்பிலை, இரண்டு வரமிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் போல் தண்ணீர் விட்டு நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அரைத்து எடுத்த பேஸ்டை இப்போது குக்கரில் சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். அதற்குள் தாளிப்பு செய்வதற்கு சிறிய வாணலி ஒன்றை எடுத்து அடுப்பில் வையுங்கள். அதில் தேவையான அளவுக்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
ரவா லட்டு செஞ்சி முடிச்ச பிறகும் சாஃப்ட்டாக அப்படியே இருக்கணுமா? இந்த ரகசியம் தெரிந்தால் ரவா லட்டு செய்வதில் நீங்கள் தான் கெட்டிக்காரர்கள்!

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சீரகம், உளுந்து தாளித்து, இரண்டு வரமிளகாய்களை கிள்ளி சேர்த்து, கறிவேப்பிலையை உருவி போட்டு, பெருங்காயத்தூள் தூவி அடுப்பை அணைத்து கூட்டுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். அவ்வளவுதாங்க, ரொம்ப ரொம்ப சூப்பரான டேஸ்டில் இருக்கக்கூடிய இந்த முட்டைகோஸ் கூட்டு ரெசிபியை இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.

- Advertisement -