உத்திரம் நட்சத்திரக்காரர்கள் செல்வம், சுக வாழ்வு பெற இவற்றை செய்யுங்கள்

suriyan

பிரபஞ்ச சக்தியை தனக்குள் கொண்ட ஒரு இனமாக மனித இனம் இருக்கிறது. உலகில் பிறக்கின்ற அனைவரும் நவகிரகங்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட ராசிகள், நட்சத்திரங்களின் ஆளுகைக்குட்பட்டே பிறக்கிறார்கள். இதில் ஒரு நபர் பிறக்கின்ற நட்சத்திரம் அவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து விடயங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது அந்த வகையில் “உத்திரம்” நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் செல்வம் அதிகம் கிடைக்கப்பெறவும், சுக வாழ்க்கை வாழவும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

surya-viratham

27 நட்சத்திரங்களின் வரிசையில் பன்னிரண்டாவது நட்சத்திரமாக வருவது உத்திரம் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சூரிய பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல உடல் பலமும், உறுதியான மனமும் கொண்டிருப்பார்கள். கம்பீர தோற்றம் இருக்கும். கடுமையாக உழைத்து வாழ்வில் அனைத்திலும் வெற்றியை சுவைப்பார்கள். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் அனைத்து செல்வ சிறப்புகளையும் பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

சூரியனின் நட்சத்திரம் என்பதால் உத்திரம் நட்சத்திரகாரர்கள் வருடம் ஒருமுறை தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் சூரியனார் கோயிலுக்கு சென்று சூரிய பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், உதிக்கின்ற சூரியனை தரிசித்து வணங்கி வருவதால் வாழ்வில் அனைத்திலும் வெற்றிகளை பெறும் அமைப்பு உருவாகும். உங்களின் தந்தைக்கு மரியாதை செலுத்துதலும், வயதான காலத்தில் தந்தையை நன்கு பராமரிப்பதாலும் சூரிய பகவானின் முழுமையான அருள் உங்களுக்கு கிடைக்கும்.

suriyan

உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஏதேனும் கோயிலுக்கு சித்தரை பௌர்ணமி தினத்தன்று 6 கிலோ எடை கொண்ட கோதுமை தானியங்களை தானமாக வழங்க வேண்டும். மாதம் ஒரு முறை காராம் நிற மாட்டிற்கு ஊற வாய்த்த பச்சை பயறு தானியங்களை உணவாக உண்ண கொடுக்க வேண்டும். ஆதரவற்ற முதியோர்களுக்கு உங்களால் முடிந்த போது அன்னதானம் செய்வதால் சூரிய பகவானின் முழுமையான அருளை நீங்கள் பெற்று வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள்.

இதையும் படிக்கலாமே:
சொந்த வீடு அமைய மேற்கொள்ள வேண்டிய விரதம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Uthiram nakshatra Pariharam in Tamil. It is also called as Uthiram natchathiram in Tamil or Uthiram natchathiram athipathi in Tamil or Surya nakshatras in Tamil.