- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநடக்காத காரியத்தை நடத்திக்காட்டும் ஆஞ்சநேயர் வழிபாடு

நடக்காத காரியத்தை நடத்திக்காட்டும் ஆஞ்சநேயர் வழிபாடு

- Advertisement -

ஒரு செயலை நாம் செய்யும்பொழுது அந்த செயலில் எந்தவித தடைகளும் வராமல் அந்த காரியம் வெற்றியடைய வேண்டும் என்றால் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வோம். விநாயகப் பெருமானுக்கு எந்த அளவுக்கு காரிய வெற்றியை தரக்கூடிய ஆற்றல் இருக்கிறதோ அதே அளவிற்கு ஆஞ்சநேயருக்கும் ஆற்றல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதனால் தான் விநாயகரை வழிபடுவது போல ஆஞ்சநேயரையும் நாம் வழிபட்டால் நம்முடைய காரிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நடக்காத காரியத்தையும் நடத்தி காட்டுவதற்கு ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் பார்க்க போகிறோம்.

ஆஞ்சநேயர் வழிபாடு

எவ்வளவு முறை முயற்சி செய்தும் ஒரு காரியத்தில் நமக்கு வெற்றி கிடைக்கவில்லை அந்த காரியத்தில் தடைகள் உண்டாக்கி கொண்டே இருக்கிறது என்று நினைப்பவர்கள் இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகளை நீக்கி வெற்றிகளை தருவார் என்று கூறப்படுகிறது. இதற்கு நாம் தொடர்ச்சியாக ஒரு வாரம் எந்த காரியம் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை ஆஞ்சநேயரிடம் வேண்டுதலாக வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

சாதாரணமாக ஒரு தெய்வத்தை வழிபாடு செய்வதை விட அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பல மடங்கு பலன்கள் விரைவிலேயே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஆஞ்சநேயரை நாம் வழிபாடு செய்யும் ஒவ்வொரு நாளும் ஆஞ்சநேயருக்குரிய மந்திரத்தை கூறும்பொழுது விரைவிலேயே அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கி காரிய வெற்றி உண்டாகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொரு விதமாக ஆஞ்சநேயரின் மந்திரங்களை கூற வேண்டும்.

இதற்கு பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ வீட்டில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயரின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக நம் வீட்டில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயரின் படத்திற்கு ஏற்றவாறு வெற்றிலைகளை வாங்கி வெற்றிலை மாலையாக கட்டி ஆஞ்சநேயருக்கு போட வேண்டும் பிறகு ஆஞ்சநேயருக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு நெய்வேத்தியமாக வாழைப்பழம் அல்லது வெண்ணெய் இவை இரண்டில் ஏதாவது ஒன்றை வைத்தால் போதும்.

- Advertisement -

இவ்வாறு தினமும் செய்ய வேண்டும். மறுநாள் இந்த வெற்றிலை மாலையை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக வேறு வெற்றிலை மாலையை சாற்ற வேண்டும். வழிபாட்டு முறை ஒரே மாதிரி 7 நாட்களும் செய்ய வேண்டும். ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மந்திரத்தை கூற வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த மந்திரத்தை 108 முறை கூறுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முதல் நாள் மந்திரம்

ஓம் ஐம் ப்ரீம் ஹனுமதே ஸ்ரீ ராமதூதாய நமஹ

- Advertisement -

இரண்டாம் நாள் மந்திரம்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தன்னோ ஹனுமத் பிரச்சோதயாத்

மூன்றாம் நாள் மந்திரம்

ஓம் ஸ்ரீ ஹனுமந்தாய நமஹ

நான்காம் நாள் மந்திரம்

ஓம் ஸ்ரீ வக்ரதேஹாய ராம பக்தாய வாயுபுத்ராய நமோஸ்துதே

ஐந்தாம் நாள் மந்திரம்

த்வஸ்மிந் கார்ய நிர்யோகே பிரமாணம் ஹரி சட்டமால் ஹனுமான் யாத்ன மாஸ்தாய துகா க்ஷய கரோபவே

ஆறாம் நாள் மந்திரம்

ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயாய மஹாபலாய ஸ்வாஹா! ராம ப்ரிய நமஸ்துப்யம் ஹனுமான் ரஷ சர்வதா

ஏழாம் நாள் மந்திரம்

அஞ்சனி கர்ப ஸம்யூத கபீந்த்ர சசிவோத்தம ராம ப்ரியா நமஸ்துப்யம் ஹனுமான் ரக்ஷ சர்வதா

இதையும் படிக்கலாமே: மரணத்தையும் தடுக்கும் மருதாணி இலை

ஆஞ்சநேயரின் இந்த எளிமையான வழிபாட்டு முறையையும் மந்திரத்தையும் முழுமனதோடு எந்த வேண்டுதலை நினைத்து கூறினாலும் அந்த வேண்டுதலை ஆஞ்சநேயர் நிறைவேற்றுவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்