நீங்கள் அடகு வைத்த நகை, நிலம், வீட்டை சீக்கிரம் மீட்க இதை செய்யுங்கள்

adagu-kadan-bairvar

மனிதர்கள் வாழும் இந்த உலகம் பணம் எனும் செல்வ சக்தியால் இயங்குகிறது. உலகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் பணம் அவசிய தேவையாக இருக்கிறது. வெகு குறைவான மனிதர்களே செல்வந்தர்களாக இருக்கும் இந்த உலகத்தில் அதிகப்படியான மக்கள் வேலை, தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டு சராசரியான அளவில் பணம் ஈட்டுகிறார்கள். சில சமயம் அவர்களின் பல தேவைகளுக்காக தங்களுக்குரிய பொருட்களை அடகு வைத்து பணம் பெறுகின்றனர். அப்படி அடகு வைக்கப்பட்ட பொருட்களை சீக்கிரம் மீட்க பரிகார முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

money

நம் அனைவருக்குமே வாழ்வில் ஏதாவது ஒரு சமயம் பண நெருக்கடியான நிலை உண்டாகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் நமக்கு தேவையான அளவு பணம் கிடைக்க நமக்கு சொந்தமான நகை, வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை அடகு வைத்து பணம் பெறுகிறோம். இப்படி அடகு வைத்து பணம் பெற்ற பலர் தங்களின் பரம்பரை சொத்தாக இருந்த மேற்கூறிய நகை, நிலம், வீடு போன்றவற்றை மீட்க முடியாமலே போன நிலை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலை நமக்கு உண்டாகாமல் இருக்க செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு காண்போம்.

அடகு வைக்கப்பட்ட உங்களின் சொந்த வீடு, நிலம், நகைகள் போன்றவற்றை சீக்கிரம் மீட்க ஒரு வெள்ளை தாளில் அடகு கடை அல்லது வங்கியின் பெயர் அடகு எண்,அடகு வைத்த தேதி,அடகு பொருள் ஆகியவைகளை தெளிவாக எழூதி, பூஜை அறையில் காமாட்சி விளக்கேற்றி அதன் பாதத்தில் அடகு தகவல்கள் அடங்கிய அந்த காகித தாளை வைத்து வணங்கி விட்டு பிறகு பொருளின் பெயரை மட்டும் கூறி அதோடு “வர வர ஸ்வாகா” என்று 108 முறை உச்சரிக்கவும் உதாரணமாக “1பவுன் சங்கலி 1/2பவுன் கம்மல் வர வர ஸ்வாகா, 3 சென்ட் நிலம், 1 ஏக்கர் நிலம் வர வர ஸ்வாகா” என்று கூறி துதிக்க வேண்டும். இந்த பரிகார பூஜை செய்பவர் மாதத்தில் வரும் அவரின் பிறந்த நட்சத்திரம் அன்று தொடங்கி செய்து வர வேண்டும். பிறகு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6 முதல் 7 மணிக்குள் செய்ய வேண்டும். தங்களின் பிறந்த நட்சத்திரம் தெரியாதவர்கள் வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகார பூஜையை தொடங்க வேண்டும்.

Bairavar

மூன்று பௌர்ணமி தினத்தன்று நீங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் இருக்கும் பைரவர் சந்நிதியிலோ அல்லது பைரவர் கோயிலிலோ பைரவரை செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து, விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி பைரவரை மனமுருக வழிபட்டு வந்தால் உங்களின் செல்வ சேமிப்பு நிலை உயர்ந்து, கூடிய விரைவில் நீங்கள் அடகு வாய்த்த நகை, நிலம், வீடு, வாகனம் போன்ற எதையும் மீட்டு விடும் அமைப்பு ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
உத்திரம் நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Nagai adagu vaithal pariharam in Tamil. It is also called as Adagu vaithal pariharam in Tamil or Kadan theera valigal in Tamil or Bairavar valipadu in Tamil or Adagu nagai meetka pariharam in Tamil.