ரவா லட்டு செஞ்சி முடிச்ச பிறகும் சாஃப்ட்டாக அப்படியே இருக்கணுமா? இந்த ரகசியம் தெரிந்தால் ரவா லட்டு செய்வதில் நீங்கள் தான் கெட்டிக்காரர்கள்!

ravai-laddu-recipe
- Advertisement -

ரவா லட்டு செய்யும் பொழுது எப்பொழுதும் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். ரவையை வறுக்கும் முறை, பால் ஊற்றும் முறை, நெய் சேர்க்கும் அளவு என்று ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யும் பொழுது ரவா லட்டு எவ்வளவு நேரம் ஆனாலும் சாஃப்ட் மாறாமல் அப்படியே மெத்தென்று இருக்கும். ரவா லட்டு ஹார்டாக செய்பவர்கள், இது போல ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் சாஃப்ட்டாக வரும். சாஃப்ட்டான ரவா லட்டு சுலபமாக செய்வது எப்படி? என்பதை இனி பார்ப்போம்.

ரவா லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
நெய் – 6 ஸ்பூன், ஒன்றிரண்டாக நறுக்கி வைத்துள்ள பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பூசணி விதை, பிஸ்தா பருப்பு – ஒரு கப், உலர் திராட்சை – அரை கைப்பிடி, தேங்காய் துருவல் – அரை கப், ரவை – 2 கப், சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 10, சூடான பால் – அரை கப்.

- Advertisement -

ரவா லட்டு செய்முறை விளக்கம்:
முதலில் ரவா லட்டு செய்வதற்கு ரெண்டு கப் அளவிற்கு ரவா எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான நட்ஸ் வகைகளையும் தேவைக்கு ஏற்ப எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை ஒன்று இரண்டாக சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மற்ற பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது முதலில் அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் பேன் ஒன்றை வையுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய் விடுங்கள். நெய் காய்ந்ததும் நீங்கள் பொடியாக நறுக்கி வைத்துள்ள நட்ஸ் வகைகளை சேர்க்க வேண்டும். முந்திரி, பாதாம், பிஸ்தா பூசணி விதை என்று உங்களிடம் எது இருக்கிறதோ, எவ்வளவு இருக்கிறது அதை பொடித்து சேர்க்கலாம். இது உங்களுடைய விருப்பம் தான். அதில் எல்லா நட்ஸ் வகைகளும் சிவக்க வறுபட்டதும், உலர் திராட்சைகளை சேர்த்து உப்பி வர வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். நெய்யை பேனிலேயே நன்கு வடிகட்டி நட்ஸ் வகைகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அதே பேனில் இருக்கும் நெயில் துருவிய தேங்காய் துருவல் அரை கப் அளவிற்கு சேர்த்து ஈரப்பதம் இல்லாமல் நன்றி கிரிஸ்பியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். நெய்யிலேயே வறுபடும் பொழுது தேங்காய் சுருங்கி நிறம் மாறி ஈரப்பதம் இல்லாமல் வறுபடும். பின்னர் அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதிலேயே ரெண்டு ஸ்பூன் அளவுக்கு நெய் விட்டு நீங்கள் எடுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து பொன் நிறமாக மிதமான தீயில் வைத்து வறுத்து எடுக்க வேண்டும். லேசாக வறுத்ததும் மீண்டும் ரெண்டு ஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின் அடுப்பை அணைத்து லேசாக கிளறி விடுங்கள். இல்லையேல் அந்த சூட்டிலேயே அடிபிடிக்க ஆரம்பித்து விடும். அடுப்பை அணைத்த பின்பு அரை நிமிடம் கழித்து, ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை நைசாக அரைத்து எடுத்து ரவையுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கிளறி கொடுங்கள். பின்னர் இதனுடன் நீங்கள் நெயில் வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவல் மற்றும் நட்ஸ் வகைகளை சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு முறை நன்கு கலந்து விட்டு சூடாக இருக்கும் பால் அரை கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இந்த சர்க்கரை வியாதி வந்ததில் இருந்து எதுவும் ருசியாக சாப்பிட முடியவில்லையா? இதோ உங்களுக்காக சூப்பர் பிரேக்ஃபாஸ்ட் ஓட்ஸ் ஊத்தப்பம்.

அரைக்கப் எடுத்தாலும் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலந்து விட வேண்டும். நீங்கள் ஊற்றும் பாலில் ரவை நன்கு ஊறிவிடும். எனவே கொஞ்சம் கையில் ஒட்டும் அளவிற்கு இருந்தாலும் பரவாயில்லை, அரை கப் சூடான பாலை ஊற்றி நன்கு கலந்து விடுங்கள். பிறகு ஒரு ரெண்டு நிமிடம் மூடி போட்டு விடுங்கள். ரவை முழுவதுமாக உறிஞ்சிக் கொள்ளும். அதன் பிறகு நீங்கள் கைகளில் எடுத்து உருண்டை பிடிக்க வேண்டியதுதான். லட்டு போல ரவுண்டாக நன்கு அழுத்தம் கொடுத்து உருண்டை பிடித்துக் கொள்ளுங்கள். இதை பார்க்கும் பொழுதே சாப்பிட தோன்றும், அந்த அளவிற்கு சுவையாக இருக்கக்கூடிய இந்த ரவா லட்டு ரெசிபி இதே மாதிரி ட்ரை பண்ணா எவ்வளவு நேரம் ஆனாலும் சாஃப்ட் ஆகவே இருக்கும். பால் ஊற்றி செய்வதால் மூன்று நாட்கள் மட்டும் வெளியில் வைத்து பயன்படுத்தலாம். பிரிட்ஜில் வைத்திருந்தால் ஒரு வாரம் வரை பயன்படுத்த முடியும். பாலுக்கு பதிலாக நெய் ஊற்றி இருந்தால் இன்னும் சிறிது நாட்கள் கூடுதலாக வைத்திருந்து பயன்படுத்தலாம்.

- Advertisement -