- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎவ்வளவு பெரிய கடனும் சீக்கிரத்தில் அடையும் சூட்சமம். 2022 ஆம் ஆண்டின் மைத்ரேய முகூர்த்தம் வரக்கூடிய...

எவ்வளவு பெரிய கடனும் சீக்கிரத்தில் அடையும் சூட்சமம். 2022 ஆம் ஆண்டின் மைத்ரேய முகூர்த்தம் வரக்கூடிய நேரமும் தேதியும் உங்களுக்காக.

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வினை கொடுக்க நிறைய பரிகார முறைகளை சித்தர்கள் நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். அந்த வரிசையில் தீராத கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு சித்தர்களால் சொல்லப்பட்ட ஒரு தீர்வுதான் இந்த மைத்ரேய முகூர்த்தம். நீங்கள் கடனாக வாங்கிய தொகையை இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தால், கோடி ரூபாய் கடன் இருந்தாலும் அந்தக் கடன் சீக்கிரத்தில் படிப்படியாக குறையத் தொடங்கும். இதுதான் இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தின் சிறப்பு. இந்த 2022 ஆம் ஆண்டில் மாதம்தோறும் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்த நாள் மற்றும் நேரத்தைப் பற்றிய விரிவான தகவல் உங்களுக்காக. மைத்ரேய முகூர்த்தத்தில் செய்யக்கூடிய சுலபமான ஒரு பரிகார முறையும் இந்த பதிவின் இறுதியில் சொல்லப்பட்டுள்ளது.

january

2022ஆம் ஆண்டு மைத்ரேய முகூர்த்த தேதிகள்:
2022 ஜனவரி மாத மைத்ரேய முகூர்த்தம் தேதிகள்:
ஜனவரி 11, செவ்வாய்க்கிழமை, 12:05 PM to 01:53 PM
ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை, 1:28 AM to 03:40 AM

- Advertisement -

2022 பிப்ரவரி மாதம் முகூர்த்த தேதிகள்:
பிப்ரவரி 7, திங்கட்கிழமை, 10:19 AM to 12:07 PM
பிப்ரவரி 22, புதன்கிழமை, 11:38 PM to 1:54 AM (23rd Feb 2022)

February

2022 மார்ச் மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
மார்ச் 6, ஞாயிற்றுக்கிழமை, 8.33 AM to 10:21 AM
மார்ச் 22, செவ்வாய்க்கிழமை , 9.52 PM to 1:01 AM

- Advertisement -

2022 ஏப்ரல் மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
ஏப்ரல் 3, ஞாயிற்றுக்கிழமை, 6.43 AM to 8.31 AM

MARCH

2022 மே மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
மே 9, ஞாயிற்றுக்கிழமை, 06:43 PM to 08:55 PM
மே 10, திங்கட்கிழமை, 06:05 AM to 08:07 AM
மே 25, செவ்வாய்க்கிழமை, 04:04 AM to 05:02 AM
மே 26, புதன்கிழமை, 05:36 PM to 07:48 PM

- Advertisement -

APRIL

2022 ஜூன் மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
ஜூன் 6, ஞாயிற்றுக்கிழமை, 02:55 AM to 04:20 AM
ஜூன் 22, செவ்வாய்க்கிழமை, 03:52 PM to 05:58 PM

MAY

2022 ஜூலை மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
ஜூலை 4, ஞாயிற்றுக்கிழமை, 01:01 AM to 02:28 AM
ஜூலை 20, செவ்வாய்க்கிழமை, 01:05 PM to 04:11 PM
ஜூலை 30, வெள்ளிக்கிழமை, 10:50 PM to 01:00 PM

JUNE

2022 ஆகஸ்ட் மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
ஆகஸ்ட் 16, திங்கட்கிழமை, 12:13 PM to 02:25 PM
ஆகஸ்ட் 27, வெள்ளிக்கிழமை, 09:04 PM to 10:52 PM

JULY

2022 செப்டம்பர் மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
செப்டம்பர் 24, வெள்ளிக்கிழமை, 07:14 PM to 09:02 PM

august

2022 அக்டோபர் மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
அக்டோபர் 24, ஞாயிற்றுக்கிழமை, 08:37 AM to 10:49 AM

SEPTEMBER

2022 நவம்பர் மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
நவம்பர் 6, சனிக்கிழமை, 06:51 AM to 09:02 AM
நவம்பர் 17, புதன்கிழமை, 03:42 PM to 05:30 PM

OCTOBER

2022 டிசம்பர் மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
டிசம்பர் 4, சனிக்கிழமை, 05:01 AM to 07:12 AM
டிசம்பர் 14, செவ்வாய்க்கிழமை, 01:56 PM to 03:43 PM
டிசம்பர் 31, வெள்ளிக்கிழமை, 03:16 AM to 05:26 AM

NOVEMBER

இந்த மைத்ரேய முகுர்த்த தேதியில், குறிப்பிட்ட அந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் நீங்கள் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ, அந்த நபருக்கு கடன் தொகையை திருப்பி கொடுத்து வர உங்களுடைய கடன் சீக்கிரமே படிப்படியாக குறைய தொடங்கி விடும். கடன் பிரச்சனையில் இருந்து சீக்கிரமே விடுபடலாம்.

DECEMBER

ஒருவேளை உங்களால் கடன் தொகையை திருப்பித் தர முடியாத சூழ்நிலை. கடன் தொகை வட்டி போட்டு, குட்டி போட்டு பெருகி விட்டது. கடனை சீக்கிரம் திருப்பித் தர மைத்ரேய முகூர்த்த தேதியில் குறிப்பிட்ட இந்த நேரத்தில் உங்கள் கடன் அடைய நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம். ஒரு பிரியாணி இலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நீங்கள் யாருக்கு கடன் கொடுக்க வேண்டுமோ அந்த நபரின் பெயரை எழுதுங்கள். எவ்வளவு தொகையை கொடுக்க வேண்டுமோ அந்த முழு தொகையையும் அந்த பிரியாணி இலையில் எழுத வேண்டும். சிவப்பு நிற பேனாவால் எழுத வேண்டும்.

biriyani-ilai

கடன் விவரங்களை எழுதிய அந்த இலையை ஒரு சிறிய கவரில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இந்த கவருகுள் மைத்ரேய முகூர்த்தம் நேரத்தின்போது, உங்களால் முடிந்த தொகையை வைக்க வேண்டும். அதாவது நீங்கள் யாருக்கு கடனை கொடுக்க வேண்டுமோ, அந்த நபருக்கு கடன் தொகையை கொடுத்ததாக தான் இதற்கு அர்த்தம்.

kadan

லட்சக் கணக்கில் கடன் இருந்தாலும் பரவாயில்லை. இப்படி ஒரு கவரை தயார் செய்து வைத்துக் கொண்டு மாதம்தோறும் வரக்கூடிய இந்த மைத்ரேய முகூர்த்த நாள் அன்று, நேரத்தன்று அந்த கவரில் பணத்தை சேர்த்து வரும் வழக்கத்தைக் கொண்டு வாருங்கள். உங்களால் முடிந்த 100 ரூபாயை அந்த கவரில் வைத்தால் கூட போதும். கூடிய சீக்கிரத்தில் லட்சக்கணக்கில் இருக்கும் கடன் அடைய உண்டான வழியை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டும். கடன் தொகையை திருப்பிக் கொடுக்கும்போது, கவரில் சேர்த்து வரும் இந்த பணத்தை கடன் தொகையோடு சேர்த்து கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை பின்பற்றி பலனடையலாம்.

சற்று முன்